வெங்காய சட்னி

தேதி: November 5, 2009

பரிமாறும் அளவு: 4 _நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பெரிய வெங்காயம் - 3
தக்காளி - பாதி
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
நார்மல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க;
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் இரு எண்ணெயும் ஊற்றி சூடு வந்ததும், உளுத்தம்பருப்பு மற்றும் சீரகம் போட்டு பொரிந்ததும், காய்ந்தமிளகாயை சேர்க்கவும்.
நறுக்கின வெங்காயம், பூண்டும் போட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
பின்பு தக்காளியை சேர்த்து மிதமான தனலில் நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வெங்காயம் எல்லாம் சிவக்க வதங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்து உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்க்கவும்.
இது தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.


வேண்டும் என்றால் தாளிக்காமல் அப்படியே பரிமாறலாம் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அப்சரா, இந்த சட்னி செய்து பார்த்தேன். சீரகம் சேர்த்து அரைப்பதும் மிகவும் நன்றாகவே உள்ளது. இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி வின்னி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா நேற்று இரவு தோசைக்கு வெங்காய சட்னி செய்தேன்,ரெம்ப நல்லா இருந்தது,பெரிம்மாவும் இப்படிதான் செய்வாங்க ஆனால் சீரகம் சேர்த்து பார்த்தது,இல்லை.அதிசயமா கோகுல் சட்னி தொட்டு சாப்பிட்டான்..மிக்க நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு நலம் தானே?கோகுலுக்கு பிடித்திருந்ததா?அர்ஷாத்துக்கும் இந்த சட்னி மிகவும் பிடிக்கும்.இப்போதெல்லாம் நமக்கு பிடித்தது போய் குழந்தைகளுக்கு பிடித்ததைதான் அதிகம் செய்ய வேண்டி உள்ளது.செய்து பார்த்து சொன்னதற்க்கு நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

iam in dubai,new member in arusuvai sister.very testy chutney thank you sister.

ஹாய் சுதா..நலமாக இருக்கின்றீர்களா?தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றிங்க...நீங்களும் துபாய்தானா?ரொம்ப சந்தோஷம்.நானும்தான்.எந்த பக்கம் இருக்கின்றீர்கள்?உங்களுக்கு குழந்தை இருக்கின்றதா?
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

தாமதத்திற்கு மன்னிக்கவும் அப்சரா
(அப்படி அழைக்கலாம்தானா )நான் ousais,( near dubai womens collage ) இருக்கேன்.நீங்க எங்க இருக்கிங்க,எனக்கு மிகவும் சந்தோஷம்.குழந்தைகள் எப்படி இருக்கங்க?எனக்கு கல்யாணம் ஆகி 2வருடம் முடிந்து விட்டது.குழந்தை இல்லை.காத்திருக்கிறோம்.நன்றி அக்கா.sorry akka

சுதா நலமா?எதற்க்கு மன்னிப்பு எல்லாம் கேட்குறீங்க..?மனசுக்கு கஷ்டமாக இருக்கு.அவரவர் நேரம் பொருத்து தானே இதில் உட்கார முடியும்.
ousais தானா...! நானும் அந்த பக்கம் தாங்க இருக்கேன்.சஹாரா சென்ட்டர் இருக்குல்ல..,அதன் அருகில் வருசைய்யா பிள்டிங் இருக்கும்.அங்கே எப்கோ பெட்ரோல் பாங்க்_கும் இருக்கும்.அதற்க்கும் முன்னாடியில் உள்ள பிள்டிங்_லதான் இருக்கேன்.(பக்கத்தில்தான் இருக்கோம் என்று நினைக்கிறேன்.)
அப்புறம்,பேரை சொல்லியே அழைக்கலாம்.தவறில்லை.தோழிகளுக்குள் என்ன இருக்கின்றது.சரிதானே...?நேரம் இருப்பின் விரும்பினால் மெயில் ஐ.டி.தாருங்கள்.மற்ற விபரங்களை அதில் பேசிக் கொள்ளலாம்.மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நலமா? குழந்தை எப்படி இருக்காங்க?நான் துபாய் வந்து 6மாதம்தான் ஆகிறது.பல இடங்கள் எனக்கு தெரியாது.சஹாரா சென்ட்டரலய ரொம்ப சந்தோஷம் அப்சரா .2முறை அந்த பெட்ரோல் பங் வந்து இருக்கான்.ஆனால் இப்ப அவர் ரொம்ப பிஸி,வேளியே எங்கும் செல்வதில்லை.எனது மெய்ல் ஐ.டி msudhasuresh@gmail .com .மீண்டும் சந்திப்போம்.

வழ்க வளமுடன்

அப்சரா... தோசைக்கு நல்லா இருந்தது. தாளிக்காம தான் செய்தாங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா