பாடல்களின் முழு வரிகள் தெரிந்தால் சொல்லுங்களேன்.

கீழே உள்ள பாடல்களின் முழு வரிகள் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே....

#மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
#நிலாவே வா செல்லாதே வா
#இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி
#வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
#நேற்று இல்லாத மாற்றம் என்னது
#இரு விழி உனதே இமைகளும் உனதே
#கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
#அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது
#ஏன் பெண்ணென்று பிறந்தாய்
#காதலென்னும் தேர்வெழுதி
#புவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
#உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
#பூவே செம்பூவே உன் வாசம்
#மண்ணில் இந்த காதலன்றி
#எங்கே எனது கவிதை கனவில் எழுதி
#ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
#சின்ன சின்ன ஆசை
#நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
#அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
#காதல் வந்தால் சொல்லி அனுப்பு
#இது தானா இது தானா எதிர்பார்த்த அந்நாளும்
#அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல
#செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
#கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
#காதலின் தீபமொன்று ஏற்றினாளே
#கண்ணே கலைமானே
#ஆடியில செய்தி சொல்லி

பானு ஜேக்கப்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

(மன்றம் வந்த)

தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

(மன்றம் வந்த)

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

சின்ன சின்ன ஆசை..சிறகடிக்கும் ஆசை!
முத்து முத்து ஆசை..முடிந்து விட்ட ஆசை!
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை..
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை!
(சின்ன சின்ன ஆசை)

மல்லிகைப்பூவாய் மாறி விட ஆசை!
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை!
மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை!
சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை!
கார் குழலில் உலகைக் கட்டி விட ஆசை!

சேற்று வயலாடி நாற்று நட ஆசை!
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை!
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை!
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை!
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை!!!
(சின்ன சின்ன ஆசை)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்

காவேரியா கானல் நீரா பெண்மை எது உண்மை
முள்வேலியா முல்லைப் பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன தேனே
ஒரேயொரு பார்வை தந்தாலென்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே
(நிலாவே வா செல்லாதே வா...)

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..
(நேற்று..)

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை
(நேற்று..)

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?
(நேற்று..)

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று என்காதில் ஏதோ சொன்னது...
இதுதான் காதல் என்பதா?
இளமை பொங்கி விட்டதா?
இதயம் சிந்தி விட்டதா?...சொல் மனமே!!
[ரிபீட்..:)]

கடவுள் இல்லை என்றேன், தாயைக் காணும் வரை...
கனவு இல்லை என்றேன், ஆசை தோன்றும் வரை...
காதல் பொய்யென்று சொன்னேன், உன்னைக் காணும் வரை!
கவிதை வரியின் சுவை..அர்த்தம் புரியும் வரை..
கங்கை நதியின் சுவை..கடலைச் சேரும் வரை..
காதல் சுவையொன்றுதானே காற்று வீசும் வரை!
[ரிபீட் த பர்ஸ்ட் பைவ் லைன்ஸ் & பர்ஸ்ட் டு லைன்ஸ் அகைன்.. :)]

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்!
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்!
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா?
வாசம் இல்லாமலே வண்ணப் பூ பூக்கலாம்!
வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம்!
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?
[ரிபீட் த பர்ஸ்ட் பைவ் லைன்ஸ் டு டைம்ஸ்!... :) ]

கலக்கறீங்கோ லஷ்மீ..சரி,சரி..கேரி ஆன்!!
ஒரே ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..வரிகளின் இடையே அங்கங்கே கேள்விக்குறி,கால்புள்ளி:), அரைப்புள்ளி, ஆச்சர்யக் குறி இவற்றையும் சேர்த்துப் போடுங்களேன்! :):) .

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

http://tamilmp3songslyrics.com/

இந்த லிங்க் பாருங்க, உங்களுக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறேன், இதுல பாடல் வரிகள் எல்லாமே இமேஜ் ஃபைல்லா இருக்கு அதனால என்னால பேஸ்ட் பண்ண முடியல...

உங்களுக்கு நிறைய பாட்டுக்கு வரிகள் கிடைக்கும்...

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்.
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்.

கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்

இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்.
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்.
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே...
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே..

உன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக்கொண்டே
சென்று நான் சேரவேண்டும்.

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்