சமைத்து அசத்தலாம் பகுதி - 23, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -22, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -23 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், இன்று திங்கட் கிழமை(09/11) ,பானு கனி 16
appufar 16 .... இப்படியே தொடங்கி முடிவில் இருக்கும் pgatkknagar 1 வரை செய்யவேண்டும்.

(இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 (arusuvai.com/tamil/forum/no/
10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை அனைவரின் குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (17/11) முடிவடையும். புதன்கிழமை(18/11), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

நவம்பர் 09, 2009 - 8:20pm - வழங்கியவர் அதிரா

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

இத்தலைப்பில் கலந்து கொண்டவர்கள் இலா, இமா, ரேணுகா, வின்னி, ஹைஷ் அண்ணன், ஸ்ரீ, வத்சலா, ராணி, அம்முலு, சீதாக்கா, லஷ்மிசங்கர், லாவன்யாமூர்த்தி, கவிசிவா, ஜலிலாக்கா, சுவர்ணா, துஷ்யந்தி, ஆசியா, மாலி, வனிதா, விஜி, திருமதி.ஹுசைன் அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

இன்று திங்கட்கிழமை(09/11) சமைக்கத் தொடங்குவோம், நிறைய சமைத்து, அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

பானுகனி - 16லிருந்து sujiramana 1 வரை செய்ய வேனும்,

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நவம்பர் 09, 2009 - 8:21pm - வழங்கியவர் அதிரா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பானு கனி - http://www.arusuvai.com/tamil/experts/799
ஃபிரிட்ஜ் கேக்
சுரைக்காய் தூவல்
ஆனியன் முட்டை மசாலா
முட்டை குருமா
பூசணிக்காய் பொரியல்
பூசணிக்காய் கருவாடு பிரட்டல்
மாதுளை பழ பச்சடி
சாக்லேட் சிரப்
காரட் கீர்
வெஜ் ரோல்
ஆட்டு கறி குழம்பு
மல்டி பர்பஸ் கறி மசாலா பொடி
பேபி கார்ன் மஞ்சுரியன்
கோல்ட் காயின்
ரெட் மட்டன் மசாலா
சுலப கேரட் அல்வா

appufar - http://www.arusuvai.com/tamil/experts/8234

கருணைக்கிழங்கு பொரியல்
வெங்கயசட்னி
சன்னா தால் ஃப்ரை
வட்டிலாப்பம் கஞ்சி
மாதுளை மிக்ஸ்டு ஜுஸ்
ஆட்டு கால் வித் சன்னா குழம்பு
சாதம் வடை
மட்டன் கடாய் வறுவல்
பீட்ரூட் துவையல்
பேரிச்சம் பழ பச்சடி
நண்டு,முருங்கக்காய் பிரட்டல்
வெங்காய அரிசி அடை
கடாய் சிக்கன்
வாழை பழ அப்பம்
தேங்காய் லாடு
சன்னா மசாலா

mahisri - http://www.arusuvai.com/tamil/experts/6508
மைதா இட்லி
ஈஸி சிக்கன் ஃபிரை (less oil)
சில்லி சப்பாத்தி
ஆலு டொமேட்டோ சப்ஜி
பிளைன் இட்லி சாம்பார்
எக் டொமேட்டோ சப்ஜி
ரிச் மசூர் டால்
பிஃஷ் சமோசா
சிக்கன் ஆம்லெட்
பிஃஷ் கறி
ராஜ்மா கேரட் கறி
புளிச்சட்னி
முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு
மீன் மசாலா குருமா
தேங்காய் பால் பாசிபருப்பு சாதம்

janu - http://www.arusuvai.com/tamil/experts/2284
காபூல் ரைஸ்
நெத்திலி பக்கோடா
மட்டன் நவாபி
சில்லி சம்பால்
ஸ்டஃப்ட் குடமிளகாய்
சிம்ப்பிள் பிரியாணி
சில்லி ஃபிஷ் ஸ்டெவ்
ஹதீம் கஞ்சி
ரைஸ் பக்கோடா
கொடுவா கருவாடு ரசம்
மிர்ச்சி பூரி
பைனாப்பிள் சிக்கன்
ஹாரும் மானிஸ்
மட்டன் மைசூர்
ஜெல்லி ஜவ்வரிசி சர்பத்

suganyaprakash – http://www.arusuvai.com/tamil/experts/1441
ஈஸி உருளை மசாலா
சிம்பிள் தேங்காய் ரைஸ்
தேங்காய்பால் சாதம்
உப்பு உருண்டை
குழம்பு பொடி
புடலங்காய் புட்டு
கார துவையல்
2mins ஆப்பிள் ஜூஸ்
அண்டா புர்ஜி
இட்லிபொடி
பொங்கலம்
ஆட்டுக்கால் பாயா
சிக்கன் 65
ஃப்ரைடு இட்லி
உளுந்து வடை

santhoshisriram - http://www.arusuvai.com/tamil/experts/37
கத்தரிக்காய் புளிக்குழம்பு
பொரிச்ச குழம்பு
பூண்டு ரசம்
பாசிப்பருப்பு சாம்பார்
புளிக்குழம்பு
புடலங்காய் கூட்டு
உருளைக்கிழங்கு பரோட்டா (ஆலு பரோட்டா)
பிஸிபேளாபாத்
தக்காளி சூப்
சாம்பார் சாதம்
பாவ்பாஜி மசாலா
காய்கறி கட்லெட்
பிரைட் ரைஸ்
சுண்டைக்காய் குழம்பு

kanthimathi - http://www.arusuvai.com/tamil/experts/20163
தேங்காய் மிளகு சட்னி
முழு கோழி பொரியல்
பீட்ரூட் சப்பாத்தி
அவல் உப்புமா
இறால் ஸ்பெஷல் மசாலா
புடலங்காய் வதக்கிச்செய்யும் கறி
வெள்ளை முள்ளங்கி பச்சடி
கசப்பில்லாத பாகற்காய் பொடிமாஸ்
சிந்தாதி சிக்கன் குருமா
காளான் மசாலா
பாதாம் சூப்
அசாது குழம்பு
கல்டாக் கறி குழம்பு
முக்கனி பர்பி

அன்னுராஜ் - http://www.arusuvai.com/tamil/experts/6635
அறு வடை
பொங்கல் சாதம்
இட்லி அடை
சத்து சாதம்
வேர்க்கடலை தோசை
ஸ்வீட் சீயாளம்
பச்ச புளி துவையல்
பச்ச புளி தொக்கு
ருசியான சாம்பார்
வேர்க்கடலைப் பொடி
சைனு
வானவில் கீர்

Vijaya Amarnath- http://www.arusuvai.com/tamil/experts/1369
நாவில் ஊறும் முந்திரி பக்கோடா
அரைத்து விட்ட சாம்பார்
பருப்பு துவையல்
பச்சை பயிறு கிரெவி
பிஸிபேளா பாத்
நெய் மைசூர் பாக்
வெல்ல சீடை
மாங்காய் துவையல்
மோர்குழம்பு கோவ்தா
திருவாதிரை களி
பீன்ஸ் பருப்பு உசிலி
மிளகு குழம்பு

செல்லி - http://www.arusuvai.com/tamil/experts/1722
கத்தரிக்காய் பொரித்தசம்பல்.
நட்சத்திர பிஸ்க்கட்
வாழைப்பழம் இல்லாத வாய்ப்பன்
ஆப்பில் கேக்.
இறால் ,மரக்கறி உப்பு மா.
தொதல்
சொக்லெட் புட்டிங்
வனிலா ஐஸ் கிரீம்.
தட்டை வடை.(பருத்துறை வடை)
பால் இனிப்பு (milk toffee).
அரியதரம்.
அரிசிமா வாய்ப்பன். (இது (srilankan )இலங்கைச் சிற்றுண்டி.

Chillu -- http://www.arusuvai.com/tamil/experts/2291
உருளைகிழங்கு லாலிபாப்ஸ்
சாபுதானா/ஜவ்வரிசி உப்புமா
மீன் குழம்பு
இட்லி சாம்பார்
கோழி குருமா
குட்டி ரவா தோசை
கானாடுகாத்தான் கோழிக்குழம்பு
கோலா உருண்டை குழம்பு
மட்டன் பிரியாணி
தேங்காய்பால் சாதம்

RSMV - http://www.arusuvai.com/tamil/experts/4531
தக்காளி சட்னி - ஈசி முறை
உருளைகிழங்கு ரைத்தா
ரவா தோசை
பீர்க்கங்காய் சைடு டிஷ்
பாம்பே சட்னி
வெண்டைக்காய் பொரியல்
ஈசி மைதா வடை
தக்காளி ரசம்
ரசப்பொடி
பீர்கங்காய் தோல் துவையல் (தேங்காய் சேர்த்தது

gowrisuresh - http://www.arusuvai.com/tamil/experts/2006
பாகற்காய் ஜுஸ் ,பாகற்காய் பச்சடி
கத்தரிக்காய் மசால்
மைக்ரோவேவ் சக்கரைவள்ளி கிழங்கு அல்வா
சூஜி ஸீரா
கொள்ளு துவையல்
கொள்ளு பருப்பு கடைச்சல்
தக்காளி மசால்
சுரைக்காய் தோசை

Hemalatha Raju – http://www.arusuvai.com/tamil/experts/6222
முட்டை மசாலா
ஈசி சிக்கன் பிரியாணி
சுறா புட்டு
வேர்க்கடலை சாட்
மீன் சூப்
இறால் வறுவல்
சிக்கன் ஃப்ரை
தயிர் சிக்கன்

ANITHASHANTHI - http://www.arusuvai.com/tamil/experts/2680
ராஜ்மா கிரேவி
மஷ்ரூம் குருமா
மசித்த உருளை (Mashed potato)
மைக்ரோவேவ் பாஸ்தா சூப்
ஈ.சி கீரை கூட்டு
வெங்காய ரசம்
பச்சை பயிறு மசாலா
ஈ.சி. முட்டை ஃப்ரைடு ரைஸ்

UTHAMI - http://www.arusuvai.com/tamil/experts/16834
ப்ரெட் புலாவ்
தேங்காய்ப் பால்
அரிசி பருப்பு சாதம் கோவை ஸ்பெசல்
ஆப்பம்
புரோக்கலி பஜ்ஜி
வெஜிடபுள் தோசை
சுலப மற்றும் சுவையான தேங்காய் பர்ஃபி

SRIVANI ANANDHAN - http://www.arusuvai.com/tamil/experts/1678
குடைமிளகாய் சிக்கன் பிரட்டல்
பாகற்காய் பச்சடி
சப்பாத்தி உப்புமா
ப்ரூட்டி வெஜ் சாலட்
புதினா சாதம்

ranjanimadhan – http://www.arusuvai.com/tamil/experts/928
முருங்கைக்காய் பொரியல்
சௌசௌ பச்சடி
பூண்டு குழம்பு
சௌராஸ்டிரா குழம்பு பொடி (அவுன்டி புற்கொ)
தேங்காய்பால் குழம்பு

PadmaPriya Suresh - http://www.arusuvai.com/tamil/experts/15422
பருப்பு ரசம்
உருளைக்கிழங்கு பிரியாணி
பட்டர் சிக்கன்
தேங்காய்ப்பால் வெள்ளை பூசணி குழம்பு

KavithaKannan - http://www.arusuvai.com/tamil/experts/3557
மிளகு சாதம்
பனீர் பட்டர் மசாலா
வெங்காய சட்டினி - 3
மஷ்ரூம் மஞ்சூரியன்

Suganya - http://www.arusuvai.com/tamil/experts/2203
ரைஸ் தோசை
மஷ்ரூம் மிளகு கறி
அவல் வடை

g.anusha- http://www.arusuvai.com/tamil/experts/19293
பனனா வித் ஐஸ்க்றீம்
ப்ரோக்கோலி கீறீம் சூப் (குழந்தைகளுக்கு)
பீனட் பட்டர் குக்கீஸ்

nasreengani - http://www.arusuvai.com/tamil/experts/19978
கத்திரிக்காய் ஊறுகாய்
கேரட் முட்டை புரிஜி
முட்டை கறி

lakshmisri - http://www.arusuvai.com/tamil/experts/18422
சென்னா மசாலா:
முலாம்பழம் ஜூஸ்
இனிப்பு அப்பம்:

LathaHaish126 - http://www.arusuvai.com/tamil/experts/19054
கொள்ளு குருமா
ராஜ்மா
ஆவாரம் பூ கூட்டு

mareeswaran - http://www.arusuvai.com/tamil/experts/3428
கேரட் & பீன்ஸ் பொரியல்
கோழிக்கறி குழம்பு
புளியோதரை

radika - http://www.arusuvai.com/tamil/experts/4055
முருங்கைக்காய் ஊறுகாய்
கொள்ளு ரசம்
கத்திரிக்காய் பஜ்ஜி

sangitha - http://www.arusuvai.com/tamil/experts/7180
உருளைக்கிழங்கு குருமா
காலிஃப்ளவர் சில்லி
தக்காளி ஜீரக சட்னி

Gowrimeena - http://www.arusuvai.com/tamil/experts/7416
ஈசி மோர்குழம்பு
பாசிபயறு லட்டு
அரிசி கொழுக்கட்டை

psplatha - http://www.arusuvai.com/tamil/experts/3490
உருளைக்கிழங்கு சாலட் தொக்கு
ஊறுகாய் சாண்ட்விச்

Thendraljasmine - http://www.arusuvai.com/tamil/experts/9225
கரட் மஃபின்
சுண்டங்கத்தரிக்காய் வற்றல் குழம்பு

sundhari78 - http://www.arusuvai.com/tamil/experts/1694
கோதுமை ரவை கஞ்சி
பீட்ரூட் ஜாம்

radhika_padma - http://www.arusuvai.com/tamil/experts/15711
ஓட்ஸ் வாழைப்பழ ஊத்தப்பம்
கொத்தவரங்காய் புளி குழம்பு: (3- நபர்களுக்கு)

shariz15 - http://www.arusuvai.com/tamil/experts/7497
ஹரிதா
ஈஸி ஜிகர்தண்டா

fajeela farveen - http://www.arusuvai.com/tamil/experts/15866
ஈசி & டேஸ்டி எக் ரைஸ்
ஸ்வீட் சிக்கன் பிரட்டல்

maggie - http://www.arusuvai.com/tamil/experts/1759
பிட்சா
கீரை பக்கோடா

Shardha - http://www.arusuvai.com/tamil/experts/7649
கடலைமாவு சாம்பார்
Ginger Garlic Paste

suthajeyabalamurali - http://www.arusuvai.com/tamil/experts/3363
சென்னா புலாவ்
பிரட் ஜாமூன்

Marusha -http://www.arusuvai.com/tamil/experts/10098
முட்டைமா
பழகேசரி

anjali73 - http://www.arusuvai.com/tamil/experts/6842
இறால் ஸ்பெஷல் கிரேவி
பாகற்காய் புளிக்குழம்பு

rabiasarfudin - http://www.arusuvai.com/tamil/experts/13053
சத்து அடை
இஞ்சிசட்னி

snowwhite - http://www.arusuvai.com/tamil/experts/15870
தேன் பூண்டு சுவையுடைய சிக்கின் விங்ஸ்

AMBIGA DEVI - http://www.arusuvai.com/tamil/experts/7674
மரவள்ளிக் கிழங்கு உருண்டை

sheira - http://www.arusuvai.com/tamil/experts/18345
நாஞ்சில் மீன் குழம்பு

pgatkknagar - http://www.arusuvai.com/tamil/experts/20241
அரிசி கிச்சடி

moufiamahdhi - http://www.arusuvai.com/tamil/experts/16174
ப‌ருத்திப் பால்

fathima subair - http://www.arusuvai.com/tamil/experts/18952
சுக்கா பொடி

sujiramana - http://www.arusuvai.com/tamil/experts/5089
கோவைக்காய் வறுவல்

anisa - http://www.arusuvai.com/tamil/experts/7165
ரசமலாய்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா அக்கா இன்று முதல் ஆளாய் உங்க ட்ரெயினில் ஏறிவிட்டேன், என் கணக்கு அனிஷாவின் ரசமலாய் அப்புரமா வந்து மத்ததை சொல்லுகிரேன்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

அய்யோ ட்ரெயின் இப்படி தூங்குதே:(( இது நல்லாவே இல்லை,

தூங்குமட்டுமா செய்யூது ட்ரெயின்,தலைப்பும் உள்ளே போகுதே,எல்லாரும்
எங்க போனிங்க ?இன்னும் போன வார அழுப்பே தீரவில்லையா?

தோழிகள் அனைவரும் வாங்க,மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது,:)

எல்லோரும்க்கும் ஒரு பரிசு பொருள் காத்து இருக்கு:)

பிரியா நலமா?முதல் ஆளாய் வந்துட்டீங்க,மிக்க நன்றி ஒன்றோடு இல்லாமல்முடியும் போது சமைத்து சொல்லுங்க, மிக்க நன்றி

என் கணக்கு கேரட் முட்டை புரிஜி (நஸ்ரின் கனி)
பூண்டு ரசம் (சந்தோஷி ஸ்ரீராம்)

எல்லாரும் ஓடி வாங்க டீ போட்டு விட்டேன்:)

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா கவலை வேண்டாம், முன்று நாளா சரியா வே ஓப்பன் ஆகல.

நான் வந்து முடிந்ததை செய்கிறேன்.

பானு கனி = ஆனியன் முட்டை மசாலா

இந்த தடவை நிறைய பேஉருடையது ரொம்ப குழப்பம், கொஞ்சம் இன்னும் ஒரு வாரம் கூட விடுங்கள்.

யாருக்கு முடியுதோ வந்து சமைப்பார்கள்.

Jaleelakamal

ரேணு தனியாவா இருக்கீங்க?? நலமா?? என் கணக்கில லதா ஹைஷ் அவர்களின் "கொள்ளு குருமா" சேத்துக்கோங்க.... என்ன ஒரு சுவை... வழமையான பருப்பு/ரசம்/துவையலுக்கு சரியான போட்டி இது... "டீ" ரொம்ப நல்லா இருக்கு.. இந்த வாரம் கொஞ்சம் வர முடியும்... முடியும் போது வருகிறேன் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எல்லோரும் நல்ல பிள்ளை போல் சமைத்து கொண்டு வாங்கோ,அசத்தல் பரிசு காத்திருக்கு,,

ஜலிலா அக்கா வாங்க,எனக்கும் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு,ஆனாலும் விடுவதாக
இல்லை

அக்கா அதிகம் பேருடைய குறிப்பு குழப்பம் வரும் என்றே நான் மேலே வரிசை படுத்தினேன்
இங்க சமைக்க பெயர் பாருங்கள் தேர்வு செய்து கொண்டு கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்பை எடுங்கள்,இது வசதியாக இருக்கும்,எப்பொழுதும் நாட்கள் நீடித்தது இல்லை,இம் முடிவு என் கையில் இல்லை அதிரா வந்தால் பார்க்கலாம்,:)

அக்கா யாருக்கு முடியுதோ சமைப்பாங்க,அதுக்காக கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா
எல்லோரையும் வீட்டுக்கு விருந்துக்கு தான் அழைக்க முடியல,:( இங்க கூப்பிட்டாவது
சந்தோசம் பட்டுகிறேனே:)

இலா நான் நலமே,நீங்க நலமா?தனியா தான் இருக்கிறேன் இலா , வீட்டில் கூட10 நாளா தனியா தான் இருக்கேன்,இலா உங்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் கோவிக்காதீங்க லேட்ட சொன்னதுக்கும்,இங்க சொன்னதுக்கும்,இன்று காலை தலைப்பு பார்த்தேன் பதிவு போட முடியல,எரர் வந்திட்டது,நானும் போராடி தோத்து போயி போயிட்டேன்:)

வாங்க இலா நீங்க வந்தால் மகிழ்ச்சியே,அதிரா இல்லாத குறைய தீருங்க.,

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணு,
நலமா? இரண்டாவது வாரமாக தனியாளா நின்று எல்லோரையும் செய்ய ஊக்கப்படுத்தறீங்க! கவலையே படாதீங்க, நாங்க இருக்கோம்! :)
ரேணு, நீங்க எல்லோருடைய குறிப்புகளையும் அழகா பட்டியல் போட்டு கொடுத்திருப்பது ரொம்ப உபயோகமா இருக்கு. நன்றி!

இந்த முறை தொடக்கம்...
தக்காளி ரசம் (RSMV), முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு (மஹிஸ்ரீ)
இரண்டுமே நல்ல சுவை. மீண்டும் நாளை வருகிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ரேணுகா நலமா? இப்பொழுது தனியாக ரெயின் ஓட்ட நன்றாகப் பழகியிருகிறீர்கள் போலும். ஒரே சீராக ஓடுகிறது போல் தெரிகிறது.
இம்முறை நிறைய சமைக்கலாம் என நினைக்கிறேன்.
இன்று sheira குறிப்பில் இருந்து நாஞ்சில் மீன் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நான் நலமே ஸ்ரீ,நீங்க எப்படி இருக்கீங்க,?வீட்டில் அனைவரும் நலமா?நீங்கள் எல்லாரும் இருக்கும் தைரியத்தில் தானே டிரெயின் ஓடுது,
இதே போல இன்னும் சமைத்து கொண்டு வாங்க
ஸ்ரீ இப்ப அங்க என்ன மணி

வத்சலா,நலமா?நான் நலம் தான்..நல்லா ஓட்டுறேனா,?கேட்க சந்தோசமா இருக்கு,ஆனால்
அதிரா இல்லாமல் கஷ்டமாவும் இருக்கு,நிறைய சமைக்க போறதா சொல்லிட்டீங்க வாங்க காத்துகிட்டு இருக்கேன்...

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்