தேதி: November 10, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கருணைக்கிழங்கு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கருணைக்கிழங்கை நன்கு தோல் சீவி மண் வாசனைப் போக கழுவி விடவும். பிறகு கிழங்கை குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.

வெந்த கிழங்கை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு மசாலாத்தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.

அதில் நறுக்கி வைத்திருக்கும் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் அப்படியே விடவும். (இடையில் ஒரு முறை கிளறி விடவும்).

கிழங்கு பொன்னிறமாக மாறியதும் வறுத்து பொடித்த தூளை தூவி பிரட்டி விட்டு, உப்பு சரிப்பார்த்து விட்டு அடுப்பிலேயே ஐந்து நிமிடம் வைத்திருக்கவும்.

நன்கு உதிரியாக சிவந்து வரும். அதன் பிறகு கிழங்கை இறக்கி வைத்து விடவும். இன்னும் மொறுகலாக வேண்டுமானால் மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் கூடுதல் நேரம் வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது சுவையான கருணைக்கிழங்கு பொரியல் தயார். இந்த கருணைக்கிழங்கு பொரியல் குறிப்பினை <b>திருமதி. அப்சரா</b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்

இந்த பொரியல் சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். கிழங்கை புதிதாக வாங்கியவுடனே சமைத்தால்தான் அரிக்கும். நான்கு, ஐந்து நாட்கள் காற்றோட்டமாக போட்டு விட்டு பின்பு சமைத்தால் அரிக்காது.
Comments
அப்சரா, அழகா இருக்கு பொரியல்!
அப்சரா,
கருணைக்கிழங்கு பொரியல் பார்க்கவே பளிச்னு, ரொம்ப அழகா இருக்கு!. வாழ்த்துக்கள்! இந்த கிழங்கில் வழக்கமா பொரியல் செய்வதுண்டு, ஆனால் இப்படி வறுத்து, பொடித்துபோட்டு செய்தது இல்லை. அடுத்தமுறை உங்க மெத்தடில் செய்து பார்த்திடவேண்டியதுதான்.நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஹாய்
என்னகு இது ரொம்ப பிடிக்கும்.அனால் இங்கு அமெரிக்காவில் இது கிடைக்குமா?frozen என்றல் என்ன பெயரில் கிடைக்கும்?
Anbe Sivam
Anbe Sivam
அப்சரா
பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. கருணைக்கிழங்கு கிடைத்ததும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று முடிவே செய்து விட்டேன்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
சுஸ்ரீ,சுடர்,கவி..,
சுஸ்ரீ,சுடர்,கவி,எப்படி இருக்கீங்க?தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
சுடர்..,சாரிங்க...எனக்கு இந்த கிழங்கு ஃப்ரோசனில் இருக்கின்றதா என தெரிய வில்லை.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
ஹாய் அப்சரா நல்லா
ஹாய் அப்சரா
நல்லா இருக்கிங்களா,பார்க்கவே சூப்பரா இருக்கு..... நான் நேற்றுதான் லுலுவில் வாங்கி வந்தேன்...எனக்கு ஒரு டவுட்.கிழங்கு fridgeல் வைக்ககூடாதா நான் நேற்று வாங்கியதால் வெளியே எத்தனை நாள் வைத்து சமைக்கவேண்டும்?.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL
ரிஸ்வானா
ரிஸ்வானா எப்பைட் இருக்கீங்க..?
உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி மா...
இல்லை இந்த கிழங்கை ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்.
காற்றோட்டமாக ஒரு நான்கு நாள் வைத்தீர்களேயானால்,அது தொண்டையை அரிக்காது.சாப்பிட நன்றாக இருக்கும்.நேற்று வாங்கி இருப்பதால் நீங்கள் இன்னும் இரண்டு நாளில் சமைத்து விடுங்கள்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
hi apsara seituvitten
hi apsara
seituvitten kilanku.super ponga.aduvum sambarudan super combination.sorry for typing in english.konjum ponnu kuda busy adanal thaan tamilil type adikka mudiyavillai.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL
நன்றி ரிஸ்வானா
ரிஸ்வானா.......எப்படி இருக்கீங்க?
அண்ணன் மற்றும் மகள் நலமா..?
மகளுக்கு உடம்பு எப்படி இருக்கின்றது?சரியாகி விட்டதா?
செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்க்கு மிகவும் நன்றிமா..
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்சரா
இன்று இதை செய்தோம்... வழக்கம் போல் ரொம்ப அருமையா இருந்தது அப்சரா. :) மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா