உல்லன் பொம்மை

தேதி: November 11, 2009

5
Average: 4.4 (9 votes)

இந்த உல்லன் பொம்மை செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 

சிவப்புநிற உல்லன் நூல் - ஒரு கண்டு + 1/2 கண்டு
சந்தனநிற உல்லன் நூல் (sandal) - ஒரு கண்டு + 3/4 கண்டு
கண் - 2
ஊசி (பெரியது)
அரைஅடி ஸ்கேல் (scale)
சிவப்புநிற ரிப்பன் லேஸ்

 

உல்லன் பொம்மை செய்வதற்கு மேற்சொன்ன பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
சந்தனநிற உல்லன் நூலை எடுத்துக் கொண்டு அரைஅடி ஸ்கேலின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையை சுற்றி வந்து ஆரம்பித்த இடத்தில் வைத்து நூல் நழுவி வந்துவிடாதவாறு முடிச்சு போட்டுக் கொள்ளவும். (சந்தனநிற உல்லன் நூல் முகம் செய்வதற்கு முக்கால் கண்டும், உடல் பகுதி செய்வதற்கு ஒரு கண்டும் தேவைப்படும்.)
முடிச்சுப்போட்ட இடத்திலிருந்து மூன்று செ.மீ அளவிற்கு இடைவெளிவிட்டு நூலை சுற்றி கொண்டே வரவும். நூலை சுற்றும் பொழுது ஒரே இடத்தில் வைத்து சுற்றாமல் சீராக சுற்ற வேண்டும்.
கடைசி பகுதியிலும் மூன்று செ.மீ இடைவெளிவிட்டு முழு நூல்கண்டையும் ஸ்கேலில் சுற்றி முடிக்கவும். பிறகு சுற்றிய ஏதாவது ஒரு நூலில், முடிந்த நூலைக் கொண்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
பிறகு ஆரம்பத்தில் இரண்டு முனைகளிலும் சுற்றியிருக்கும் நூலை கழற்றி கட்டைவிரலிலும், ஆள்காட்டிவிரலிலும் மாட்டிக்கொண்டு, ஏதாவது ஒருப்பக்கத்தின் வழியாக ஸ்கேலை உருவி எடுக்கவும். அந்த இரண்டு நூலையும் சேர்த்து நன்கு இறுக்கமாக மூன்று முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். முகம் செய்வதற்காக உள்ள முக்கால் கண்டு நூலிலும் இதேப் போல் செய்து வைத்துக் கொள்ளவும்.
சிவப்புநிற உல்லன் நூலின் ஒரு கண்டில் பாதிபாகம் இரண்டு காது செய்வதற்கும், முழு கண்டில் இரண்டு கால்கள் செய்வதற்கும் எடுத்துக் கொண்டு மேற்சொன்ன முறையில் சுற்றி வைக்கவும். சுற்றும்பொழுது இரண்டு கைகளும், இரண்டு கால்களும் ஒரே அளவில் இருக்கும்படி சுற்றி கொள்ளவும்.
சுற்றிய ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து முடிச்சுப் போட்டிருக்கும் இடத்தில் கத்திரிக்கோலை வைத்து நடுவில் நறுக்கி கொண்டே வரவும்.
நறுக்கியதும் பந்து போல் இருக்கும் உல்லன் நூலின் சுற்றிலும் இருக்கும் தேவையற்ற நூலை வெட்டி விட்டு நன்கு அழகான வடிவமான பந்தாக ஆக்கவும்.
சுற்றி வைத்திருக்கும் ஒவ்வொரு உல்லன்நூல் பாகத்தையும் இதைப் போல் தயார் செய்து வைத்து கொள்ளவும்.
ஊசியில் உல்லன் நூலைக் தேவையான அளவிற்கு இரட்டையாக கோர்த்துக் அடியில் முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். முதலில் உடல் பாகத்தை வைத்துக் அதன் மேல் தலைப்பகுதியை வைத்து அடிவழியாக ஊசியை விட்டு மேல் வழியாக எடுக்கவும்.
மீண்டும் அதே ஊசியால் மேல் வழியாக சிறிது இடைவெளிவிட்டு அடிவழியாக இழுக்கவும்.
அடிவழியாக எடுத்த ஊசியை உடல் பகுதியின் இடது பக்கத்தில் ஒரு கால்பகுதியை வைத்து கோர்க்கவும். சிறிது இடைவெளி விட்டு தைத்து அந்த ஊசியை உடல்பகுதி உள்ளே விட்டு வலது பக்கம் வழியாக எடுக்கவும். மற்றொரு காலை இதேப் போல் கோர்த்து சற்று இடைவெளி விட்டு தைத்து ஊசியை பின்பக்கம் வழியாக எடுக்கவும்.
அதே பக்கத்தின் வழியாக ஊசியை மேல்பக்கம் கொண்டு வந்து, தலைப்பகுதியின் இடதுப்பக்கத்தில் ஒரு காதை வைத்து தைக்கவும். அந்த ஊசியை தலைப்பகுதி வழியாக வலதுப்பக்கம் கொண்டு வந்து மற்றொரு காதை வைத்து தைத்து முடிக்கவும்.
முடிக்கும்போது பின் வழியாக நூலை கொண்டு வந்து பொம்மையின் கழுத்தை ஒருமுறை சுற்றி விட்டு முடிச்சுப் போடவும்.
ஒரு சின்ன ஸ்கேல் அளவுள்ள லேஸை எடுத்து அதன் இருமுனைகளிலும் '' v '' வடிவில் நறுக்கிக் கொள்ளவும். அதை பொம்மை கழுத்தின் முன்பக்கத்தில் '' v '' வடிவம் வரும்படி சுற்றி வைத்து நடுவில் குண்டுசியை குத்தி விடவும். பெவிக்கால் கொண்டு பொம்மையின் கண்களை ஒட்டிக் கொள்ளவும். பொம்மையின் கண்கள் இல்லாவிட்டால் ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி கண், மூக்கு, வாய் என்று ஒட்டி விடவும். மிகவும் சுலபமாக செய்யக்கூடிய அழகிய உல்லன் பொம்மை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு கவிப்ரியா அக்கா. வாழ்த்துக்கள்.

நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

கவிப்ரியா அக்கா உங்களோட உல்லன் பொம்மை மிகவும் அழகாக இருக்கிறது.இன்றே செய்ய போகிறேன்.

loved to be loved

ஹாய் கவிப்ப்ரியா,அழகான உல்லன் பொம்மை
,பாராட்டுக்கள்.டெடி பெயா எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுப்பீங்களா?

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

உல்லன் பொம்மைகள் அழகாயிருக்கின்றன.
செபா.

பொம்மைகள் இரண்டும் அழகு. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு

அட்மின்,
என்னை சந்தேகப்பிராணி என்று சொல்லப் போறீங்க, பரவாயில்லை. ;))
அதெப்படி எனக்கும் செபாவுக்கும் மட்டும் பொம்மை'கள்' தெரிந்தது!! யாராவது எனக்கு ஒரு கண்ணாடி தாங்களேன்... ;) இப்போ கருத்தை மாற்றவும் முடியவில்லையே!! ;))))

‍- இமா க்றிஸ்

அதெப்படி இமா???!!! :( உங்களால் மட்டும் இப்படிலாம் முடியுது??? ஒரு பொம்மை எப்படி கண்ணுக்கு 2'ஆ தெரிஞ்சுது???!!! வசம்மா மாட்டிக்கறீங்க பாபு அண்ணா'ட. ;) அதென்னா... கூடவே செபா ஆன்ட்டியை கூட்டணி சேர்க்கறீங்க... அவங்க பாவம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஒரு பொம்மை எப்படி கண்ணுக்கு 2'ஆ தெரிஞ்சுது?// ::)
எனக்கு 2 கண் ஆச்சே! ரெண்டு கண்ணாலும் பார்த்தேன். ::)

‍- இமா க்றிஸ்

சூப்பர் இமா மேம் டைமிங்க காமெடி பன்னிருக்கீங்க

all is well

இமா,

இதில் இரண்டு பொம்மைகள் இருந்ததாக தான் எனக்கு நியாபகம்.
வெள்ளை,சிவப்பு கலந்த பொம்மையே காணோம்:-((

யாராவது குழந்தைக்கு விளையாட எடுத்து போயிருப்பாங்க:_)))

with love

//யாராவது குழந்தைக்கு விளையாட எடுத்து போயிருப்பாங்க//
இருக்கும் இருக்கும். ;) உதவிக்கு வந்ததற்கு நன்றி சுபத்ரா. ;)

‍- இமா க்றிஸ்

கவிப்ரியா அவர்களே,
எனக்கும் இது போன்று பொம்மை செய்ய ஆசை. நான் சென்னையில் இருக்கிறேன். இது போல் செய்வதற்கு தேவையான பொருட்கள் எங்கே கிடைக்கும். (கண், மூக்கு, ப்ளாஸ்டிக் straw)
ரம்யா

ரம்யா
தி.நகரில் ரங்கநாதன் தெருவில் பாண்டியன் த்ரெட் ஸ்டோர்’ரில் எல்லா விதமான பொருட்களும் கிடைக்கும். பாத்திமா த்ரெட் ஸ்டோரிலும் வாங்கலாம். அங்குள்ளவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி. அமினா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta