க்ரிஸ்பி பக்லவா பிங்கர்ஸ்

தேதி: November 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

வழக்கமாக செய்யும் பக்லவாவை போல இதற்கு எண்ணெய், சீனி அதிகம் தேவையில்லை. அதை விட இதற்கு கலோரிப் பெறுமானமும் குறைவு.

 

பைலோ ஷீட் - 8
ஒலிவ் எண்ணெய் - அரை கப்
பிஸ்தா பருப்பு - கால் கப்
பாதாம் பருப்பு - கால் கப்
வால் நட் - கால் கப்
பெக்கான் பருப்பு - கால் கப்
சீனி - கால் கப்
கறுவா(பட்டை)த்தூள் - 2 சிட்டிகை
பேக்கிங் தட்டு - ஒன்று


 

அவனை 350 Fஇல் முற்சூடு செய்து வைக்கவும். பக்லவா செய்ய தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பருப்புக்களை லேசாக வறுத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு கோர்சாக(coarse) அரைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சீனி, கறுவாத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு பாச்மன்ட்/வக்ஸ் பேப்பரை விரித்து அதன் மேல் இரண்டு பைலோ ஷீட்களை விரித்து மேலே உள்ள ஷீட்டிற்கு ஒரு பிரஷால் ஒலிவ் எண்ணெயை பரவலாக பூசவும்.
அதன் மேல் பருப்புக் கலவையை தூவி பரப்பி விடவும்.
பின்னர் ஒரு அந்தத்திலிருந்து பருப்பு தூவிய பைலோ ஷீட்டை மட்டும் இறுக்கமாக ரோல் போல சுருட்டி எதிர் முனையில் அப்படியே மற்றைய பைலோ ஷீட்டின் மேல் வைக்கவும்.
பின்னர் கீழே உள்ள பைலோ ஷீட்டிற்கு எண்ணெய் தடவி மறுபடியும் மேலிருந்து கீழாக இறுக்கமாக சுருட்டவும்.
இவ்வாறு பருப்பு முடியும் வரை ரோல்கள் செய்து ஒரு எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் அடுக்கி மேலே மிகுதி எண்ணெயை தடவவும்.
பின்னர் ஒரு கூரான கத்தியால் ஃபிங்கர்ஸ்களாக வெட்டவும்.
அதன் பிறகு முற்சூடுப்படுத்திய அவனில் நடுத்தட்டில் வைத்து 35 நிமிடங்களுக்கு அல்லது மேற்பகுதி பொன்னிறமாகும்வரை பேக் செய்யவும்.
சுவையான க்ரிஸ்பி பக்லவா ஃபிங்கர்ஸ் தயார். இந்த பக்லவாவை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.
இதனை ஆற விட்டு அப்படியே சாப்பிடலாம். க்ரிஸ்பியாக இருக்கும். அல்லது இதன் மேல் தேன், சாக்லெட் சிரப் ஊற்றியும் சாப்பிடலாம். அல்லது சாதாரண பக்லவாவிற்கு செய்வது போல சீனி சிரப் தயாரித்து ஊற்றி ஊற விட்டும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நர்மதா ரொம்ப சூப்பர், அந்த பைலோ ஷீட் எப்படி இருக்கும் என்றும் அந்த பாக்கெட்டோட கொன்ச்ஜம் படத்தை போடுஙக்ளேன், இங்கு பப்ஸ் ஷீட், சமோசா ஷீட் இருக்கு, இது எனக்கு நேரம் கிடைக்கும் பொது செய்து பார்க்கனும்

Jaleelakamal

எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஸ்வீட் நான் எப்பாவது செய்வேன்,ஓலிவ் ஆயிலுக்கு பதில் பட்டர் அவ்வள்வு தான். மற்றவை இதே போல் தான். செய்தவுடனே 2 கண்டிப்ப்ப நான் சாப்பிட்டுவேன்.
இதில் என் தோழி ஸ்பினாச் ரோல் செய்து குடுத்தாங்க சூப்பர்.

ஹலோ நர்மதா மேடம்?
நான் அறுசுவைக்கு கொஞ்சம் புதுசு. உங்களின் ப்க்லவா செய்முறை பார்த்தேன்.•பைலோ ஷீட் USA il எந்த கடையில் கிடைக்கும் என்று யாராவது என் கேள்விக்கு பதில் சொல்லலாமே? சொன்னால் என்னாலும் இனிப்பு செய்யமுடியும் என்று நிரூபிக்க முடியும்.காப்பி அடித்துதான் .
நன்றி
anithaarun

எல்லா க்ரோசரி கடைகளிலும் ப்ரோசன் செக்‌ஷனில் கிடைக்கும். ஸ்டாப்&ஸ்ஷாப், ப்ரைஷ் ஷாப்பர், ஹோல் வுட்ஸ்,மார்கெட் பாஸ்கெட்,ஷாஸ், ஷோஸ் ப்ரதர்ஸ்.... எல்லா க்ரோசரி கடைகளிலும் கிடைக்கும்.