பருப்பு ரசம் வித் கடைசல்

தேதி: November 15, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

பாசிப்பருப்பு - 1 கப்
தக்காளி - 2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் - நான்கு தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 7 பல்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கரிவிடம்(அல்லது)
கடுகு - 1 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 1/2 ஸ்பூன் அளவு


 

பாசிப்பருப்பை நன்கு கழுவி விட்டு, ஒரு பாத்திரத்தில் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பையும் அதனுடன் உரித்த பூண்டில் மூன்று பல்லும்,மஞ்சள் தூளும் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும். புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கால் பாகமாக பருப்பு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை நன்கு வடிக்கட்டி கொள்ளவும்.
அந்த தண்ணீரில் புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு பல், தேங்காய் துருவலில் அரை ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்து கரைசலில் சேர்க்கவும்.
தக்காளியை கழுவி அதே மிக்ஸியில் நன்கு அடித்து அதையும் இதில் சேர்க்கவும்.
வாயில் வைத்து பார்த்து தண்ணீர் தேவைக்கேற்ப ஊற்றி கொள்ளவும். கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
இதை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்து மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன் போட்டு தாளித்து கொதித்த ரசத்தை ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.
பருப்பு கடைசலுக்கு;
வடித்த பருப்புடன் மீதி தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு குழி கரண்டியால் பூண்டெல்லாம் நசுங்க மசிக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடு வந்ததும், கடுகு, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மசித்த பருப்பை சேர்க்கவும்.
தாளித்தவை பருப்பு கலவையுடன் ஒன்று சேர கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூடான சாதத்துடன் நெய் ஊற்றி பருப்பு கடைசலை போட்டு ரசமும் ஊற்றி பிசைந்து பொறித்த உருளைக்கிழங்கு, அப்பளத்துடன் சாப்பிட சாப்பாடு போய் கொண்டே இருக்கும்.


கரிவிடம் தாளிப்பில் போட்டால் நல்ல மணமாய் இருக்கும். கிராமத்தில் உள்ளவர்களுக்கு மின்னலை தெரிந்திருக்கும். அதை ரசத்தில் கொதிக்க வைக்கும் போது போட்டால் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அட்மின் அவர்களே,
குறிப்பின் படத்தை உடனே வெளியிட்டமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா... பாசிப்பருப்பு வேக வைத்த நீரில் ரசம் இதுவே முதல் முறை. சுவையான குறிப்பு. ரொம்ப நல்லா இருந்தது. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்சரா, இந்த ரசம் ரொம்ப நன்றாக இருந்ததுங்க. நான் சூப் போலவும் சாப்பிட்டேன். இந்த குளிருக்கு அருமையா இருந்தது.. மிக்க நன்றி.

ஹாய் வின்னி நலமா....?
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
எனது கணவருக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தமான காம்பினேஷன் இது.
நீங்கள் சொல்வது போன்று குளிருக்கு சுட சுட சாப்பிட நன்றாக இருக்கும் தான்.
உங்கள் கருத்தை என்னோடு வந்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க வின்னி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் வனி,தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
நன்றிங்க...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.