பெண்களே உஷார் !!!

வந்துவிட்டேன் மீண்டும் சில முக்கியமான தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ள..... இத்தகவல் நிச்சயம் தோழிகளுக்கு பயன்படும் என்றே என் நேரத்தை இதற்கு ஒதுக்கி வந்தேன்.

சமீபத்தில் காதுக்கு வந்த சில சம்பவங்கள் தான் என்னை இத்தலைப்பை எழுத தூண்டியது.

1. ஒரு பெண்ணுக்கு கல்லூரி காலத்தில் இருந்து தொந்தரவு தந்த ஒரு ஆண், அப்பெண் திருமணம் ஆன பிறகும் அவரை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார். பெண்ணின் கணவருக்கு இது தெரிந்தும் குடும்ப கவுரவம் என்று காரணம் சொல்லி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க அச்சம்!!!

2. ஒரு பெண்ணுக்கு திடீரென ஒரு அழைப்பு.... நான் காவல் துறையில் இருந்து அழைக்கிறேன், நாங்கள் கைது செய்த நபர் உங்கள் பெயரை சொல்கிறார் என்று. விசாரணை என்ற பெயரில் அந்த நபர் தொலைப்பேசியிலேயே இப்பெண்ணின் முழு தகவல் (வீட்டு முகவரி உட்பட) அனைத்தையும் கேட்டுவிட்டு வைத்து விட்டார். தாமதமாக சந்தேக பட்டு விசாரித்த போதே அப்பெண்ணுக்கு அழைத்தவர் உண்மையான காவல் துறை அதிகாரி இல்லை என்று தெரிகிறது. கணவரிடம் சொல்ல பயம், புகார் தரவும் அச்சம்!!!

- இது போல் பல சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம். முதலில் சொன்ன கதையில் அந்த ஆண் பணத்துக்காக அப்பெண்ணின் கணவர் உட்பட அனைவரையும் மிறட்டுகிறார். இரண்டாவது சம்பவத்தில் கணவர் கோவக்காறர் என்று மனைவி உண்மையை சொல்ல பயம்!!! எப்படியோ குற்றம் செய்தவருக்கு இவை சாதகமாகவே அமைகிறது. காரணம்.... எந்த ஒரு குற்றமாக இருந்தாலும் முறையான புகார் இன்றி காவல் துறை நடவடிக்கை எடுக்க இயலாது. ஆண்கள் பெண்களை மிறட்டும் போதே இப்பெண் நடவடிக்கை எடுக்க அஞ்சுவார் என்ற தைரியத்தில் தான் செய்கிறார்கள். ஆக.... பாதிக்கப்படுவது பெண் தான்!!! அவரது வாழ்க்கை தான் !!! இது போன்ற நேரத்தில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:

1. பெண்களே.... முதலில் இது போல் உங்களுக்கு தெரியாத நபரிடம் இருந்து தவறான அழைப்புகள் உங்களுக்கு வந்தாலோ, அடிக்கடி தேவை இல்லாமல் உங்களை அழைத்து தொந்தரவு செய்தாலும், சந்தேக படும்படியான அழைப்புகள் வந்தாலும், முன்பே தெரிந்தவர் யாரும் தொந்தரவு செய்தாலும் முதலில் நீங்கள் செய்ய வேன்டியது அதை உங்கள் கணவரது கவனத்துக்கு கொண்டு செல்வது தான்!!!

2. முன் பின் தெரியாத யாரும் உங்களிடம் உங்கள் முகவரி, உங்களை பற்றிய தகவல், உங்கள் வங்கி தகவல்கள், உங்கள் பிறந்த தேதி என எதை கேட்டாலும் சற்று நிதானமாக அது உண்மையான அழைப்பா என்பதை உறுதி செய்த பின்னே தகவலை சொல்லுங்கள். தகவலை சொன்ன பிறகு தவறான அழைப்பு என்று தெரிந்தால் பயன் இல்லை....

3. அப்படி தாமதமாக அது தவறான அழைப்பு என்று புரிந்தால் யோசிக்க வேண்டாம்... தயவு செய்து கனவரிடம் சொல்லி, உடனே காவல் துறையின் உதவியையோ, அல்லது சம்மந்த பட்ட வங்கியையோ தொடர்பு செய்யுங்கள். இது உங்களுக்கு தக்க பாதுகாப்பை தரும்.

4. இப்போது காவல் துறையில் இது போன்று அலைபேசி, தொலைபேசியில் தொந்தரவு செய்யும் நபர் மேல் நடவடிக்கை எடுக்க, அவரை கண்டு பிடிக்க தனி பிரிவே உள்ளது.... அதனால் தயங்காமல் அவர்கள் உதவியை நாடுங்கள்.

5. கணவரிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை, அதே சமையம் இது போன்ற விஷயங்களை நீங்கள் சொல்லாமல் இருப்பது நாளை அவர் உங்களை சந்தேக பட காரணமாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

6. காவல் துறை உதவியை நாடினால் விஷயம் பப்லிக் ஆகி விடும், கவுரவம் பாதிக்கும் என்ற தவறான கருத்தை மாற்றுங்கள். உங்களுக்கு உதவவே பல சட்டங்கள் உருவாகின்றது. ஆனால் நம் பயம் காரணமாக அவற்றை பயன் படுத்தாமல் விட்டு, கடைசி நேரத்தில் எல்லாம் கை மீறி போன பிறகும் ஆபத்து நெருங்கி விட்ட பிறகும் அழுது புலம்பி பயன் இல்லை.

7. பேசும் நபர் காவல் துறை என்று பொய் சொன்னால் கூட, உங்கள் கணவரிடம் கொடுத்து பேச சொல்லுங்கள்.... இதுவே சிலருக்கு பயத்தை ஏற்படுத்தி அழைப்பை துண்டித்து விடுவார்கள். அப்படியும் அவர்கள் பேசினால் மீன்டும் நீங்களே அழைப்பதாக சொல்லி துண்டித்து விட்டு அவர் சொன்ன தகவல் உண்மை தானா என்று உறுதி செய்து கொன்டு பின் தொடர்பு கொண்டு பேசுங்கள்.

8. சம்மந்த பட்ட குற்றவாளி மீது தக்க நடவடிக்கை எடுக்க நீங்கள் முறையாக செய்யும் புகாரே அவசியம்!!! ஆகவே புகார் தர மறுக்காதீர்கள்.

9. முன் பின் தெரியாதவர்களிடமும், இணைய தளங்களிலும் உங்கள் தொலைப்பேசி எண்களை தயவு செய்து தர வேண்டாம்.

10. கடைகளில் பொருள் வாங்கினால் கூட தொடர்புக்கு உங்கள் கணவரது அலைபேசி எண்ணை மட்டுமே கொடுங்கள்.

அப்சரா... எனக்கு அடுத்த மாதம் டெலிவரி என்று நான் முன்பே ஒரு இழையில் சொல்லி இருந்தேனே.... அதான் அலைச்சல். இதில் தவறாக நினைக்க என்ன இருக்கு.....

மிக்க நன்றி கவிதா.... நல்ல தகவலை எல்லாரோடும் பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1.மொபைலில் இருந்து யாருக்கும் போன் செய்ய வேண்டாம்,குறிப்பாக ஆட்டோ அவசரத்திற்கு அழைக்க,ஆட்டோ டிரைவர் போன் நம்பர் தந்தால் லேண்ட் லைனில் இருந்து அவர்களை அழைக்கவும்.
2.மொபைலை ரீசார்ஜ் செய்ய ஷாப்பில் நம்பர் கேட்டால் எழுதி கொடுக்கவும்,நாம் சொன்னால் அருகே நிற்பவர் போவோர் வருவோர் எல்லாம் நோட் செய்து நம்மை கண்ட நேரத்தில் அழைத்து தொந்திரவு செய்யக்கூடும்.
எனக்கு அப்படி தான் ஒரு கால் வந்து அடிக்கடி என் நிம்மதியை குலைத்துக்கொண்டிருந்தது,கடைசியில் ஆட்டோ சத்தம் கேட்டது.அவசரத்திற்கு உறவினர் வந்தால் அவர்களை அனுப்ப ஆட்டோவை அழைப்பது வழக்கம்,பழக்கமுள்ளவர் என்றால் பிரச்சனை இல்லை.அப்ப இருந்து மொபைலில் யாரையும் அழைப்பதில்லை.
ஒரு நாள் மொபைல் ரீசார்ஜ் செய்யும் பொழுது கடைப்பையன் நம்பர் கேட்டான்,நானும் சொல்லி விட்டேன்,பக்கத்தில் யாரோ கவனிப்பது போல் உணர்வு,சரி என்று வீட்டுக்கு வந்து விட்டேன்,அப்புறம் பார்க்கனுமே குமார் இருக்கானா?ப்ரகாஷ் இருக்கானா?என்று ஒரே தொந்திரவு.இன்னும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்.ராங் நம்பர் என்று சொன்னாலும் இதே மாதிரி வேறு நம்பரில் இருந்து அழைப்பு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நீங்க சொல்வது சரிதான்.ஆனால், நான் சேப்டி பின், ஹீல்ச் செருப்பு எல்லா பனிஷ்மென்ட் கொடுட்தாலும் கொஞஜம் கோட சொரணையே இல்லாஅத ஜென்மங்கள என்ன பன்னுவத என்ரு யாரவ்து சொன்னால், நம்ம ஊர் பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்.

ஹாய் வனிதா! எப்படி இருக்கிறீர்கள்? உடம்பு நிலை எப்படி, நாள் நெருங்கி வருகின்றது, இது முதல் பிரசவமா? கவனமாக இருங்கள். நல்லதோர் பதிவு போட்டுள்ளீர்கள். எல்லோரும் நல்ல தகவல்களை பகிர்ந்துள்ளார்கள். அதைவிட நான் என்னத்தை சொல்ல.இருந்தாலும் பெண்களே கவனமாக இருங்கள். பிரச்சனை என்று வந்தால் உங்களுக்கு உருமையானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஆஹா ...,இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போய் விட்டதே..இது உங்களுக்கு எத்தனையாவது குழந்தை?அல்லது தலை பிரசவமா?எது எப்படியோ..உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.டெலிவரிக்கு ஹெல்ப்புக்கு கூட யாராவது இருக்கின்றார்களா?நல்லபடியாக பிரசவம் ஆக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஆசியா மேடம் நீங்கள் சொல்வது சரிதான்.இப்போது மொபைல் எங்கும் அதிகம் புழங்குவதால் விபரீதமும் அதிகமாயிற்று.ஊரில் ஷாப்பிங் போகும் போது கடைகளில் நன்கு இரண்டு வார்த்தை சிரித்து பேசி விட்டால் போதும்.அதிக உரிமை எடுத்து கொல்கிறார்கள்.அதுவும் எங்கள் ஊர் பக்கம் ரொம்ப மோசமாக நடக்கின்றது.பெண்கள் சாதாரணமாகதான் சிரித்து பேசி இருப்பார்கள்.ஆனால் அவர்களோ வேறு மாதிரி நம்மை எடை போட்டு விடுவார்கள்.எனவே கடைகளில் கவனித்து பேசுவது நன்று.மீண்டும் வருகின்றேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரொம்ப நல்ல தகவல் எல்லரும் தெரிஞ்சுக்க வேண்டீயா விசயம் தான்... இப்படி ஒரு பதிவை அரம்பிச்சதுக்கு முதலில் நன்றி வனிதா....

எல்லரும் சூப்பரா பதிவு போட்டு இருக்கிங்க கலக்குங்க...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்