பட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய பாடலா? புதிய பாடலா?

அன்புள்ள தோழிகளுக்கு வணக்கம்..

எல்லோரும் வாங்க ஆலமரத்தடிக்கு.. இதோ இந்த வார பட்டி மன்ற தலைப்புடன் வந்து விட்டேன்...

ஜாலியாக என்ன தலைப்பு கொடுப்பது என யோசித்து பார்த்தேன்..
நமது தோழி, திருமதி ஜெயலஷ்மி அவர்கள் கொடுத்த தலைப்பான, "கேட்க இனிமை பழைய பாடலா? புதிய பாடலா?"

இனிமை என்றால்....
இனிக்கும் சூழலை மேலும் மெருகூட்டுவது இனிமை...
நிம்மதி இல்லாதவருக்கு, ஒரு பாடலினால் ஆறுதல் கிடைக்குமென்றால், அது இனிமை..

தத்துவமாகவோ, வாழ்வில் நம்பிக்கை ஊடுவதாகவோ, எல்லா மனநிலைகளிலும் கேட்கக்கூடியதாகவோ ஒரு பாடல் இருக்குமானால் அந்தந்த சூழலில் அது இனிக்கும்..
கேட்டால் இனிக்கக் கூடிய பாடல்கள் புதிய பாடல்களா அல்லது பழைய பாடல்களா என்று பேச அன்புத் தோழிகளை அழைக்கிறேன்..

1985 வரை வெளிவந்த பாடல்களை பழைய பாடல்கள் என்றும், அதற்குப் பின் வெளிவந்தவைகளை புதிய பாடல்கள் என்றும் வகுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

இதில் ஒரே இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் காலத்துக்கேற்று மாற்றங்களை, தங்கள் வேலையில் ஏற்படுத்தியும் இருக்கலாம், அல்லது ஒரே பாணியிலும் அவர்கள் தம் திறமையை வெளிப்படுத்தியும் இருக்கலாம்...
நாம் பேச இருப்பது, வருடம் அல்லது தலைமுறை இடைவெளி என்ற கணக்கில் பழைய பாடல்கள் இனிக்கிறதா அல்லது புதிய பாடல்கள் இனிக்கிறதா..
வயதில் மூத்தவருக்கு புதிய பாடல் இனிக்கும்... இளைஞருக்கு 1960ல் வந்த பாடல் இனிக்கும்..

வயது வித்தியாசம் இல்லாமல், எல்லோருக்கும் இனிமை தருவது எது? பழைய பாடல்களா? புதிய பாடல்களா? என்று பேச, வாதிட வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்...

அன்புடன்
ஆயிஸ்ரீ

முதல்முறை தனி இழை துவக்குகிறேன்.. அன்புள்ள தோழிகளுக்கு என்று உள்ளதை, "அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு" என்று தயை கூர்ந்து எடுத்துக் கொள்ளவும்..
அன்பு சகோதரர்கள்... என் கவனக்குறைவை பெரிய மனம் வைத்து மன்னிக்கவும்.. சகோதரர்களையும் அன்போடு இப்பட்டிமன்றத்துக்கு வாதிட அழைக்கிறேன்...

இப்பட்டிமன்றத்தைப் பொறுத்து, 1980க்குப் பின் புதிய பாடல்கள் என எடுத்துக் கொள்வோம்...

எல்லா பட்டிமன்றங்களையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தது போல இம்முறையும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன்....

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஹாய் ஆயிஸ்ரீ!
வணக்கம்! இந்த பட்டிமன்றத்தில் கலந்துக்க முதல் ஆளாய் நான் வந்திட்டேன்.
ரொம்ப நல்ல, எல்லாருக்கும் பிடித்த தலைப்பு. நான்," கேட்க இனிமை பழைய பாடல்களே "என்ற தலைப்பினை தேர்ந்தெடுத்துள்ளேன்.
வாதத்திற்காக மட்டும் அல்ல, நிஜத்திலும் எனக்கு புதிய பாடல்களைவிட பழைய பாடல்களே கேட்க விருப்பம்!

எல்லோருக்கும் வணக்கம். நான் புதிய பாடல்கள் அணிக்காக வாதாட போகிறேன். உண்மையில் எனக்கு பழைய பாடலோ புதிய பாடலோ அதெல்லாம் கவலையில்லை. இனிமையாக இருந்தால் சரி அவ்வளவுதான். ஃபாஸ்ட் பீட்டாக இருந்தாலும் இனிமை இருக்கவே செய்கிறது. விரைவில் வாதத்தோடு வருகிறேன்.
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களுக்கு வணக்கம்,
நீங்கள் 1985பின் உள்ளது புதிய பாடலகள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.ஆகவே புதியபாடலா, பழைய பாடலா என்று சற்று யோசித்து வாதாட வருகிறேன்.

with love

கேட்பதற்கு இனிமையான பாடல் பழையபாடல்கள் என்ற அணியில் வாதாட வந்துவிட்டேன்.
புதிய பாடல்களில் பல கேட்பதற்கே புரியாது.பின் எப்படி அதில் இனிமை காண்பது.சில பாடல்கள் நன்றாக இருந்தாலும் சில காலகட்டங்கள் வரை தான் கேட்க பிடிக்கும்.
ஆனால் என்றுமே கேட்க இனிக்கும் இனிமை தரும் பாடல் பழைய பாடலே!!! பழைய பாடலே!!!!

with love

ரொம்ப சரியா சொன்னீங்க சுபத்ரா. புதிய பாடல்களை பொறுத்தவரை வந்த புதிதில்தான் கேட்க இனிமை. அதுவும் பாடல்களின் வரிகளைவிட இசையின் ராஜ்யம்தான் மேலோங்கி இருக்கும்.
அர்த்தமே இல்லாத வார்த்தைகளை தேடிப்பிடித்து போட்டு, புது ட்ரெண்ட் என்ற பெயரில் தமிழ் கொலைகள்தான் நடக்கிறது.
ஆனால் பழைய பாடல்களில் பாடகர்களின் குரலினை
அடக்கிய இசையை கேட்பது மிகவும் அரிது.
இந்த காரணங்களால்தான், இப்பவும் 1980க்கு முன்பு வந்த பாடல்களை, என்றும் இனியவை,தேன் கிண்ணம், சுகமான ராகங்கள் என்ற தலைப்புகளில் ஒளிபரப்புகிறார்கள் .பழைய பாடல்களினை பாடிய பாடகர்களின் குரலினை இன்னார் பாடிய பாடல்தான் இது என்று எளிதாக கண்டிபிடிக்கும் அளவிலும் பாடலின் தரமும், குரலின் மேன்மையும் இருந்தது.
ஆனால் இப்போது வரும் பாடல்கள் காலையில் கேட்டு மாலையில் மறக்கக்கூடியவைகளாகவே இருக்கின்றது!
முள்ளும் மலரும் படத்தில் ஜேசுதாஸின் குரலில் வரும் "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்" பாடலை நாம் எங்காவது பயணத்தில் இருக்கும்போது கேட்டுப்பார்த்தால் அந்த பாடலின் தரம் புரியும்.
நம் பயணத்தில் இணைந்து நம் எதிரிலேயே ஜேசுதாஸ் பாடுவதுபோல் ஓர் உணர்வு நமக்கு எழுவது இப்போது வரும் புதிய பாடல்களில் எதிர்பார்க்கமுடியுமா?

கேட்பதற்கு இனிமையான பாடல் பழையபாடல்கள் என்ற அணியில் வாதாட வந்துவிட்டேன்.நல்ல கருத்துக்களை மக்களுக்கு அளிப்பது பழையபாடல்களே இப்போழுதுள்ள பாடல்களைஎல்லோரும் சேர்ந்து பார்க்கமுடியாது பாஸ்ட்டாக இருக்கு புரியமுடியவில்லை
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

எல்லோருக்கும் வணக்கம். சுபத்ரா தலைப்பை நல்லா பாருங்க 1980 க்கு பிறகு வந்த பாடல்கள் எல்லாம் புதிய பாடல்கள். தமிழ் சினிமா பாடல்களின் பொற்காலமே எண்பதுகள்தானே! இளையராஜாவின் அறிமுகம் 1976ல் அவரது இசை உச்சத்துக்கு சென்றது எண்பதுகளில். இதிலிருந்தே புரியவில்லையா கேட்க இனிமை புதிய பாடல்களே என்று! ஒன்றா இரண்டா எங்க வைரமுத்து எழுதி இசைஞானி இசையமைத்து எஸ்.பி.பி. பாடிய அமுத கானங்கள்... தனித்தனியே சொல்வதற்கு? அட இவ்வளவு ஏங்க நம்ம "மைக்" மோகனின் பல படங்கள் பாடல்களுக்காகவே சூப்பர் ஹிட் ஆயினவே அவை அனைத்தும் எண்பதுகளின் படங்கள்தானே! மௌன ராகம் படப்பாடல்கள் ஒன்று போதுமே புதிய பாடல்களின் அருமையை சொல்ல. கேட்க கேட்க இனிமை. சின்னக்குயில் சித்ராவின் இனிய குரல் ஒலிக்கத்தொடங்கியது எண்பதுகளில். அந்த குரலுக்கு மயங்காதவர் யார்?

அடுத்து வந்தாரு பாருங்க எங்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படப்பாடல்கள் அனைத்தும் எத்தனை இனிமை. அதில் எந்த பாடல் வரிகள் உங்களுக்கு புரியவில்லை? சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்று நம்மை சிறகடித்து குதூகலமாக பறக்க வைக்கவில்லையா இந்த புதிய பாடல்கள். பழையபாடல்களில் பெண்ணின் உணர்வுகளை பாடலாக எழுதியவர்கள் ஆண்களே. ஆனால் மின்னலே படத்தில் தாமரை எழுதிய வசீகரா பாடலில்(சித்தரிக்கப்பட்டது வேண்டுமானால் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் அப்பாடல் கேட்க பிடிக்காது என்றால் அது பொய்) பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வித்யா சாகரின் "மலர்களே மலர்களே" பாடல் கேட்க எத்தனை இனிமை! தேசிய விருது வாங்கிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் கேட்க இனிமையாக இல்லையா வார்த்தைகள் புரியவில்லையா இல்லை தன்னம்பிக்கையை ஊட்டவில்லையா? அந்த பாடல் பாடத்திட்டத்திலேயே இணைக்கப் பட்டிருக்கிறது. சமீபத்தில் வந்த கண்கள் இரண்டால்(சுப்ரமணிய புரம்) பாடல் இனிமையாக இல்லையா? இனிய புதிய பாடல்களின் லிஸ்ட் போட்டா அதுக்கு முடிவே இல்லீங்க.
என்னதான் சொன்னாலும் எண்பதுகளில் தொடங்கி இன்று வரை உள்ள பாடல்கள்தான் கேட்க இனிமை மற்றும் மனதிற்கு இதமானது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி நான் தான் கிடைத்தேனா சண்டை போட.நீங்க சரியாக கவனிக்கவும் 1980 இல்லை 1985 யிலிருந்து தான் புதுசு. நீங்களே சொல்லியவாறு இளையராஜாவின் பாடல்கள் 10 வருடங்கள் பழைய பாடல்களாக கருதப்படும். அதுமட்டுமில்லை இவர்கள் மட்டுமில்லாமல் எம்.எஸ்.வி யின் பாடல் ஆகா எத்தனை அருமை.

with love

Learn learn learn to learn
தமிழ் பழைய படல்கள் மனதுக்கு அமைதியைக்கொடுக்கும் எங்கு செல்கின்றது இன்றய உலகம் கொடுமை கொடுமை புதிய பாடல்கள். என் 200 பழைய பாடல்களின் தொகுப்பு
"Tamil varadhavani" youtube ல் கேளுங்கள்
பொதுவாக சொல்லும்போது பழைய பாடல்கள் சிறப்பாக உள்ளன ஒன்று இரண்டு படல்களை வைத்து நல்லது கெட்டது காண முடியாதுடிபில் கேளுங்கள்

Learn learn learn to learn

மேலும் சில பதிவுகள்