வற்றல் மாங்காய் குழம்பு

தேதி: November 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மாங்காய் வற்றல் - 5 துண்டுகள்
சிறிய வெங்காயம் - 15
பூண்டு - 10
தக்காளி - ஒன்று (பெரியதாக)
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 60 மி.லி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்துக் கொள்ளவும். மாங்காய் வற்றலை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு ஐந்து நிமிடம் தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளியை கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு தனியாக எடுத்து வைக்கவும். அதிலேயே ஐந்து பல் பூண்டு, மிளகாய்த்தூளை தவிர மற்ற மசாலாத்தூள்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து அந்த தண்ணீரில் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். மீதமுள்ள பூண்டு, வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பூண்டு, வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பிறகு தனியாக எடுத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியதும் மாங்காய் வற்றலையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அதில் கரைத்து வைத்திருக்கும் புளிமசாலா கரைசலை ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பை கொதிக்க விடவும்.
குழம்பின் மேல் எண்ணெய் மிதந்து கதகதவென்று வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான வற்றல் மாங்காய் குழம்பு தயார். இந்த வற்றல் மாங்காய் குழம்பு குறிப்பினை <b>திருமதி. அப்சரா </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்
இதற்கு அப்பளம், ஏதேனும் பருப்பு கூட்டு நல்ல சைட் டிஷ்ஷாக இருக்கும். இந்த குழம்பை மழைக்காலங்களில் சமைத்து, மதியம் சூடான சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வற்றல் குழம்பு கேள்விப்பட்டு இருக்கேன்,வற்றல் மாங்காய் குழம்பு, ம்ம்ம் சூப்பர்.அருமையாக இருக்கு,காம்பினேஷனும் சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம்,எப்படி இருக்கீங்க?இது சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்ங்க.தங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குழம்பு சூப்பர்...நன்றி

nanriyudan

ஹாய் விஜி...,எப்படி இருக்கீங்க...?
பின்னூட்டம் தந்ததற்க்கு மிகவும் நன்றிங்க...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா,

நலமா? நான் நலம்...நீங்க திருநெல்வேலியா?

nanriyudan

ஹாய் விஜி நான் நலம்.
இல்லை விஜி நான் மயிலாடுதுறை பக்கம்.ஏன் கேட்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா....?
நீங்கள் திருநெல்வேலியா......?
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உங்க பரோட்டாக்கு அப்பறம் இதுவும் எங்க வீட்டு ஃபேவரட் ஆயிடுச்சு. ரொம்ப ரொம்ப சுவையான குழம்பு. மதியம் சாதம், இரவு சப்பாத்தி, காலை தோசைன்னு விட மனசு இல்லாம விரும்பி சாப்பிட்டேன். சூப்பரா இருந்தது அப்சரா. நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா