ஃபேப்பரிக் பெயிண்டிங் டிசைன்

தேதி: November 18, 2009

4
Average: 3.9 (7 votes)

நாகை மாவட்டத்தில் Fevicryl நிறுவனத்தாரால் பெண்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பின்போது பங்குபெற்ற ஒருவரின் கைவண்ணம்தான் இந்த ஃபேப்பரிக் பெயிண்டிங் டிசைன்.

 

துணி
பிரேம்
ப்ரஷ்
பேப்பரிக் பெயிண்ட்
டிரேஸ் பேப்பர்
பென்சில்
சம்கி மற்றும் ஸ்டோன்கள்
கோல்டுநிற கிலிடர்ஸ்

 

ஃபேப்பரிக் பெயிண்டிங் செய்வதற்கு தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
துணியின் மேல் டிரேஸ் பேப்பரை வைத்து, அந்த டிசைனின் மீது பென்சிலை கொண்டு வரையவும்.
இப்பொழுது துணியில் டிரேஸ் பேப்பர் கொண்டு வரைந்த டிசைன் பதிந்திருக்கும்.
இனி பூக்களுக்கு ஃபேப்பரிக் பெயிண்டைக் கொண்டு விரும்பிய நிறத்தால் பெயிண்ட் செய்யவும்.
இலைகளுக்கு அடர்ந்த பச்சைநிற பெயிண்டை உபயோக்கிக்கவும்.
மேல் முனையில் உள்ள பூக்களுக்கும், இலைகளுக்கும் இதேப்போல் பெயிண்ட் செய்து முடிக்கவும்.
இந்த ஃபேப்பரிக் பெயிண்ட் பூக்களை ஒரு நாள் முழுவதும் காயவிட்டு அயர்ன் செய்யவும். பிறகு பூக்கள் மீது சம்கி, ஸ்டோன் மற்றும் கிலிடர்ஸை கொண்டு அலங்கரிக்கவும். இதுப்போன்று மிகவும் எளிமையான டிசைனை ப்ளைன் தலையணை உறை, போர்வை, சுடிதார், புடவை, குழந்தைகளின் ஆடை ஆகியவற்றில் வரைந்து பெயிண்ட் செய்யலாம்.
மற்றொரு ப்ளைன் துணியில் இலைவடிவ விநாயகர் உருவத்தை வரைந்து முழுவதும் பச்சைநிற பேப்பரிக் பெயிண்ட் அடித்து காயவிடவும். பிறகு தலையின் கிரீடத்திற்கு கோல்டுநிற கிலிடர்ஸை பயன்படுத்தவும். கறுப்புநிற பெயிண்டால் விநாயகர் உருவம் மற்றும் கீரிடத்தை சுற்றி அவுட் லைன் போன்று கொடுக்கவும். அவுட் லைன் கொடுத்து காய்ந்த பிறகு சம்கி மற்றும் ஸ்டோனை மாறி மாறி வைத்து அலங்கரிக்கவும். நெற்றியிலுள்ள திலகம், கண், தந்தம் இவற்றை படத்தில் உள்ளது போல் வரைந்து கொள்ளவும். இதுப்போல் சுலபமாக வரையக்கூடிய கடவுள் உருவங்களை வரைந்து, பெயிண்ட் செய்து பூஜை அறையின் திரைசீலையாக மாட்டி விடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இரண்டுமே கொள்ளை அழகு. செய்தவருக்கு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

இரண்டு டிசைன்களும் அழகாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.

இமா

‍- இமா க்றிஸ்

thozhi imma avargale nanum fabric paintingla romba interestbut anal enakku desn owna varaia theriadu inge trace paper plainagadan kidaikiradu nalla design enge kidaikkum
radhika

பிள்ளையார், டிசைன், பூக்களின் டிசைன் இரண்டுமே
அசத்தலா இருக்கு. இது யாரோட கை வண்ணம்?
அவருக்குப் பாராட்டுக்கள்.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta