அதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்

இத்துடன் இந்த கூட்டாஞ்சோறு சமைத்து அசத்தலாம் முடிவடைகிறது. ஒரு வருடமா அவர்கள் வேலையெல்லாம் விட்டு விட்டு, நமக்காக கூவி கூவி பாட்டு பாடி அழைத்த அதிரா வரவில்லையே யாராவது கேட்டீங்களா?

அதிரா வாங்க‌ ஏன் வ‌ர‌ல‌.

ரொம்ப பெரிய விஷியம் ஒரு வருடமாக கூட்டாஞ்சோறு தோழிகளின் சமையல் குறிப்புகளை (யாருமே சீண்டாமல் இந்த குறீப்புகள் அனைத்தும்) இப்படி ஒரு இழை சமைத்து அசத்தலாம் என்று ஐடியாவுடன் ஆரம்பித்த அதிரா விற்ற்கு எல்லோரும் நன்றி கூறனும்.

அதை செம்மையாக விரல் விட்டு எண்ணிய ரேணுகாவையும் பாராட்டனும்.

நானும் எனக்கு அருசுவை கிடைத்த போதேல்லாம் என்னால் முடிந்ததை செய்து அந்த பகுதியில் சொல்லி இருக்கிறேன். பின்னூடடம் தான் கொடுக்க முடியல.இரண்டு முன்று முறை ஓப்பன் செய்தால் பிறகு எனக்கு மறுபடி கிடைக்காத காரணத்தால் , ஆனால் முடிந்த வரை செய்ததை போட்டோ எடுத்தும் அனுப்பி உள்ளேன்.

எவ்வ‌ள‌வு பேர் பார்க்கிறீர்க‌ள், ப‌ய‌ன‌டைகிறீர்க‌ள், இதை பார்த்து ச‌மைப்ப‌வ‌ர்க‌ள் அதிக‌ம், அவ‌ர்க‌ள் ஒரு குறிப்பாவ‌து செய்து சொல்லி இருக்க‌லாம்.

ஓவ்வொரு முறையும் சில‌ தோழிக‌ள் தான் க‌ல‌ந்து கொள்கிறார்க‌ள்,

--
இதே போல் இதற்கு முன் மனோகரி மேடம் தான் கூட்டாஞ்சோறு வார குறிப்புகளை அறிமுகப்படுத்தி, எல்லோரையும் செய்ய வைத்தார்கள்.

ஓவ்வொரு முறையும் ஒவ்வொருத்தர் செலக்ட் செய்து கொடுக்கனும்.

இப்பவாவது இரண்டு முன்று பெயரை சொல்லி முடிந்ததை செய்ய சொன்னீர்கள்.

அப்போ மொத்த கூட்டஞ்சசோறில் ஒரு வாரத்திற்கு உண்டான டிபன் வகை, மதியத்துக்கு கிரேவி அயிட்டம், இரவு டிபன், மாலை நொருக்கு, இப்படி முழு தோழிகளின் குறீப்பிலிருந்து வடிகட்டி எடுத்து கொடுத்தோம். அதில் என் டேன் வரும் போது ரொம்ப கழ்டமாஇருந்தது. வெஜ் அயிட்டமும் எடுக்கனும்,நான் வெஜ்ஜும் எடுக்கனும். நான்கு நாட்களாக அட்டவனை போட்டு தயாரித்து கொடுத்தேன்.

கொஞ்ச நாளில் அப்படியே விட்டு போச்சு,

அதற்கு பிறகு அதிரா செம்மையா ஒரு தலைப்பை போட்டு எல்லோரையும் அழைத்து அனைத்து குறிப்பு கொடுத்த சகோதரிகளையும் சந்தோஷப்ப்படுத்தி இருக்கிறார்.

அதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்.

Jaleelakamal

அதிரா,ரேணுகாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.நீங்க 2 பேரும் ரொம்ப பொறுமையா சமைத்து அசத்தலாமை நடத்தி அசத்திட்டீங்க மீண்டும் வாழ்த்துக்கள்.

ஜலீலக்கா உங்களுக்கும் நன்றி.

அன்புள்ளம் கொண்ட அதிரா, ரேணுகாவிற்கு நன்றிகள் பல, பல. ஒருவருடம் சிறப்பாகவும், பொறுமையாகவும் நடத்தி முடித்துள்ளீர்கள் பாராட்டுக்கள். அதிரா வந்தாலே அறுசுவை கலக்கும். அவர்களை அதிக நாட்களாக காணவில்லை. எல்லாம் களையிழந்த மாதிரி உள்ளது. அதிரா நீங்கள் இதை பார்த்தால் வந்து ஒரு பதிவு போட்டு விட்டு போங்கள். ரேணுகாவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் அதிரா எங்கே உள்ளார்கள் என.எண்கள் தேடலை பூர்த்தி செய்யுங்கள்.
இந்த பதிவை போட்ட ஜலிலாவுக்கும் எனது நன்றிகள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அடாது மழைபெய்தாலும் விடாது ரயிலை ஓட்டிய அதிராவுக்கும் ரேணுவுக்கும் மனமார்ந்த பராட்டுக்கள்.
பல புதிய சமையலை ருசிக்க வாய்ப்பு கிடைத்தது. என்னால் அதிகம் பங்கு கொள்ள முடியலென்னாலும் முடிந்த வரை செய்துள்ளேன். வாழ்த்துக்கள்!
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ஜலீலா
ரொம்ப நன்றி இப்பிடி ஒரு த்ரெட்டை ஆரம்பித்ததற்கு. ஏற்கெனவே நான் அதிராவிற்கும், ரேணுவிற்கும் நன்றி சொல்லி மலர்மாலையையும், பொன்னாடையையும் போர்த்திட்டேன்!
அதிரா எங்கே போய்ட்டீங்க????? உங்க பழமொழியையும், இலங்கைத்தமிழையும் கேட்காமல் எப்பிடியோ இருக்கு!

இவ்வளவு நாட்களாக இந்த சமைத்து அசத்தலாம் பகுதியினை அதிரா குண்டாந்தடியுடனும், ரேணு கையில் நோட்புக்கும், குச்சியுமாக நம்மையெல்லாம் விரட்டி,விரட்டி சமைக்க வைத்ததற்கு ரொம்ப நன்றின்னு ஒரு வார்த்தையில் முடிக்கமுடியாது!
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி!!!!!!

அதிரா ரேணுவை பாராட்டி,வாழ்த்தி நிறைய தடவை பதிவு போட்டுவிட்டாலும்,இதிலும் பாராட்டி மகிழ்கிறேன்.அதிரா எங்கே போயிட்டீங்க?ஊருக்கு என்றால் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். சீக்கிரம் வருவீங்கன்னு நம்புகிறோம். நலம் தானே?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த பதிவ டைப் பண்ணி நாலு நாள் ஆகுது ஆனால் பதிவு பண்ண சரியாக ஓப்பன் ஆகல நேற்றுகூட பதிவு போட்டேன் ஆனால் போச்சா இல்லையான்னு தெரியல.

யோகராணி, கவிசிவா, சாய் கீதா, ஆசியா பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி

அனைத்து கூட்டாஞ்சோறு சகோதரிகளும் அதிரா ரேணு விற்கு உங்கள் நன்றியை தெரிவித்து கொள்ளுங்கள்.

Jaleelakamal

ஜலீலாக்கா, உங்க பெரிய மனசுக்கு முதல் பாராட்டு.

நானும் பல சமைத்து அசத்தலாம்களில் பங்கு பெற்று அந்த இன்பத்தை அனுபவித்தவள் என்ற மகிழ்ச்சியில், அதிரா, ரேணுகா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

அதிராவை ரொம்ப நாளாகக் காணவில்லை. தெரிந்தவர்கள் ஏனோ சொல்ல விரும்பவில்லை.

எப்படியானாலும் மிகவும் நலமுடனே இருப்பார், கூடிய விரைவில் இந்தப் பதிவுகளைப் பார்ப்பார் என்பதால் ஆவலோடு காத்திருக்கிறேன்.

அனைத்து அருசுவை தோழிகளுக்கும் முதலில் ஹாய் சொல்லிக் கொள்கிறேன்.சமையல் குறிப்பு சம்பந்தமாக வெப் சைட்டுகள் பல இருப்பினும் இது போன்று ஒரு பக்கமும்,ஊக்குவிப்பும் எனக்கு தெரிந்து இல்லை என்றே கருதுகின்றேன்.எனவே அதிராவுக்கும்,ரேணுவிற்க்கும் பாராட்டை தெரிவித்தே ஆக வேண்டும்.
ஆனால் இதற்க்கு முன்பே ஜலீலா மேடம் நீங்க செய்து கொண்டு இருந்தீங்க என்பது இப்போதுதான் தெரிகின்றது.எனவே உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.எதோ குறிப்பு பார்தோம்.படித்தோம்.செய்து பார்த்தோம் என்று இருந்திருந்தால் நிச்சயம் சுவை இருந்திருக்காது.இந்த அறுசுவையின் பேரு கேட்ப சுவையும்,மனமும் கூடி கொண்டு போக உங்களை போன்ற சீனியர்ஸின் ஊக்கமும்,பங்களிப்பும் தான் என நான் நினைக்கிறேன்.
எனவெ ஆரம்ப நாட்களிலிருந்து இருக்கும் அருசுவை தோழிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.இதே போன்று என்றும் சுவை கூடிக் கொண்டிருக்க வேண்டும்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அதிரா & ரேணு,
அறுசுவையில் ஒரு வருடமா வெற்றி நடை போட்ட அசத்தலாம் பகுதி ‍- தொடர் இழையில் தொடர்ந்து கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தவள் என்கிற முறையில், இதை ஆரம்பித்து வைத்து, எல்லோருடைய குறிப்புகளையும் செய்துபார்க்க வைத்த தங்களின் யோசனைக்கும், நீங்கள் இருவரும் அளித்த உற்சாகத்துக்கும், ஏற்கனெவே பல முறை பாராட்டுகளை தெரியப்படுத்தியிருப்பினும், மீண்டும் பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அருமையான‌ இத்தொடர் நிறைவு பெறும் சமயம் அதிரா இல்லாமல் இருப்பது, மனதிற்கு என்னவோ போல் இருக்கிறது. அதிரா எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருக்க விழைகிறேன். ரேணு, அதிராவுக்கு விசாரிப்புகளை தெரியப்படுத்தவும்.

நிச்சயம் நீங்க‌ள் ந‌ட‌த்திய‌/ஓட்டிய‌ அச‌த்த‌லாம் ட்ரெயின், அதிராவின் 'பாட்டு', ரேணுவின் 'டீ' எல்லாம் ரொம்ப‌ மிஸ் ப‌ண்ண‌ப்போறேன். சரி, மீண்டும் பார்க்க‌லாம். நன்றி!

ஜ‌லிலாக்கா,
இந்த 'நன்றி' இழையை ஆர‌ம்பித்து வைத்த‌ உங்க‌ளுக்கும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்