U.A.E தோழிகளே கொஞ்சம் வாருங்கள்…

அபுதாபி,அல்-ஐன்,துபாய்,ஷார்ஜா,அஜ்மான்.
இங்கு வசிக்கும் அனைத்து அருசுவை தோழிகளையும் இந்த பக்கம் வருக,வருக வென அழைக்கிறேன்.என்ன விஷயம் சொல்ல போறேன்னு குழப்பமாக இருக்கா?
இருங்க விஷயத்திற்க்கு வருகின்றேன்.
இந்த அருசுவையின் மூலம் எங்கெங்கோ இருக்கும் நாம் நிறைய விஷயங்களை கலந்துரையாடிக் கொண்டும்,தோழிகளாகவும்,உடன் பிறப்பு போன்றும் பழகி கொண்டு இருக்கின்றோம்.இப்படி இருக்கும் நாம் சந்தித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் தானே.
ஆனால் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் தோழிகளை சந்திக்க நேரிடுவது என்பது கஷ்ட்டமான விஷயம்.(பேராசைதான் …)ஆனால் நான் இருப்பது துபாய்.எனவே இந்த நாட்டிற்க்குள் இருப்பவர்களையாவது சந்திக்கலாம் அல்லவா?
அதான் ஓடோடி வந்திருக்கின்றேன்.எனக்கு தெரிந்து ,ரேணு,ஜலீலா மேடம்,ஆசியா மேடம்,தாலிக்கா,தனிஷா அவ்வளவுதான்.மற்ற யாராவது இருப்பின் தயவு செய்து சொல்லவில்லை என்று நினைக்காமல் இப்பக்கம் வாருங்கள்.

அன்புடன்,
அப்சரா.

நம் யூ.ஆ.இ_யில் விடுமுறை நாட்கள் வர போகின்றது.இந்த சமையத்தில் நம் எல்லோராலும் எங்கு ஒன்று கூட முடியுமோ அதை பேசிக்கொண்டு ஒரு நாள் சந்தித்தால் என்ன?
எல்லோருக்கும் ஏற்ற நாள் ,ஏற்ற நேரம்,ஏற்ற இடம் என பேசிக்கொண்டு சந்தித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.ரேணு,ஜலீலா மேடம்,ஆசியா மேடம் ,தாலிக்கா,தனிஷா நீங்களும் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.
எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் என்ற தைரியத்தில் இந்த இழையினில் வந்திருக்கின்றேன்.பார்ப்போம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Hello friends,

I would like know about the following details about Abu dhabi...

1. cost of living?
2. food and culture?
3. school for kids,shopping,entertainment,ho
spital facilities?
4. weather and accomodation? etc

I need A to Z information about the country.. friends who are living there please help me... My husband is planning to come there... if i get the details about the country from u friends it will be helpful..
If it is anything negative also please let me know... regarding that we will decide it.. please help me..
dear appufar please give me the details..

நிஞ்சுபாப்பு,

இங்கே போய்ப் பாருங்க, ஒரு ஐடியா கிடைக்கும்:

http://gulfnews.com/uaessentials/residents-guide

http://www.uaeinteract.com/

அப்சரா,
நலமா? நானும் இங்குதான் இருக்கிறேன். எல்லாரையும் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி.

ஆனால் இந்த விடுமுறையில் முடியுமா என்பது சந்தேகமே. குறுகியா அவகாசமே உள்ளது. அதோடு, யாரும் அறுசுவையில் அடிக்கடி காணோமே?

சந்திப்பு ஏற்பாடு செய்வதாக இருந்தால் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அபுதாபி என்றால் வசதி!!

ஹாய் ninju, மிஸஸ் ஹூசைன் சொன்ன சைட்டுக்கு போய் பாருங்க.எது போன்ற வேலையாக வருகின்றார்கள் என்பது பொருத்தே சொல்ல முடியும்.ரென்ட் பொருத்தவரை கொஞ்சம் ஜாஸ்தியாக தான் தற்போது உள்ளது.ஆனால் நம் தமிழர்களுக்கும்,பாதுகாப்பிற்க்கும் பஞ்சம் இல்லாததால் நன்றாக எஞாய் பண்ணலாம்.ரசிக்க வேண்டிய ஊர்.குழந்தைகளின் படிப்பும் மிகவும் நன்றாகவே உள்ளது.என்ன..எக்ஸ்பென்ஸிவ் என்று பார்த்தால் கொஞ்சம் இங்கு ஜாஸ்திதான்.அதை தவிர்த்து என்னை பொருத்தவரை மிகவும் திருப்தியான நாடாக கருதுகின்றேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மிஸஸ் ஹுசைன்,நான் நலம்.தாங்கள் நலம் தானே?
கூப்பிட்ட குரலுக்கு நீங்க தான் வந்து இருக்கீங்க?வேறு யாரும் வர காணோமே...
ஆவலோடு வந்து பார்த்ததற்க்கு நீங்களாவது வந்தீர்களே..சந்தோஷம் தான்.
வெயிட் பண்ணி பார்ப்போம்ங்க.ரேணுகா,ஜலீலா மேடம்,ஆசியா மேடம் எல்லாம் வருவாங்கன்னு நினைக்கிறேன்.எல்லோரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுப்போம்ங்க...
நீங்க அபுதாபியில் இருக்கின்றீர்களா?
மறுபடியும் நம்பிக்கையோடு போறேன்.ஹூம்...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Dear apsara,
Thanks a lot for helping me.. But already i checked these sites... its giving different information..as u girls are staying there u must have some experience and u know about the country..
my husband is coming for software work only... how much dihar per month is ok for an decent living? please help me depending on this only we heve to decide it...

ninju..,நீங்கள் கேட்பது போல் இன்னும் விளக்கமாக வேண்டுமெனில், தங்குவதற்க்கு இடம் என்பது முதலில் முக்கியம் அல்லவா?
ரென்ட்டிலேயே இடத்திர்க்கு இடம் வித்தியாசங்கள் உண்டு.
அபுதாபியில் தான் ரென்ட் முதலில் அதிகம்.அப்புறம் துபாய் தான்.ஷார்ஜா,அஜ்மான் எல்லாம் நார்மலாக இருக்கும்.இங்கு வருடத்திற்க்கு 30,000 திர்ஹம் _லேயே டபுள் பெட் ரூம் வாடகைக்கு கிடைக்கும்.இந்த ரென்ட்டுக்கு துபாயில் ஸ்டூடியோ ஃப்ளாட்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
பிள்ளைகளின் படிப்பு என்று பார்த்தால் அதிலும் ஸ்கூலுக்கு,ஸ்கூல் ஃபீஸ் வித்தியாசங்கள் உண்டு.நம்ம ஆட்களெல்லாம் நிச்சயம் CBSE சிலம்பஸ் தான் தேர்ந்தெடுப்போம்.அதில் மாதம் 600 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை உள்ளது.அட்மிஷன் பீரியட் இப்போதிலிருந்து ஜனவரிக்குள் புடித்தால் உண்டு.அதுவும் சில ஸ்கூலில் அப்படியும் வெய்ட்டிங் லிஸ்ட்டில் தான் இருக்கும்.
ஹாஸ்பிடல் செலவுகள் எல்லாம் கம்பெனி இன்ஷூரன்ஸ் இருப்பின் வசதியே.இல்லையென்றாலும் சமாலிக்கும் அளவிற்க்கு க்ளீனிக்குகள் உள்ளன.ஆனால் நம் தமிழர்களுக்கு ஏற்ற ஊர் என்றுதான் சொல்லுவேன்.தனியாக பெண்கள் இந்நாட்டில் எங்கும் செல்லலாம்.பயமில்லை.பெண்களுக்கு முன்னுரிமை உண்டு.
உங்கள் கணவர் மட்டுமே தங்க வேண்டும் என்றால் நான்கு,ஐந்து பேர் உள்ள ரூமில் தங்கி கொள்ளலாம்.வாடகை குறைவாக இருக்கும்.இப்போதைக்கு இந்த தகவல் உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கரெக்டாக சொல்ல தெரியலை,ஆனால் குறைந்தது மாதம் 15 - 20 ஆயிரம் திர்ஹம்ஸ் +அக்காமடேஷன்+கார் அலவன்ஸ்+மெடிக்கல்+ எஜுகேஷன் இப்படியாவது கிடைத்தால் கொஞ்சம் சேமித்து வசதியாக வாழ முடியும்.அவரவர் வாழ்க்கை தரத்தை பொருத்தது,ஆனால் யு.ஏ.இ -யில் அபுதாபி காஸ்ட்லி சிட்டி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்கள் ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி.அல் ஐனில் என் கணவர்,மகன் இருக்கிறார்கள்.நான் இப்ப இந்தியாவில் இருக்கிறேன், என் மாமனாருக்கு உடல் நலமில்லை என்று நானும் என் மகளும் இங்கு தற்பொழுது இருந்து வருகிறோம்.விடுமுறையில் மட்டும் வந்து செல்கிறோம்.எனவே கெட்டுகெதரில் என்னால் கலந்து கொள்ளமுடியாதுப்பா.ஏற்கனவே சென்ற வருடம் நான்,ரேணுகா,தனிஷா,தளிகா மட்டும் அபுதாபியில் அல்வாதா மாலில் சந்தித்தோம். ரொம்ப ஜாலியாக இருந்தது.அப்ப நாங்கள் அபுதாபியில் இருந்தோம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்