குழந்தை பிறந்து இருக்கு

ஹாய் தோழீஸ் அனைவரும் வாங்க, நம்ம அருசுவை தோழி கார்த்திகா ராணிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை. இரண்டு பேரும் நலமா உள்ளார்கள். என்பதை நான் தெர்வித்து கொள்கிரேன்.

சோனியா

ஹாய் கார்த்திகா,

நலம்தானே? இப்போதான் இந்த த்ரெட் பார்க்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள்!கார்த்திகா!

தாயும், சேயும் நலமாய் இருக்க எங்கள் அனைவருடைய நல்வாழ்த்துக்கள்!
ஹாய் சோனியா, நலமா? இப்பதான் உங்ககூட பேசறேன்னு நினைக்கிறேன்.
நானும் இப்பதான் இந்த த்ரெட்டை பார்க்கிறேன்.

ஹாய் சோனியா..நலமா..?நானும் மதியம் இந்த பக்கத்தை ஓபன் பண்ண முயற்ச்சி செய்து முடியாமல் போய் விட்டேன்.
யாருக்கு குழந்தை பிறந்திருக்கு என்று தெரிய வில்லையே..என்று எண்ணி கொண்டிருந்தேன்.கார்த்திகா அவர்களிடம் நான் உரையாடியதில்லை.இருப்பினும் அவர்களுக்கு என் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.தாயும்,சேயும் உடல் நலத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் இருக்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா எப்படி இருகிங்க, கார்த்திகா ராணி கர்பினி பகுதில நிறைய குறிப்பு கொடுத்து இருக்காங்க, அவங்களுக்கு தான் குழந்தை பிறந்து உள்ளது, தற்ப்போது மதுரைல இருக்காங்க, இன்னும் சில மாதங்களில் பஹ்ரைன் வந்துடுவாங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். குழந்தையும் நீங்களும் நலமே இருக்க எனது பிரார்த்தனைகள்.
அன்புடன்,
செபா.

தாயும், சேயும் நலமுடன் இருக்க என் வாழ்த்துக்கள். என்ன பேர் வெச்சிருக்கீங்கன்னு இனி நேரம் கிடைக்கும்போது வந்து சொல்லுங்க.

உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி. இருவரும் நலம். இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. குழந்தை தூங்கும் போது தான் message பன்ன முடிந்தது.

கார்த்திகா ராணி

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

டியர் கார்திகா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

குழந்தை தூங்குறப்ப நீங்களும் ஓய்வெடுத்து கொள்ளுங்கள் :)

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

வாழ்த்துக்கள்!கார்த்திகா!

தாயும், சேயும் நலமாய் இருக்க நான் இறைவ‌னை பிராத்திக்கிரேன்...

சாரி தாம‌தாமான‌ ப‌திவு...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இப்போதுதான் இந்த இழை பார்த்தேன் தாயும் சேயும் நலமாக் இருக்க் எனது வாழ்த்துக்க்ள் கார்த்தைக உடம்ப ந்ல்லா பார்த்துக்கோங்க்க பிள்ளையும் நல்லா பார்த்துனக்கோங்க்க

மேலும் சில பதிவுகள்