பப்பாளி காய் வடை

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பப்பாளி காய் - ஒன்று
கடலைப்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 50 கிராம்
இஞ்சி - 10 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடலெண்ணெய் - அரை லிட்டர்


 

பப்பாளிக்காயை மேல் தோலை நீக்கி விட்டு சிறிது சிறிதாக நறுக்கவும். கடலைப்பருப்பினை ஊற வைக்கவும்.
பின்னர் ஊறியதும் அதனுடன் பப்பாளிகாயையும் சேர்த்து அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை சிறிதாக அரிந்து, அரைத்த மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், அதில் மாவினை சிறிது சிறிதாக தட்டி போடவும். சிவந்தவுடன் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்