ஃபெல்ட் துணியைக் கொண்டு டால்பின் செய்வது எப்படி?

தேதி: November 21, 2009

5
Average: 4.2 (6 votes)

 

ஃபெல்ட் துணி - கருப்பு மற்றும் வெள்ளைநிறங்கள்
காட்டன்
ஊசி
நூல் கண்டு
கத்திரிக்கோல்
ஸ்கெட்ச் பென்
டால்பின் கண்
பெவிக்கால்

 

டால்பின் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பெல்ட் துணியில் வரையப்பட்டிருக்கும் டால்பின் பேட்டனை முதலில் ஒரு சாட் பேப்பரில் தனித்தனிப் பாகங்களாக வரைந்துக் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு கறுப்பு பெல்ட் துணியின் சொரசொரப்பான பக்கத்தில் டால்பின் உடல் பகுதியை வைத்து வரைந்து விட்டு, அதன் எதிர் திசையிலும் இந்த பேட்டனை வைத்து வரையவும். இதேப் போல் இரண்டு செதில் பகுதி, 2 இறகு பகுதி, ஒரு வால் பகுதி ஆகியவற்றை கருப்பு பெல்ட் துணியிலேயே வரைந்துக் கத்திரிக்கோலால் தனித்தனி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளைநிற பெல்ட் துணியில் டால்பின் அடிப்பகுதியை படத்தில் உள்ளது வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதே துணியில் இறகு பகுதி இரண்டு, வால் பகுதி ஒன்றையும் வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் இரண்டு உடல் பகுதியின் சொரசொரப்பான பக்கம் வெளியே தெரிவதுபோல் வைத்து படத்தில் உள்ளது போல் புள்ளிகள் வைத்துக் கொள்ளவும். டால்பின் மேல் முனையிலிருந்து 4 மற்றும் 5வது புள்ளிகளின் இடைவெளியை கோடு போட்டு வைத்துக் கொள்ளவும். ஊசியில் நூலை இரட்டையாக கோர்த்து அடியில் முடிச்சுப் போடவும். புள்ளிகள் வைத்த இடத்தில் ஊசி நூலால் ஒரு முறை தைத்து மீண்டும் அதே இடத்தில் விட்டு ஊசியில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
வெட்டிய நான்கு இறகில், ஒரு இறகிற்கு ஒரு வெள்ளைநிற இறகு மற்றொன்று கருப்புநிற இறகு என்று வைத்து இரண்டையும் இணைத்து புள்ளிகள் வைத்து மேற்சொன்ன முறையில் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். இதேப் போல் மற்றொரு இறகு செய்யவும். வெட்டிய இரண்டு வால் பகுதியையும் இதேப் போல் இணைத்து புள்ளிகள் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். இரண்டு செதிலையும் இணைத்து புள்ளிகள் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
முதுகுதண்டுவடத்தை இணைத்து வைத்திருக்கும் இரண்டு உடல் பகுதியில், டால்பின் மூக்கு பகுதியுடன் நறுக்கி வைத்திருக்கும் வெள்ளைநிற அடிப்பகுதியின் கூர்மையான பகுதியை இணைத்து அந்த இடத்தில் ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். பிறகு வெள்ளைநிற அடிப்பகுதியை விரித்து வைத்து அதன் இரு ஒரங்களிலும், மேலே இருக்கும் இரண்டு உடல் பகுதியின் துண்டுகளையும் சேர்த்து படத்தில் உள்ளபடி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். (அதாவது முடிச்சு போட்டு வைத்திருக்கும் முதுகுதண்டுப்பகுதியை நேராக வைத்து அதன் இரண்டு பக்கவாட்டையும் ஸ்கெட்ச் பேனாவால் புள்ளிகள் வைத்து முடிச்சுப்போடவும்).
டால்பின் முதுகு பகுதியில் கோடு போட்டு குறிப்பிட்டிருக்கும் இடத்தில் செதில் பகுதியை வைத்து அந்த இருமுனையையும் தைத்து கொள்ளவும். அதன் பின்பகுதியில் முடிச்சு போட்டிருக்கும் இருமுனைகளுடன் வால்பகுதியையும் சேர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
உடல் பகுதியின் இரண்டு பக்கத்திலும், மூக்கு பகுதியிலிருந்து 3 மற்றும் 4 இடத்தில் முடிச்சு போட்ட பகுதிக்கு இடையே உள்ள இடைவெளியில் இறகு பகுதியை வைத்து அந்த இருமுனைகளிலும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
அடிபகுதியின் ஏதாவது ஒரு பக்கவாட்டில் 5வது முடிச்சு மற்றும் பின்பகுதியில் போட்டிற்கும் முடிச்சை மட்டும் தைக்காமல், மீதி பகுதியை சுற்றிலும் தைக்கவும்.
தைத்து முடித்த பிறகு நல்லபக்கத்திற்கு டால்பினை திருப்பிக் கொள்ளவும். தைக்காமல் வைத்திருக்கும் துளையின் வழியாக காட்டனை செதில், வால், இறகு, முகம் மற்றும் உடல் பகுதியில் சமமாக வைத்து நிரப்பவும். காட்டன் வைத்து முடித்த பிறகு துளை உள்ள இடத்தை ஊசியால் தைத்துக் கொள்ளவும்.
கடைசியில் டால்பின் மூக்கு பகுதிக்கும் சற்று மேலே பெவிக்கால் வைத்து கண்ணை ஒட்டவும். இப்பொழுது ஃபெல்ட் துணியை பயன்படுத்தி செய்யக்கூடிய அழகிய டால்பின் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக இந்த டால்பின் செய்முறை வடிவமைத்து காட்டியவர் திருமதி. சாந்தி மோகனசுந்தரம் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வணக்கம் டால்பின் செய்ய துணி எவ்வளவு வாங்க வேண்டும் என்று சொல்லவும்.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta