க்ரோசான் & சாக்லேட் ப்ரெட்

தேதி: November 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இவை ஐரோப்பிய‌ ம‌க்க‌ளின் டிஃப‌ன் வகைக‌ளில் முக்கிய‌மான‌வை. ப்ளாக் டீ அல்லது ப்ளாக் காஃபியுடன் சாப்பிட, வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும். மிகவும் மிருதுவாக இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பட்ட‌ர் ச‌ற்று அதிக‌ம் க‌ல‌ப்ப‌தால், ட‌ய‌ட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌விர்த்துக் கொள்ள‌லாம். சாக்லேட் ப்ரெட் பிரெஞ்ச் மொழியில் 'பேண் ஷொகோலா' என்று சொல்ல‌ப்ப‌டும்.

அறுசுவையின் நீண்ட கால உறுப்பினரும், நூற்றுக்கணக்கான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு கொடுத்துள்ள திருமதி. அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார். இந்த க்ரோசனுக்கு தேவையான பேஸ்ட்ரி தயாரிப்பு செய்முறையை கீழ்கண்ட லிங்க்கில் காணலாம்.

பேஸ்ட்ரி தயாரிப்பு முறை

சாக்லேட் பார் ‍- ஒன்று
முட்டை -‍ ஒன்று
பால் - ஒரு தேக்கரண்டி
பஃப் பேஸ்ட்ரி - 1 ஷீட்

மேலே கொடுத்துள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும்.
க்ரோசானுக்கு தேவையான பஃப் பேஸ்ட்ரியை முந்தையக் குறிப்பில் செய்துக் காட்டியுள்ளபடி த‌யார் செய்த பிற‌கு, சிறிது மாவு தூவி (ச‌ப்பாத்தி க‌ன‌த்தில்)ச‌துர‌மாக‌ தேய்த்து 5 நிமிடம் அப்ப‌டியே வைக்க‌வும்.
5 நிமிடங்க‌ளுக்கு பிற‌கு நீள் முக்கோண‌ வ‌டிவில் துண்டுக‌ள் வெட்ட‌வும்.
இப்போது ஒரு முக்கோண துண்டை எடுத்து, அந்த முக்கோணத் துண்டில் நீளம் குறைந்த அடிப்பாகத்தின் நடுவில் கத்தியினால் 1 இன்ச் அளவு வெட்டி, கூர்முனை நோக்கி சுருட்டி, கடைசியாக இரண்டு ஓரங்களையும் வளைத்து விட‌வும்.
இதேப் போலவே எல்லா க்ரோசான்களையும் தயார் செய்து, அவனின் ட்ரேயில் அடுக்கி 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
சாக்லேட் ப்ரெட் செய்வதற்கு இந்த பேஸ்ட்ரியை 3 x 9 அளவுள்ள நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
சாக்லேட் பாரை, சுமார் 1/2 x 2 3/4 இன்ச் அளவில் (ஒரு ப்ரெட்டிற்கு 2 துண்டுகள் வீதம்) உடைத்து, நீளமாக வெட்டி வைத்துள்ள பேஸ்ட்ரி துண்டின் ஓரத்திலிருந்து 2 இன்ச் த‌ள்ளி முதலில் ஒரு துண்டை வைத்து, ஒரு மடிப்பு மட்டும் மடிக்கவும்.
ம‌டித்த‌ பாக‌த்தின் மேல் இன்னொரு சாக்லேட் துண்டையும் வைக்க‌வும்.
இப்போது 2 வது வைத்த‌ சாக்லேட் துண்டும் உள்ளே போகும்படி அப்படியே பாய் போல் சுருட்டி, ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி 2 மணி நேரம் வைக்க‌வும். (சாக்லேட் துண்டு வெளியில் தெரிய‌க்கூடாது. இங்கு விள‌க்க‌த்திற்காக‌ வெளியில் தெரியும்ப‌டி செய்து காட்ட‌ப்ப‌டுள்ள‌து)
2 மணி நேரம் கழித்த பிறகு, முட்டையில் ஒரு தேக்கரண்டி பாலை ஊற்றி கலக்கி, த‌யார் செய்து வைத்துள்ள க்ரோசான்கள் மற்றும் சாக்லேட் பிரெட் மீது பிரஷ்ஷால் தடவவும்.
அதன் பின்னர் 350°F அள‌வில் முற்சூடு செய்த அவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
குழ‌ந்தைக‌ளும் விரும்பி சாப்பிட‌க்கூடிய‌, சுவையான‌ க்ரோசான் & சாக்லேட் ப்ரெட் த‌யார். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக விளக்கப்படங்களுடன் செய்து காட்டியவர்  திருமதி. அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்கள்.

ஒரு முறை செய்து சற்று ஆற வைத்து காற்றுப்புகாத பாட்டில்களில் வைத்துக் கொண்டால் 4, 5 நாட்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். ஆறிய பிறகு சாப்பிடுவதாக இருந்தால் மைக்ரோ ஓவ‌னில் சூடுப்ப‌டுத்தி சாப்பிட‌வும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அழகான விளக்கம்+படங்களுடன் காட்டி அசத்திட்டீங்க.எனக்கு க்ரோசான் ரொம்ப பிடிக்கும்.இவ்வளவு ஈசியா வீட்லயே செய்ய முடியும்னு அழகா சொல்லிட்டிங்க அஸ்மா!!பாராட்டுக்கள்!!

நானும் ரொம்ப நாளா இத எப்படி செய்றாங்கன்னு யோசிட்டிருந்தேன்.இன்னிகு முகப்பில் உங்க குறிப்பு வந்ததைபார்த்து சந்தோஷம்.

ஆஹா எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஷாஃப்டாக இருக்கும்.

எந்த அஸ்மா இதை கொடுத்தது, அருசுவை கூட்டாஞ்சோறில் இருக்கும் அஸ்மாவா, அவர்களா இருந்தால் அவர்கள் முழு பெயரோடு போட்டு இருக்கலாமே.
ரொம்ப‌ தெளிவான‌ ப‌ட‌ம் அருமையான‌ குறிப்பு.

Jaleelakamal

கலக்கலான குறிப்பை அசத்தலாக செய்து காட்டிருக்கீங்க...வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு மேனகா! உங்களின் சந்தோஷம் பார்த்து எனக்கும் சந்தோஷம்! :) இந்த குறிப்பு வெளியாக இன்னும் நாளாகும் என்று நினைத்திருந்தேன். எதேர்ச்சையாக அறுசுவையை திறக்க.... என் குறிப்புடன் உங்களின் பின்னூட்டங்கள்! சந்தோஷமாக உள்ளது :) நன்றிபா!

அன்பு ஜலீலாக்கா! நலமா? என்ன ஜலீலாக்கா, 'கூட்டாஞ்சோறில் இருக்கும் அஸ்மாவா'ன்னு இப்படி கேட்டுட்டீங்க? உங்க தங்கையை இப்படி தூரமா வைத்து பார்க்கலாமா?:(( அந்த 'அஸ்மா ஷர்ஃபுதீன்' தான் இந்த அஸ்மா! :-)

அன்பு இளவரசி! எப்படியிருக்கீங்க? நான்கைந்து மாதங்களுக்கு முன்பே எடுத்த ஃபோட்டோஸ்பா இது! சில ஸ்டெப்ஸ் எப்படியோ விடுபட்டு போனதால், உடனே அனுப்பாமல் வைத்திருந்தேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்!

ஹாய் அஸ்மா..,நலமாக இருக்கின்றீர்களா?
தங்களின் குறிப்பை பார்க்கும் போதே அருமையாக இருக்கின்றது.நிச்சயம் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றுதான்.இதே போன்று உங்களின் அசத்தலான குறிப்பை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சலாம் அப்ஸரா! நலமா? பல தடவை உங்களிடம் பேசலாம் என்று நினைத்து, நேரமில்லாமல் பிறகு பேசலாம் என்று போய்விடுவேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிமா! வேலம்புதுக்குடியில் உங்களுக்கு ஜஸீரா(Jazeera)வை தெரியுமா?

அலைக்கும் வஸல்லம் அஸ்மா...பொறையார் ஜஸீராவா?கணவர் பெயர் முஜீப்.ஓ...நன்றாகவே தெரியும்.
என் கணவரின் நெருங்கிய தோழர் தான் அவர்.தங்களுக்கு எப்படி உறவினரா...நண்பரா.தங்களின் சொந்த ஊர் என்ன?நேரம் இருக்கும் போது தெரிய படுத்தவும்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அஸ்ஸலாமு அழைக்கும், அஸ்மா லாத்தா நலமா,உங்க குறிப்பு சூப்பர்.செய்து பார்க்கிறேன்.என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

சலாம் கதீஜா! உங்கள் பின்னூட்டம் பார்த்து எந்த கதீஜா என்று குழம்பிப் போயிருந்தேன். விபரம் கேட்கவும் நேரமில்லாமல் அப்படியே மறந்தும் போய்விட்டது. இப்போதான் உங்க ப்ரொஃபைல் பார்த்தேன், France என்றவுடன், நீங்களாதான் இருக்குமென்று ரிஸ்வானாவுக்கு ஃபோன் பண்ணி உங்க கணவ‌ர் பெயர் உமர்தானா என்று கேட்ட பிறகுதான் கன்ஃபார்ம் பண்ணிக்கொண்டேன் :) உங்களை ஞாபகம் இருக்காவா? குட்டிப்பிள்ளையிலிருந்து பார்த்து, எனக்கு மாணவியாவும் இருந்து.... அதெப்படி மறக்கமுடியும்? :) நீங்க 2 வருஷமா அறுசுவையில் உறுப்பினரா இருந்தும் எனக்கு தெரியவில்லை பாருங்க! உங்க பின்னூட்டத்திற்கு நன்றி கதீஜா!

அய்யோ ஆஸ்மா..

என்ன இது.. எப்டி இப்டி.. ஆஹா..பாக்கவே அழகா இருக்கு.. சாப்பிடனும் போல இருக்கு. ப்ளீஸ்.. அட்ரஸ் அனுப்புறேன்.. பார்சல் அனுபுங்க பா.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சலாம் அஃப்சரா! நலமா? உங்களுக்கு ரொம்ப சீக்கிரம் பதில் சொல்லிட்டேன் :) பொறையார் ஜஸீராவைதான் கேட்டேன். என் தங்கைக்கு நாத்தனார். என் சொந்த ஊர் காரைக்கால்.

அன்பு ரம்யா! நலமா? சாப்பிடணும்போல்தானே உள்ளது? பார்சல் அனுப்பிட்டா போச்சு :) உங்க பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றிபா!

பின் குறிப்பு: நான் ஆஸ்மா இல்லபா, அஸ்மா :)

ஜாரிப்பா.. அஸ்மா..

உங்க ஸ்வீட்ட பாத்து கொஞ்சம் உண்ர்ச்சிவச பட்டுடேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அஸ்மா assalamu alaikum நல்லா இருக்கிங்களா,என்னிடம் ரெடிமேட் பஃப் பேஸ்ட்ரி உள்ளது அதில் செய்யலாமா.வீட்டில் இருக்கு உடனே செய்ய கேட்கிரேன்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

சலாம் ரிஸ்வானா, நான் நலமே! நீங்க எப்படியிருக்கீங்க? ரெடிமேட் பஃப் பேஸ்ட்ரியிலும் தாராளமா செய்யலாம். ஆனால் அதற்கு தேவையான டெம்ப்ரேச்சர், டைமிங் எல்லாம் அதன் பாக்கெட்டில் எவ்வளவு கொடுத்துள்ளார்களோ அதை ஃபாலோ பண்ணிக்கொள்ளுங்கள். சில பேஸ்ட்ரி கொஞ்சம் மெல்லியதாக இருக்கும். கவனமாக பார்த்துக்கொண்டு செய்யுங்கள். நீங்கள் வைத்துள்ள பேஸ்ட்ரி ரவுண்டாக இருந்தால் நான்காவோ எட்டாகவோ வெட்டிக்கொண்டு, (முக்கோண வடிவில் கிடைக்க‌க்கூடிய) அந்த துண்டின் அகலமான பகுதியிலிருந்து மேலே படத்தில் காட்டியபடி சுருட்டுங்கள். மறக்காமல் மேலே முட்டை, பால் மிக்ஸிங் தடவிக்கொள்ளுங்கள். ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்கள்.

ரொம்ப நன்றி அஸ்மா crosen செய்துவிட்டேன் நல்லா வந்தது ஆனால் என்னிடம் இருந்த பஃப் பேஸ்ட்ரி ரொம்ப சின்னதா இருந்தது நான் அதன் மேல் ஹனி ஊற்றி சாப்பிட்டேன்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL