எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு அழகிய பாராசூட்

தேதி: November 25, 2009

4
Average: 3.8 (5 votes)

 

பேப்பர் கப் - ஒன்று
பந்து - ஒன்று
கோல்டுநிற சம்கி
ஃபேப்பரிக் பெயிண்ட்
கத்திரிக்கோல்
கோல்டுநிற லேஸ்
தெர்மாக்கோல்
ப்ரஷ்
சிறிய பொம்மை
தெர்மாக்கோல் பால்ஸ்
பெவிக்கால்
ஊசி (பெரியது)
உல்லன் நூல்

 

பேப்பர் கப்பின் உள்ளே வைக்க தேவையான அளவு தெர்மாக்கோலை வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பேப்பர் கப்பில் வெளிப்பகுதியில் விரும்பிய டிசைனை வரைந்து அதில் விரும்பிய நிறத்தால் பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
உல்லன் நூலை ஊசியில் கோர்த்து அடியில் முடிச்சு போட்டுக் கொள்ளவும். உல்லன் நூல் கோர்த்த ஊசியை பந்தின் (நடுப்பகுதியின்) அடிவழியாக விட்டு மேல் வழியாக எடுக்கவும். மேலே ஊசியில் உள்ள நூலை தேவையான அளவிற்கு நறுக்கி விட்டு முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
லேஸை பந்தின் சுற்றளவிற்கு தகுந்தாற்போல் நறுக்கி எடுத்துக் கொண்டு, அதன் மைய சுற்றுப்பகுதியில் பெவிக்கால் தடவி லேஸை ஒட்டவும்.
அதன் பின்னர் லேஸ் ஒட்டிய பகுதியை தவிர பந்து முழுவதும் பெவிக்கால் தடவி சம்கிகளை ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.
பேப்பர் கப்பில் பெயிண்ட் செய்திருக்கும் பகுதியில் கிலிட்டர்ஸ் வைத்து பிடித்தமான டிசைனை வரைந்துக் கொள்ளவும். கப்பின் உள்ளே நறுக்கி வைத்திருக்கும் தெர்மாக்கோலை அரை இன்ச் அளவு உள்ளே இருப்பதுபோல் பொருத்தி விட்டு அதன் நடுவில் பெவிக்கால் தடவி பொம்மையை வைத்து ஒட்டவும்.
கப்பின் ஓரங்களில் ஏதேனும் மூன்று இடத்தில் சமமான இடைவெளி விட்டு உல்லன் நூலை இரட்டையாக கோர்த்து வைத்துக் கொள்ளவும். பொம்மையை சுற்றிலும் சிறிய தெர்மாக்கோல் பால்ஸை போடவும்.
கோர்த்து வைத்திருக்கும் உல்லன் நூலை எடுத்து பந்தில் லேஸ் ஒட்டிய பகுதியில் பெவிக்கால் தடவி நூலை ஒட்டவும். இதைப் போல் மூன்று நூலையும் எடுத்து ஒட்டிக் கொள்ளவும்.
மிக சுலபமாக செய்யக்கூடிய அழகிய பாராசூட் ரெடி. இதைக் கொண்டு வீட்டின் ஹால் பகுதி, குழந்தைகள் அறை போன்றவற்றை அலங்கரிக்கலாம்.
இந்த பாராசூட் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் பாப்பி, எப்படி இத்தனை பொறுமையா இதெல்லாம் செஞ்சீங்க? ஒவ்வொரு தடவையும் இந்தப் பகுதியில் பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு. இத்தனைக்கும் ஒரு முறை கூட இதெல்லாம் நான் செய்வேன்னு கூட சொன்னதில்லை. நேரில் கேட்டால் வெக்கப்பட்டு எப்படி சிரிப்பீங்கன்னு யோசிச்சுப் பாத்துக்கறேன். இந்த பாராசூட் சூப்பரா இருக்கு. நவீனாக்குட்டிக்கு(அபிக்கு) அழகான கிப்ட் அம்மாவே செஞ்சு தந்தது கலக்கலா இருக்கு. ஆனால் அந்த பொம்மையை பார்க்கும்போது அவளை எப்போ பார்ப்பேன்னு இருக்கு. இப்படியே இந்தப் பதிவில் பத்மா, ரேவதிக்கும் ஒரு ஹாய் சொல்லிக்கறேன். இதெல்லாம் நம்ம தலைவி ரிலீசுக்கு முன்னாடி செஞ்சதா இல்லை இப்ப சிவராத்திரியில் செஞ்சதா? உடம்பை பார்த்துக்குங்க. செல்லக்குட்டிக்கு என் அன்பான முத்தங்கள்.

பாப்பி,

அழகழகாய் கைவேலை செய்து அசத்துறீங்க. :) பாராட்டுக்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அழகா செய்திருக்கீங்க!! வாழ்த்துக்கள் செண்பகா அண்ணி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அன்பு பாப்பி! நலமா? அபிக்குட்டி நல்லாயிருக்கா? உங்களின் எல்லா கைவண்ணங்களையும்போல் இந்த பாராசூட்டும் சூப்பர்! :) அம்மா, பத்மா, ரேவதியை ரொம்ப கேட்டதாக சொல்லவும்.

மிக மிக அழகாயிருக்கிறது உங்கள் பாரசூட். பாராட்டுக்கள்.
அன்புள்ள,
செபா.