ஒரு மார்பின் அளவில் மாற்றம் ...?

ஹாய் தோழிகளே
என் குழந்தைக்கு இப்பொது பத்து மாதம் ஆகிறது... நார்மல் பிரசவம்...அவள் பிறந்த முதல் மூன்று மாதங்கள் என் இரண்டு மார்பிலும் நன்கு பால் வந்தது... பிறகு ஒரு மார்பில்சரியாக வர வில்லை... நானும் இதை பொருட்படுத்தாது ஒரே மாரில் பால் கொடுத்து வந்தேன்.
தற்சமயம் கவனித்த பொது ஒரு மார் சினதாகவும்,மற்றொன்று பெரிதாகவும் உள்ளது .. இது கஷ்டமாக உள்ளது...
தற்சமயம் இரண்டு மாரிலும் வலுகாடயமாக பால் கொடிகிறேன்.. இருந்தும் நோ மாற்றம்..
நான் என்ன செய்தால் மார் இரண்டும் ஒரே அளவில் மாறும்...?
ப்ளீஸ் எனக்கு பதில் சொலுங்கள் ப்ளீஸ்....

ஹாய் கிருத்திகா,

நலமா?

இது என் அபிப்பிராயம் மட்டும்தான். ஏனைய சகோதரிகளுக்கு வேறு கருத்துக்கள் இருக்கலாம், உங்களுக்கு உபயோகமான தகவல்கள் அவர்களிடம் இருந்தும் நிச்சயம் கிடைக்கும்.

மனிதன் ஒரு சமச்சீர் வடிவம் அல்ல. ஒரு முறை கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை உற்றுப் பார்த்தால் இது புரியும். ஒரு காதும் மறு காதும் அச்சாக ஒரே மாதிரி இராது. புருவம், கண்கள், மீதி எல்லாப் பாகங்களுக்கும் இது பொருந்தும். உங்கள் உள்ளங்கைகளைத் திருப்பிப் பார்த்தால் அங்கும் ரேகைகள் வேறுபாடு தெரியும். மார்புகளும் அது போல்தான், இரண்டும் ஒரே அளவில் இருக்கவேண்டும் என்பது இல்லை.

எங்கள் அன்றாட வாழ்க்கை அவசர ஓட்டத்தில் இதை எல்லாம் நின்று நிதானமாக அவதானிக்க எங்களுக்கு நேரம் இருப்பதில்லை. திடீரென்று ஒரு நாள் கவனத்தில் படும் போது மனது கலங்கி விடுகிறது. கவலைப் படாதீர்கள். பாலூட்டாமல் விட்டதால் சுரப்பிகள் பயன்பாடு குறைந்து போனதால் அந்த மார்பக்கம் சிறிதாகத் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் பாலூட்டுவதை நிறுத்திச் சில காலத்தின் பின் இரண்டு மார்பகங்களும் சிறுத்து விடும். அப்போது அவதானிக்கிற மாதிரிப் பெரிய வேறுபாடு தெரியாது.

இப்போதைக்கு உங்கள் குழந்தையின் நலத்தினைக் கருத்தில் கொள்ளுங்கள். முடிந்தவரை இரண்டு மார்பகங்களிலும் மாறி மாறிப் பாலூட்டுங்கள். பாலூட்டும் போது வேறு சிந்தனை இருந்தால் சுரப்பது குறைவாக இருக்கும்.

மனதுக்குக் கவலையாக இருந்தால் ஒரு முறை உங்கள் குடும்ப வைத்தியரிடம் கலந்தாலோசித்து விடுங்கள். நிம்மதியாக இருக்கும்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

amma bagvan thunnai,
ஹாய் இமா,

உங்கள் பதில் பார்த்ததில்... ரொம்ப சந்தோசம்... நிமதி... நான் செய்த தவறு தான் இது (ஒரே மாரில் பால் கொடுத்தது)...எப்படியோ பால் நிறுத்திய பிறகு சரியான அளவில் அனால் சந்தோசம் தான்... (நான் டாக்டரிடம் கேட்டேன்... நீங்கள் சொன்ன பதில் தான் சொனார் )
அதே சமயம் ஒரு கவலை இமா,...
1 .நான் ஒரே மாரில் கொடுத்ததில் என் pillaikku தேவையான சத்து முழுவதும் கிடைத்து இருக்குமா?
2 .நான் இப்பொது இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி கொடுக்கிறேன்.. இருந்தும் ஒரு பக்கம் மட்டுமே அதிக பால் சுரக்கிறது?மறு பக்கமும் நன்கு பால் வர ஏதேனும் மசாஜ் செய்ய வேண்டுமா?
தயவு செய்து என் சந்தேகத்தை போகுங்களேன் ப்ளீஸ்...

_இப்படிக்கு,
முகம் அறியா தோழி.. கிருத்தி ...

amma bagvan thunnai

என்னைப் பெரிய எக்ஸ்பர்ட் என்று நினைத்துக் கொண்டு கேட்கிறீர்கள் கிருத்திகா. :) முடிந்த வரை உதவுகிறேன். :)
நிச்சயம் எல்லாம் சரியாகும். முதலில் யோசிப்பதை விடுங்கள். இன்னும் எவ்வளவு காலம் தொடர்வதாக இருக்கிறீர்கள்? அதிக காலம் இல்லையே!
சந்தேகம் 1. நிச்சயம் கிடைத்து இருக்கும். உங்கள் குழந்தைக்குப் பாலூட்டுவதோடு, கூடவே பத்து மாதக் குழந்தைக்கான உணவு வகைகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.
சந்தேகம் 2. மசாஜ் பற்றி எனக்குத் தெரியவில்லை. பாலூட்டுவதை நிறுத்தும் வரை தொடர்ந்து இரண்டு மார்பகங்களில் இருந்தும் பாலூட்டினால் போதும். சத்தான உணவு உட்கொள்ளுங்கள். பாலூட்டுமுன் நீங்கள் ஒரு கிண்ணம் பால் சாப்பிடுங்கள். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தே இருக்கும்.
முக்கியமான விடயம், மனத்தைக் கவலை இல்லாமல் வைத்துக் கொள்வது. :)

இமா

‍- இமா க்றிஸ்

amma bagvan thunnaiஇமா,
நன்றி இமா... இனி எந்த சந்தேகமும் இல்லாம பால் கொடுப்பேன்...

amma bagvan thunnai

மேலும் சில பதிவுகள்