குழந்தை மோஷனில் இரத்தம்

என் குழந்தைக்கு 22 மாதமாகிறது. அவளுக்கு இரண்டு மூன்று நாட்களாக மோஷனில் சளி வருகிறது. தண்ணியாக போகிறது. எது சாப்பிட்டாலும் உடனே போகிறது. சில நேரங்களில் பச்சையாக போகிறது. இன்று மோஷனில் சிறிது இரத்தம் வந்தது. சர்க்கரை தண்ணீர் கொடுத்தேன். மாரி பிஸ்கட் கொடுத்தேன். எதுவும் சாப்பிட மாட்டேன்கிறாள். இடியாப்பம் தான் சிறிது சாபிட்டாள். என்ன செய்வது என்று தெரியவில்லை....உதவுங்கள் தோழிகளே.....

லாவண்யா

எனக்கு யாரவது பதில் சொல்லுங்கப்பா.....ப்ளீஸ்

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் லாவண்யா இப்போது நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா? மோஷன் பச்சையாக இருப்பதால் மருத்துவரிடம் சென்று மோஷன் டெஸ்ட் செய்து அமீபியாசிஸ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தாமதிக்க வேண்டாம். பயமுறுத்த சொல்லவில்லை. ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணப்படுத்துவது சுலபம். இந்தியாவில் இப்போது மழை சீசன் என்பதால் இதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பதில் அளித்தற்கு நன்றி கவிதா. நான் தற்பொழுது இந்தியாவில் தான் இருக்கிறேன். எப்பொழுது அவளுடைய மோஷன் அடர்ந்த பிரவுன் கலராக உள்ளது. அவளுடைய மருத்துவர் வார இறுதியில் இருக்க மாட்டார். ஆகையால் தான் தோழிகளிடம் கேட்கலாம் என்று வந்தேன். கட்டாயம் மருத்துவரிடம் அழைத்து செல்லுகிறேன்.
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்