அறுசுவை - சில ஆச்சர்யம்

அறுசுவை இணைய தளத்தால் சில ஆச்சர்ய சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நடந்து இருக்கலாம்.அப்படி நடந்து இருந்தால் இந்த இழையில் ஸ்நேகிதிகள் பறிமாறிக்கொள்ளுங்களேன்.

என் மகனுடன் பல வருடங்களாக தாரிக் என்றொரு மிக நெருங்கிய நண்பன்.அவன் எங்கள் வீட்டிற்கும்,என் பையன் அவனது வீட்டிற்கும் சென்று வருவது தினமும் நடக்கும்.அவன் எங்கள் வீட்டிலும்,என் பையன் அவனது வீட்டிலும் சாப்பிடுவது,சேர்ந்து படிப்பது,வெளியில் சுற்றுவது இப்படி மிகவும் நெருங்கிய ஸ்நேகிதர்கள்.
தாரிக்கின் வீடு எங்கள் ஏரியாவிலே இருந்தும் அவனது அம்மாவை நான் ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் அடிக்கடி பையன்களின் படிப்பை பற்றி விவாதிக்க போனில் பேசுவோம்.அவரது பெயரை எனக்கு தெரியாது.தாரிக்கின் அம்மா என்பது மட்டுமே தெரியும்.சமீபத்தில் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பொழுது என் பெயரை கேட்டார்.

நான் சொன்னதும் எங்கேயோ கேட்டது போல் உள்ளதே என்று யோசித்தவர்,ஞாபகத்திற்கு வராமல் போனை வைத்தவர்,அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் போன் செய்து"அறுசுவை தளம் தெரியுமா"என்றார்.
"அறுசுவையில் மன்றத்தில்,கூட்டாஞ்சோறில் வரும் ஸாதிகாவா நீங்கள்?"என்றார்.
"ஆமாம்"என்று வியந்தேன்.
"நான் பானு கனி.நானும் கூட்டாஞ்சோறு உறுப்பினர்தான்"என்ற பொழுது வெகு ஆச்சர்யம்.அவரது குறிப்புகள்,மனறத்து உரையாடல்கள் அனைத்தையும் விடாமல் படித்தேன்.

அவர் அறுசுவையில் வெளியிட்டு இருந்த போட்டோ பக்கட் லின்க்கை பார்வையிட்டு என் கணவரிடம் காட்டிய பொழுது பானு கனியின் கணவரும் என் கணவருக்கு மிகவும் தெரிந்தவர் என்பது இன்னும் ஆச்சர்யமாகி விட்டது.இப்பொழுது நானும் பானுகனியும் மிகவும் நெருக்கமாகி விட்டோம்.

நேற்று பக்ரீத் அன்று ஒரு ஷாபிங்க் மாலில் நடந்த சம்பவத்தை அடுத்த பதிவில் போடுகின்றேன்.ஸ்நேகிதிகளின் அனுபவங்கள் அவசியம் பதியுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

படிக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. அறுசுவையில் எனக்கும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கு. அதெல்லாம் அப்பப்ப எழுதறேன். :-)

அப்புறம், பாஸ்வேர்டு ஒர்க் ஆகலைன்னு தொடர்ந்து எனக்கு மெயில் அனுப்பிக்கிட்டு இருக்கிற பானு கனி அவங்களான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. :-) அவங்கதானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. நான் அனுப்பற பதில் அவங்களுக்கு கிடைக்கலேன்னு நினைக்கிறேன். நானும் ரெண்டு மூணு டைம் ரிப்ளை பண்ணினேன். அவர் தொடர்ந்து அதே மெயில் அனுப்பறதுனால, நான் அனுப்பற மெயில் கிடைக்கலேன்னு தெரியுது. அவங்களா இருந்தா, இன்னமும் பாஸ்வேர்டு கிடைக்கலேன்னா, arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் க்கு ஒரு மெயில் அனுப்பச் சொல்லுங்க.

அறுசுவையில ஒரு சிலரது எழுத்துக்களை ரொம்ப ரசிச்சு படிப்பேன். அப்படி நான் படிச்சதுல ஒருவர் திருமதி.பானு கனி. எழுதினது கொஞ்சம்னாலும், ரொம்ப நகைச்சுவையா எழுதுவாரு. என்னை பாபு அண்ணான்னு விளிச்சு எழுதினது அவரோட நகைச்சுவையின் உச்சக்கட்டம். ;-) அவர் அறுசுவையில பதிவுகள் போட்டு ஒரு வருசத்துக்கு மேலே ஆச்சுன்னு நினைக்கிறேன். அவரை மறுபடியும் உள்ளே கொண்டு வர ஏற்பாடு பண்ணுங்க.

சுவாரசியமான, நல்ல தலைப்பு. ஸாதிகா & பானுகனி குடும்பத்தார் நட்பு இனிதே தொடர என் வாழ்த்துக்கள்.

இதோ ஸாதிகாவுக்காக ஒரு 'கதை.'

நான் தினமும்!! பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் என் அம்மாவோடு போனில் கதைப்பேன். நான் கதைக்க மறந்தாலும் அவங்க கதைப்பாங்க. அப்படி ஒரு நாள், 'பெயரில் பாதி தெரிஞ்ச மாதிரி இருக்கே! நீங்கதான் அறுசுவைல அரட்டை அடிக்கிற இமாவா?' என்று கேட்டாங்க. நானும் பதிலுக்கு 'நீங்கதான் இமா துரத்துற செபாவா?' என்று கேட்டு வைத்தேன். அப்போதான் தெரியும் அவங்க என் அம்மா என்று. இப்படியாக எங்கள் நட்பு! இன்று வரை இனிமையாகத் தொடருகிறது. என் 'கதை' உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா அறுசுவையோரே!!

யார் யாரெல்லாம் வந்து கதை சொல்லப் போகிறீர்கள் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கெதியா வாங்கோ. :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஷாதிகா!
ரொம்ப சுவையான இழையினை ஆரம்பிச்சிருக்கீங்க. எனக்கும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் அறுசுவை மூலமாய் நடந்திருக்கு.
இப்ப கொஞ்சம் வீட்டில் வேலை இருக்கு. முடிச்சிட்டு வர்றேன்.

இமா, வர வர தாங்கமுடியல! ( அட, சிரிப்புதாங்க தாங்கமுடியல)
எங்க பார்த்தாலும், ஒரே காமெடிப்பதிவாய் போட்டு தாக்கறீங்க! (எப்பிடிங்க இப்பிடியெல்லாம்???, உக்காந்து யோசிப்பீங்களோ???? (:-)

ஷாதிகா அக்கா நிஜமாவே உங்கள் அனுபவத்தை பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது.

இமா அம்மா நீங்க செபா அம்மாவை சந்தித்த "கதை" நன்றாக இருந்தது. ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே குறும்பு.

நான் சுவாரசியமான அனுபவத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறேன் :-). சிங்கையில் உள்ள தோழிகளை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தால் என்று ஆசையாக கற்பனைக்குதிரையில் பறப்பதும் உண்டு:-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி அட்மின்.அவசியம் உங்களுக்கு நேர்ந்த சுவாரஸ்யமான சமபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு பாஸ் வேர்ட் கேட்டு மெயில் பண்ணுவது அதே பானு கனியேதான்.சற்று முன் பேசியபொழுது மன்றத்தை வந்து பார்த்து விட்டு போன் செய்கிறேன் என்றார்.இனி அறுசுவையில் பழைய படி ஐக்கியமாகி விடுவார் பானுகனி.

சகோதரி,இமா.உங்கள் அனுபவம் இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது.நன்றி.

தங்கை சாய்கீதா,நீங்களும் வந்து பதியுங்கள்.கண்டிப்பாக எல்லோரது வாழ்விலும் அறுசுவை சம்பந்தப்பட்ட ஆச்சர்யமான,சுவாரஸ்யமான,ஜாலியான,சுவையான மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்து இருக்கும்.வாருங்கள்.பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அறுசுவையில் சேர்ந்த புதிதில் வெளியே கடைகண்ணிக்குப் போகும்போது இது அவராக இருக்குமோ, இல்லை இவராக இருக்குமோ என்று ஆசையாகப் பார்ப்பேன். யாரையுமே பார்க்க முடியாததினால் அந்த ஆர்வமும் குறைந்துவிட்டது.

சென்ற முறை ஊர் வந்தபோது சிலரிடமவது அட்லீஸ்ட் ஃபோனிலாவது பேசிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதுவும் முடியவில்லை. :-(

உங்கள் எல்லாருடைய அனுபவங்களையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன், நானும் ஒருநாள் இதில் எழுதுவேன் என்ற நம்பிக்கையோடு!

இமா, உங்களுக்கு செபா மாதிரி, எனக்கும் ஒருத்தங்க அறுசுவையில இருக்காங்களே!! ஆனா, சொல்லமாட்டேனே!!

இன்னைக்கு இந்த இழையைப் பாத்ததும் இமா கிட்ட போன்ல பேசினேன் :) அப்போ தான் தெரிஞ்சது அவங்க தான் என்னோட (எனக்குப் மிகவும் பிடித்த :) ) பழைய :) ஆசிரியைன்னு! மிக்க மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது! . செபா தான் அவங்க அம்மாவா? ஒஹ்.. அவங்க என் அம்மாவோட ஆசிரியை ஆச்சே :) நாளைக்கு என் அம்மாகிட்ட பேசும் போது இந்த உண்மை எனக்கே தெரிய வரும் :)

ஸாதிகா - முறைக்காதீங்க, நம்ம கிட்ட கதை விட்ட இமாவைப் பத்தின சிறுகதை - அவ்வளவு தான். மத்தபடிக்கு ஏற்க்கனவே தெரிஞ்சவங்களை சந்திச்ச ஆச்சர்யம் இன்னமும் எதுவும் நடக்கலை :) ஆனா, அறுசுவையில பேசி அறிமுகமாகி அப்புறமா நேர்ல சந்திச்ச ஆச்சர்யம் நடந்திருக்கு :)

இன்னொருத்தங்க மேல எனக்கு ரொம்ப நாளா டவுட் :) அவங்களை பாத்திருக்கொம்ன்னு. ஆனா அவங்க இப்போ பயந்து போயி அறுசுவைக்கு வரதையே நிறுத்திட்டாங்க :)

எனக்கு பயமெல்லாம் இங்க எல்லார்கிட்டயும் நல்லா பேசிட்டு ஊர்ல ஏதாவது பஸ்சு இல்லாட்டி ட்ரைன் சீட்டுக்கு அடிச்சுக்கப் போறோமோன்னு தான் :) அப்ப தெரிய வந்தா எவ்வளவு ஆச்சர்யமா இருக்கும்? :) நினைச்சுப் பாத்தா ஒரே ஆச்சர்யமா இருக்கு :)

மிசஸ் ஹூசைன் - உங்களுக்கு அம்மா இருக்காங்களா அறுசுவையில :) எத்தனை பேரு தான் இப்படி கூட்டமா கிளம்பியிருக்கீங்க? நானும் எங்கம்மாவை ரகசியமா உள்ள வர சொல்லப் போறேன் :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

எங்கோ போட நினைத்த பதிவு, இங்கு தவறாய்ப் பதிந்தது. மன்னிக்க வேண்டும் ஸாதிகா.

‍- இமா க்றிஸ்

அப்பாடா,ஒரு வழியா தம்பியை மிரட்டி பாஸ்வேர்ட் வாங்கியாச்சு.
சாதிகாவுக்கு ஒரு பெரிய ஓஓஓஒ,என்னை மறுபடியும் தலை காட்ட வச்சதுக்கு.அது சரி எனக்கு ஒரு டவுட்டு.....

//அவர் அறுசுவையில பதிவுகள் போட்டு ஒரு வருசத்துக்கு மேலே ஆச்சுன்னு நினைக்கிறேன். அவரை மறுபடியும் உள்ளே கொண்டு வர ஏற்பாடு பண்ணுங்க.//
இதை பாத்தா ஏதோ தேர்தல் சமயத்துல ரவுடியிசம் பண்ணுற தாதாவை உள்ள போட சொல்ற கமிஷனர் தோரணைல இல்ல. வேணாம் இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..

அப்புறம் இதுவும்
//எழுதினது கொஞ்சம்னாலும், ரொம்ப நகைச்சுவையா எழுதுவாரு. என்னை பாபு அண்ணான்னு விளிச்சு எழுதினது அவரோட நகைச்சுவையின் உச்சக்கட்டம். ;-)//
ஹலோ என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே......
எது எப்படி இருந்தாலும் எனக்காக ஸ்பெஷல் கோட்டால பாஸ்வேர்ட்,ஈ மெயில் ஐடி மாற்றி தந்த பாபு தம்பிக்கு, பாபு தம்பிக்கு (எல்லோரும் பாபுதம்பியை அண்டர் லைன் பண்ணிக்கோங்கா) நன்றி.
பாபு(வித் யுவர் பர்மிஷன்) நான் ஆரம்பிச்சு பாஸ்வேர்ட் மறந்ததாலா அனாதயா திரியுர ப்ளாக்குகளும்,ஈ மெயில் ஐடிகளும் அநேகம். இப்பதெரிஞ்சு இருக்குமே என்னுடைய பிரச்சனை.ஆனா அருசுவைல மறுபடியும் வந்தா அதே பெயர்லதான் வருவது என்று இருந்தேன்.(பின்ன நாங்கள்ளாம் அருசுவைல எவ்வளவு சீனியரு).சாதிகாவால அதுவும் நடந்துடுச்சு.ஆனா
காதல் கோட்டை தேவயானி,அஜித் மாதிரி நானும் சாதிகாவும் எப்ப நேரில் பாத்துக்க போரோம்முன்னு தெரியல இவ்வளவுக்கும் எங்க வீடும் அவுங்க வீடும் நடந்து போற தூரம்தான்.

மேலும் சில பதிவுகள்