பட்டிமன்றம்13 "கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறை இந்த காலத்திலும் அவசியமா இல்ல

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். மீண்டும் நானே நடுவராக வந்துவிட்டேன். யாரும் தேர்ந்தெடுக்கவெல்லாம் இல்லை. நானே எனக்கு முடிசூட்டிக் கொண்டேன் :-)).

இந்த முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு நம் அன்பு அட்மின் அண்ணா பட்டிமன்ற தலைப்புகள் இழையில் பரிந்துரைத்த தலைப்பு. உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு :-). நம்மில் நிறைய பேருக்கும் இதன் மீது தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஆவல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கான பொன்னான வாய்ப்பு இது. சரி சரி ஃபிலிம் காட்டினதெல்லாம் போதும் தலைப்பை சொல்லுன்னு சொல்றீங்களா?! இதோ தலைப்பு....

"கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டு முறை(reservation) இன்னமும் அதாவது இந்த காலத்திலும் அவசியமா இல்லையா" என்பதே தலைப்பு.

தோழிகள் தங்கள் தரப்பு வாதத்தை வந்து எடுத்து வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். விவாதம் சூடாகவும் சுவையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

உங்களை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறேன். என்னை அம்போன்னு விட்டுடாதீங்கப்பா! வாங்க வந்து கலந்துக்கோங்க!

அவ்வப்போது சூட்டைத்தணிக்க பட்டிமன்றத்தின் சார்பாக இளநீர் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துக் கொண்டு தற்போது விடை பெற்றுக் கொள்கிறேன்.வாழ்க அறுசுவை வளர்க அதன் சிறப்பு! நன்றி வணக்கம் (சே இடைத்தேர்தல்னு அறிவிச்சதுல இருந்து மேடையில பேசற மாதிரியே பேசிக்கிட்டு இருக்கேன். எல்லாம் நம்
தொ(ல்)லைக்காட்சிகள் செய்யும் வேலை.)

அன்புடன்
ஒருவார நடுவர்
கவிசிவா

பின்குறிப்பு:
சூட்கேஸ்களும் பொன்னாடைகளும் அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளப் படும். ஆனால் முடிவு இரு அணிகளின் வாதத்தைப் பொறுத்தே அமையும்.

வாங்க வாங்க பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சு. எல்லாரும் வந்து கலந்துக்கோங்க. கருத்துக்களை அள்ளி விடுங்க.
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் கவிக்கு வாழ்த்துக்கள்.

கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டு முறை(reservation) இந்த காலத்திலும் அவசியமே இல்லை என்பதுதான் என் கருத்து..

வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்க ஏற்பட்ட இடஒடுக்கீடு…..முறை மேலும் வேறுபாடுகளையே உருவாக்குகிறது…..

ஒருவேளை நானும் அரசியலிலிருந்தால் அவசியமே என்றுதான் சொல்லியிருப்பேன்……:-

அதிர்ஷ்ட/துரதிஷ்டவசமாக அப்படி ஏதுமில்லையென்பதால் :))
அவசியமில்லை என்பதுதான் என் வாதம்.:)

மேலும் கருத்துக்களூடன் பிறகு வருகிறேன்.

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவர் அவர்களே!
வாழ்த்துக்கள்!
இந்த முறை நானும் இளவரசி பக்கம் வந்திட்டேன். இடஒதுக்கீடு அவசியமே இல்லை என்ற அணியில்தான் நான் வாதாட விரும்புகிறேன்.
நான் அரசியலில் இருந்தாலும்கூட, ஓட்டுக்காக கூட "இடஒதுக்கீடு அவசியம்" என்று சொல்ல மாட்டேன். ஏன்னா, நாங்கள்ளாம் நேர்மையான அரசியல்வாதியாக்கும். (பாத்தீங்களா! அரசியல்வாதியா இருந்தான்ற கற்பனையிலேயே எவ்வளவு சரளமாய் பொய் சொல்ல வருதுன்னு)

ஏற்கெனவே குளிர்ல நடுங்கிட்டு இருக்கிறவங்களுக்கு தொண்டைக்கு இதமாய் சூடாய் டீ, காஃபி கொடுங்கப்பா. இளநீர் குடிச்சு தொண்டை கட்டிடுச்சுன்னா மைக்கிற்கு பதிலா, அந்த காலத்து ஒலிபெருக்கி வெச்சுத்தான் அலறனும்

இளவரசி முதலில் வந்து பட்டிமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்ததற்கு மிக்க நன்றி.
ஓஹ் நீங்க தேவையில்லை அணியா? ஆனா அரசியல்வாதியா இருந்தா அவசியம்னு சொல்வீங்களா? ஆஹா இது நல்ல கதையாயிருக்கே. நம் நாட்டில் அரசியல்வாதியாக இருக்க எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு :-). சீக்கிரம் ஒரு கட்சியை ஆரம்பிங்க நான் கொ.ப.செ.(அதாங்க கொள்கை பரப்பு செயலாளர்) ஆயிடறேன் :-). இதெல்லாம் சும்மா ஜாலிக்கு. உங்கள் விரிவான வாதத்திற்காக காத்திருக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க சாய்கீதா. உங்கள் தரப்பை வந்து உறுதிபடுத்திக் கொண்டதற்கு நன்றி. நீங்களும் இளவரசி அணிதானா?!
ஐயோ அரசியல்னாலே பொய் னு ஆயிடுச்சே! கடவுளே நீதாம்ப்பா இந்தியாவை காப்பாத்தணும்.

சாய்கீதா சீக்கிரம் வந்து உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைங்க. உங்களுக்காக சூடா மிளகாய் பஜ்ஜியும் மசாலா டீயும் தயாரா இருக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே!
எதிரணியினர் யாராவது வந்தால் நம் வாதத்தினை ஆரம்பிக்கலான்னு பார்த்தா, யாரையுமே காணலியே.
இருந்தாலும் பரவாயில்லை, எதோ கொஞ்சமா பேசிட்டு கிளம்பறேன்.

இடஒதுக்கீடு என்பது ஏற்றதாழ்வுகள் இல்லாத ஒரு சமுதாயத்தினை உருவாக்குவதற்காக முன்பொரு காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.
இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர்களின் ,வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
இதனை ஜாதிஅடிப்படையில் எற்படுத்தியதற்கான முழுக்காரணமே, மேல்தட்டு மக்கள் என்று தங்களைத்தாங்களே சொல்லிக்கொண்டு, குறிப்பிட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர்களை ஒடுக்க நினைத்தவர்களுக்கும் சரிசமமாக அனைத்து மக்களும் முன்னேறவேண்டுமே என்ற உயரிய நோக்கம்தான்.

ஆனால், இப்போது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும், ஒருகாலத்தில் மேல்தட்டு மக்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களுக்கு இணையாக முன்னேறிவிட்டது உலகறிந்த உண்மையாகிவிட்டது.
எந்த நோக்கத்திற்காக இந்த இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதோ, அதனை முழுமையாக அடைந்துவிட்டோம்.
இனியாவது இடஒதுக்கீடு என்பதனை தவிர்த்து, மக்களின் தகுதி அடிப்படையில் அவரவர் திறமையினை பரிசீலித்து கல்வியினையோ, வேலைவாய்ப்பினையோ அளிக்கவேண்டும் என்பது நிறைய பேரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

நடுவர் கவி, நல்ல தலைப்பு. லேட் ஆனாலும் சூட்கேஸுடன் வருவதற்கு முயற்சி செய்கிறேன்:)

மீண்டும் நடுவராக ஏற்றுகொண்டதற்கு பாராட்டுக்கள்...நான் தான் இந்த தலைப்பை எடுப்பதாக இருந்தேன், ஆனால் இது ரொம்ப சென்சிடிவான தலைப்பாக எனக்கு தெரிந்தது, அதனால எதற்கு வம்புனு விட்டுவிட்டேன், அதில் சொல்ல நினைத்த கருத்துக்களை உங்கள் பட்டுமன்றத்தில் சொல்ல வாய்ப்பாக இதே தலைப்பை எடுத்த உங்களுக்கு நன்றி! ரொம்ப தைரியம் தான்!

என் ஓட்டு: கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு முறை இந்த காலகட்டத்தில் கூட எனக்கு தேவையே இல்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை, வேண்டுமானால் சில மாற்றங்களுடன் செய்யலாம் ஆனால் அவசியம் தேவை என்றே எனக்கு தோன்றுகிறது...

சாய்கீதா சொன்னது 100%சரி, இந்த மாதிரி இடஒதுக்கீடு முறை ஏன் ஏற்படுத்தபட்டதுனு தெளிவா சொல்லிட்டாங்க, ஒரு 30வருடங்களுக்கு முன்னால ஒரு கவர்மெண்ட் ஆபிஸ்க்கு ஏதாவது வேலையாக செல்லும் போது அங்க முக்கால்வாசி பேர் மேல்சமுதாய மக்களாக தான் இருந்தார்கள், இப்போ அந்த எண்ணிக்கை குறைச்சிருக்கு, சில நடு மற்றும் கீழ் சமுதாய மக்களையும் பார்க்க முடியுது, காரணம் இந்த இட ஒதுக்கீடுதான், அப்படி இல்லாமல் இருந்திருந்தால் இந்த அளவு வளர்ச்சி கூட இருந்திருக்காது, ஆனால் இது போதாது, இன்னும் கொஞ்சநாள் இந்த முறை இருந்து எல்லோரும் ஓரளாவு சமம் என்ற நிலை வந்த பின்னால இது வேண்டாம் என்பதை பற்றி முடிவு பண்ணலாம் என்பது எனது கருத்து...

இப்போ போன வாரம் தான் பேராண்மை படம் பார்த்தேன், அதில் ரவியோட கேரக்டர் ஒரு நல்ல உதாரணம், இது போல நிறைய வரனும் என்பது தானே எல்லோருடைய விருப்பமும்? தகுதி அடிப்படையில் எல்லோரும் வேலை வாய்ப்பு, கல்வி கொடுக்க முடியாது, ஏன்னா இதுக்கு ஒரு நல்ல உதாரணம் என் வாழ்க்கையில் நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது... என் கூட ஒரு மலைவாழ்குடிமக்கள் பகுதில இருந்து ஒரு பையன் படிச்சான், அவனோட பகுதில இருந்து ஸ்கூல் வர பஸ் வசதி ரொம்ப கம்மிதான், அங்கருந்து காலை 7மணிக்கு ஒரு பஸ்தான் வரும் அதுல தான் ஸ்கூல் வருவான், 7.30மணிக்கு வந்திருவான், 9மணிக்கு வந்தால் போதும் ஆனால் 7.30லிருந்து ஸ்கூல் வெளிய உட்கார்ந்திருப்பான், மழை பெய்தாலும் வெயில் அடிச்சாலும்..இதே மழைனால சில சமயம் பஸ் வராமல் போனால் நடந்தே ஸ்கூல் வருவான், இவ்வளவுக்கு நடுவில் அவன் படிக்கனும், பரீட்சை சமயம் லேட்டா வந்தால் ஃபெயில்தான்... எப்படி படிப்பான்? இவனுக்கு நல்ல வீடு, வசதி எல்லாம் இருந்திருந்தால் அவனும் அப்துல்கலாம் ஆகியிருப்பான், அவனுக்கு மட்டுமில்ல, வசதி குறைவினு வரும்போது இடஒதுக்கீடுனு ஒரு முறை இல்லின்னா எப்படியும் சில பேர் வெளியவரமுடியாது...

இந்தியாவில் மக்கள் எல்லோரும் சமம் இல்ல, அப்படி சமம்னு வரும்போது இந்தமாதிரி சட்டம் எல்லாம் தேவை இல்ல, ஒரு சட்டம், திட்டம் எதுவாக இருந்தாலும் சில குறைகள் இல்லாமல் இருக்காது, அதுபோல அதிகாரிகள் அரசியல்வாதிகள் தப்பு பண்றாங்கனு இந்த இடஒதுக்கீடு தேவையில்லைனு முடிவு பண்ணமுடியாது... தவறுகள் திருத்தபடனும்,தப்புகள் தட்டிகேட்கபடனும், எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியாது...

அதேபோல சில உயர்சமுதாய மக்கள் பாதிக்க படுகிறார்கள், எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருந்தப்போ 200/200 வாங்கினாலும் அவங்களுக்கு சில சமயம் சீட் கிடைக்காது, அது வேதனையான விஷயம்தான்,ஆனால் டாக்டர், இஞ்னியர்னு அந்த மாதிரி அந்த குறிப்பிட்ட சமூகத்தில் 1000பேர் இருந்தால் மற்ற சமூகத்தில் 10பேர் கூட இருப்பதில்லை, இந்த ஏற்றதாழ்வு மாறனும்...அதுவரையாவது இந்த இடஒதுக்கீடு தேவைதான் என்றுகூறி முடிக்கிறேன்.. மீண்டும் சில கருத்துக்களோடு விரைவில் சந்திப்போம்...

குறிப்பு: யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும், மேலும் நான் யாரையும்(சமூகம், சாதி) குறிப்பிட்டு சொல்லவில்லை,

அன்புள்ள நடுவர் கவிசிவா மற்றும் எதிரணித் தோழியர்களே, வணக்கம்..
கல்வி வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டு முறை இந்த காலத்திலும் அவசியமே.. என்ற அணியில் வாதிட வந்துள்ளேன்.. அக்காலத்தில் இருந்த ஜாதிப் பாகுபாடுகள், உரிமை மறுப்புக்கள் இக்காலத்தில் குறைந்து இருப்பது போல் தோன்றினாலும் முழமையாய் மறையவில்லை என்பதே உண்மை..
கல்வி நிலையங்களில் பணம் அல்லது இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று இருந்தால் இடம் கிடைக்கும் என்பது போல சூழல் உருவாகிறது.. எல்லா சமூக மக்களும் ஒன்றாக படிக்கலாம் என்ற உரிமையை வைத்து கெள்விகள் கேட்கப் படலாம்.. போராடலாம்..
ஆனால், சட்டத்தினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.. எல்லோரும் அறிந்த ஒன்றே.. எவ்வளவு கல்வி நிலையங்கள் புற்றீசல் போல.. ஒன்று பணம் படைத்தவர் அல்லது நம்மாளுங்கப்பா வசதி இல்லாதவன் ஆனால், படிப்பில் சூரப் புலி.. எப்படியாவது இடம் ஒதுக்கித் தரனும்.. இதெல்லாம்.. சாதாரணமாக நடக்க கூடியது.. சட்டத்தினால் மட்டுமே எல்லா சமூக மக்களும் ஒன்றாய் செயலாற்றும் சூழலை உருவாக்க முடியும்...
..ஒவ்வொரு சமூகத்திலும் ஏழைகளுக்கு மட்டும் என வேண்டுமானால் இட ஒதுக்கீடு சட்டம் செய்யலாம்.. குடி நீர் முதல் குடும்ப அட்டை வரை, துவக்க கல்வி முதல் கல்லூரி மேற்படிப்பு வரை எல்லாமே வியாபாரம் போலாகி விட்ட சூழலில், ஊழல் பெருகி விட்ட சூழலில் பொருளாதார வசதியின் அடிப்படையில் கண்டிப்பாய் இட ஒதுக்கீடு சட்டம் அவசியமே என்று வாதத்தை முன் வைத்து செல்கிறேன்...
இதை சொல்ல அரசியல் வாதியாக வெல்லாம் இருக்க வேண்டாம்.. மாத வீட்டு வாடகையே சம்பளத்தில் பாதி கொடுக்கும், சிபாரிசு கேட்கக் கூட தம் சமூகத்தில் வசதி படைத்த பெரியமனிதர்(அரசியல்வாதியாகவும் இருக்கலாம்..) இல்லாத சமூகத்தில் உள்ள தகப்பன் தன் பிள்ளையை எப்படி படிக்க வைப்பான் என்று யோசித்துப் பார்த்தாலே போதும்..

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

இடஒதுக்கீடு சாதி/மத/பொருளாதர அடிப்படையில் கொடுக்கப்பட்டால் அதுக்கு அவசியமில்லை.
ஏனென்றால் இன்று சாதி /மத வேறுபாடுகளில்லாமல்தான் நாம் நட்பு பாராட்டிவருகிறோம்..
.இன்றைய கால கட்டத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே…அந்த வேறுபாடுகள் வெளிச்சம் போட்டு காட்டப்படுகின்றன.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி/வேலைவாய்ப்பு நிறுவனங்கள்தான் அந்த வேற்றுமையை உருவாக்குகின்றன
உதாரணத்திற்கு உயர்ந்த சாதியை சேர்ந்த ஒரு மாணவன் 90 % வாங்கியும் இன்சினியரிங்க் இடம் கூட கிடைக்காமல் போவதும்,80% வாங்கியபோதும் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவனுக்கு மெடிக்கல் இடம் கிடைப்பதும்,
மாணவர்கள் மனதில் காழ்ப்புணர்ச்சியை உருவாக்குவதோடு ,ஒரு நல்ல திறமையுள்ள மாணவன் பிறந்த சாதியின் காரணமாய் நிராகரிக்கப்படுவதும்,
அவனைவிட திறமைகுறைந்த மாணவன் அதே சாதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதும் கல்வியின் தரத்தையும் குறைக்கிறது…வேலை வாய்ப்பிலும் இதே கதைதான் தொடர்கிறது……இதுபோன்ற சலுகைகள் நம் நாட்டின் பொருளாதரத்திலும் சீர்குலைவை உண்டாக்குகிறது.
மேலும் பொருளாதர அடிப்படையில் இடஒதுக்கீடும் முழுமையாய் ஏற்புடையதன்று.
ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் என்ற முறையில் தாழ்ந்தவனுக்கு உதவ எண்ணினாலும்,அடிப்படை கல்விக்கான நிதி உதவியை செய்யலாம் அதுவும் எல்லா தரப்பினருக்கும் ….(ஏனென்றால் தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர்கள் எல்லாருமே ஏழைகளும் அல்ல…உயர்ந்த வகுப்பில் பிறந்தவர் எல்லாம் பணம் படைத்தவரும் அல்ல)
அந்த உதவியின் பேரில் முன்னுக்கு வரும் திறமைசாலிகளுக்குதான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
நடுவரே ஒரு சோடா வேணும் எங்கப்பா எதிரணியில யாரையும் காணோம்..

சீக்கிரம் வாங்கோ…
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்