கறிவேப்பிலை குழம்பு

தேதி: December 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (10 votes)

கறிவேப்பிலையில் விட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் நிறைய உண்டு. இது முடி வளரவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், பசியை தூண்டவும் உதவுகிறது. இது புற்றுநோய், இதய மற்றும் நுரையீரல், கண் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து என சொல்கிறார்கள்.

 

கறிவேப்பிலை – அரை கப்
சின்ன வெங்காயம் - 20
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
சிகப்புமிளகாய் - 4
பூண்டு - 2 பல்
இஞ்சி – சிறுத்துண்டு
கட்டிப்பெருங்காயம் - சிறுத்துண்டு
வெங்காய கறி வடகம் – ஒரு துண்டு
கடுகு - தாளிக்க
நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு
உப்பு – தேவைக்கு


 

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ஊற வைத்த புளியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைக்கவும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கட்டி பெருங்காயம், வெங்காய கறி வடகம் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி விடவும்.
வதக்கிய பின்னர் ஊற வைத்த புளி தண்ணீர் மற்றும் மிக்ஸியில் அரைப்பு கழுவிய தண்ணீர்(2 கப்) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை சுண்டியதும் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார். இந்த குழம்பு சாதம், இட்லி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இளவரசி கறிவேப்பிலை குழம்பு பார்க்க நான்றா இருக்கு நான் சொய்து பார்போன் எனக்கு கறிவேப்பிலை துவைல் மட்டு தான் செய்யதேரியும்

ஹாய் இளவரசி! உங்கள் கருவேப்பமிலை குழம்பு பார்க்க நன்றாக இருக்கின்றது. நான் ஒரு முறையேனும் இப்படி செய்த்ததில்லை. அனால் சாப்பிட்டிருக்கின்றேன். இப்போது ரேசப்பி கிடைத்துள்ளது, செய்து பார்க்க வேண்டியதுதான்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரோஜா,அழகான பெயர்.....பஹரின்ல இருக்கீங்களா....தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ரோஜா..

யோகா சுகமா இருக்கீங்களா?இந்த குழம்பு நல்ல சுவையா இருக்கும்.செஞ்சு பாருங்க...பிரியாணி நல்லா வந்ததா?மகிழ்ச்சி.....தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்...
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி,அம்மா கறிவேப்பிலை துவையல்,பொடி எல்லாம் செஞ்சு கொடுப்பாங்க.நான் சாப்பிடவே மாட்டேன்.

உங்க குழம்பு பார்த்தவுடனே சாப்பிடனும் போல இருந்துச்சு.சரி,டிரை பண்ணிப் பார்ப்போம்னு செய்தால்,ரொம்ப சூப்பராயிருந்துச்சு.நான் கொஞ்சம் அதிகமாவே சாப்பிட்டேன் இளவரசி.வீட்டிலயே கறிவேப்பிலை இருக்கு.இனிமேல் அடிக்கடி செய்திட வெண்டியதுதான்.ரொம்ப நன்றி இளவரசி.சத்தான அதே சமயம் சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க.வாழ்த்துக்கள் இளவரசி.

அன்புடன்
நித்திலா

all is super