cold bcoz of apple?

என் மகனுக்கு வயது 21/2.சளி தொந்தரவு அதிகம். ஆப்பிள் கொடுப்பதால் சளி கூடுகிறது என்று நினைக்கிறேன்.அவிக்காமல் பழத்தை துண்டுகளாக்கி மிக்சி ல் அடித்து கொடுப்பேன்.இது சரி தானா?

மேலும் சத்து மாவு கஞ்சி ல் பன்ங்கற்கண்டு கலந்து கொடுப்பேன்.இது சரி தானா?

சளி பிடித்தால் பால் வேண்டாம் என்கிறார்கள்.அப்படியா?

தயவுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கும் புதிய தோழி.

ஹாய் பத்மாவதி, உங்கள் குழந்தைக்கு ஆப்பிள் கொடுப்பதால் சளி வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. எப்போதும் ஆப்பிள் ஜூஸ் குடித்தால் சளி பிடிக்கிறது என்றால் மட்டுமே அது அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லலாம். சளிப்பிடித்திருக்கும் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதைக் குறைத்து அதிகம் ஜூஸ் கொடுக்கலாம் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அந்த ஜூஸ் கொஞ்சம் வெது வெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். சில்லென்ற ஜூஸை கொடுக்கக்கூடாது. அவனுக்கு கொடுக்கும் சுடுதண்ணீரில் நிறைய காய்ந்த திராட்சையை போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கலாம் அல்லது பாலில் மஞ்சள்தூள், காய்ந்த திராட்சை, சித்தரத்தை(நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முறை இரவு மட்டும் கொடுத்தால் போதும். இது தவிர்த்து அடிக்கடி, லேசான சூடுள்ள தண்ணீரையும், ஜூஸையும் கொடுங்கள். விக்ஸ் போட்டு ஆவிப் பிடிக்க வையுங்கள். நீர் கோர்த்துக் கொண்டது சரியாகி, மூக்கும் நன்றாக சுவாசிக்க ஏதுவாக அடைப்பின்றி இருக்கும். எது கொடுத்தாலும் வெது வெதுப்பான சூட்டில் கொடுத்தால் அவர்களின் தொண்டைக்கு இதமாக இருக்கும். ஆரஞ்சு , திராட்சை ஜூஸை மட்டும் சளிக் காலங்களில் கொடுக்காதீர்கள். அதற்கு பதிலாக சாத்துக்குடி கொடுக்கலாம். சளிக்கு காய்ந்த திராட்சையை அப்படியே சாப்பிடுவதும் நல்லது. குழந்தைக்கு அதனை சிறு வயதிலிருந்து ஒரு ஸ்நாக்காக கொடுத்து பழக்கப் படுத்துங்கள். தேனும் நல்லது.

ஹாய் பத்மாவதி!
தேவா மேடம் சொல்வதுபோல் ஆப்பிளினால் சளி பிடித்திருக்கும் வாய்ப்பு ரொம்ப குறைவு.
ஆனாலும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த எந்த பழங்களாக இருந்தாலும் அதனை உடனடியா கொடுக்கக்கூடாது.அப்ப கண்டிப்பாக சளி பிடிக்கும். இது ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
பாலில் மிளகுதூள்,சிறிது மஞ்சள்தூள் கலந்து வெதுவெதுப்பாக கொடுக்கலாம்.(இரவு தூங்கும்முன்)
தேனில் சிறிது மிளகுத்தூள் கலந்தும் தினமுமே கொடுக்கலாம்.
சளி இல்லாவிட்டாலும்கூட, இப்போ குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் மிளகு சளிபிடிக்காம பாதுகாக்கும்.
ஃப்ரிட்ஜில் இருந்து (ஏற்கெனவே காய்ச்சிய பாலை) எடுத்த பாலை மறுபடியும் நன்றாக சூடு பண்ணி, குடிக்கும் அளவில் ஆறவைத்து கொடுக்கவும்.
சளி இருக்கும்போது, மாதுளை கொடுக்கக்கூடாது.
இரவு தூங்கும்போது, நெஞ்சிலும்,முதுகிலும் விக்ஸ் போட்டு வார்மாக தேய்த்துவிடவும்.
சளி பிடித்தால் பால் தராமல் இருப்பது நல்லதுதான். குழந்தை ஆசைப்பட்டால் பாலை திக்காக அப்படியே தராமல், தண்ணீர் கொஞ்சம் சேர்த்து,சர்க்கரை அளவினை குறைத்து தரலாம்.
சத்துமாவு கஞ்சியில் பனங்கற்கண்டு போட்டு தருவதில் தவறில்லை.
உங்கள் குழந்தைக்கு சளி தொந்தரவு குறைந்து, எப்பொதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க ஆசீர்வாதங்கள்!

ஹாய் பத்மா என் குழ்ந்தைக்கும் ச்ளிதான் எப்போதும் பிடிக்கும் நான் அடிக்க்டி வெண்ணீர் நிறைய கொடுப்பேன் கொஞ்சம் விக்ஸ் போட்டு ஆவி பிடிக்க வைங்க சாப்ரான் போட்டு பால் காய்ச்சி கொடுங்க தேவா அக்கா ச்ளிக்கு ஆரன்ஞ்சு ஜீஸ் mix with hot water நல்லது தானே அதில் vitamin c இருக்குல அது ச்ளிய control பண்ணும்ல அக்கா நான் அதிகம் orange juice தான் கொடுப்பேன் அப்புறம் தேன் கொடுத்தா சளி குறையும் 1/2 ஸ்பூன் கொடுங்க இதெல்லாம் முயற்சி செய்யுங்க நல்லா குறையும்

மேலும் சில பதிவுகள்