குழந்தைக்கு எந்த மஞ்சள்........

ஹாய் ஃப்ரென்ட்ஸ்,
நான் தற்சமயம் US-ல் இருக்கிறேன், என் 6 மாத குழந்தைக்கு மஞ்சள் தேய்த்து குளிக்க வைக்கனும், இங்கு எந்த மஞ்சள் கிடைக்கும்? எதை உபயோகிக்கலாம்? அவளின் நிறம் கூட வேண்டும், அதற்குத்தான் கேட்கிறேன், pls தெரிந்தவர்கள் கூறவும்

US'la manjal kedaikumanu theriyala... En ponnuku kasturi manjal use panren.. Athu india'la irundhu anupuvaanga.. 2 maasathula irundhu kasturi manjalum, payatha maavum kalandhu kulika vaikiren....

hi
thx for ur reply..... neenga orunthanga dhaan naan edhu kaetaalum udanae reply panreenga, romba thx..... actually en ponnuku naan paasipayaru, vetti vaer,poolaangkilangu& manjal idhellaam saerndhu araitha podi thaeichutu irukaen from her birth.... bt ipa voorla irundhu kondu vandhadhu sariyaa pidikka maataengudhu, adaan konjam manjal innum add pannalaamnu kaetaen.... anyway naan indian stores-latry panraen.....maelum idhu patri therinjavanga sollunga pls.....

ean senior thozhihal yaarum enakku help panna maataendreenga? ennai unga friend-aa eathuka maateengalaa....

thx
jayanthihari

ஹாய் ஜெயந்தி!
எப்பிடியிருக்கீங்க? நான் என் பெண்குழந்தைக்கு மஞ்சள் எல்லாம் இதுவரை பூசியதில்லை. அவளுக்கு 7வயது நடக்கிறது.
உங்க பாப்பாவுக்கு 6 மாதம்தானே ஆகிறது. மஞ்சள் பூசினால் கலர் வரும்னு எனக்கு நம்பிக்கையில்லை.
குழந்தை வளர,வளர நிறம் தானாக மாறிவிடும். கவலைப்படவேண்டாம்.
குழந்தை கொஞ்சம் வளர்ந்தபிறகு, ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ், பச்சைக்காய்கறிகள் சாப்பிட கத்துக்கொடுங்க.
நிறைய தண்ணீர் குடிக்க கொடுங்க. என் மகளும் பிறந்து 6 மாதங்கள் நிறம் கம்மியாத்தான் இருந்தாள்.
அதன்பிறகு நல்ல மாற்றம். நான் ஜான்ஸன்&ஜான்ஸன் சோப்புதான் 3 வயதுவரை போட்டு விட்டேன்.
மஞ்சள் பூசினால் கலர் வருமா என்று அனுபவசாலிகள் யாராவது வந்து சொல்லுங்கள்.
அழகு பற்றிய சந்தேகமா தோழிகளே-4ல் போய் நம்ம உமாகிட்ட (பாப்ஸ்) கேட்டுப்பாருங்க. நல்ல ஆலோசனை சொல்வாங்க.
வாழ்த்துக்கள்!

ஹாய் ஜெயந்தி,சஜ்வீ, மஞ்சளால் சரும நிறமெல்லாம் கூடாது. கஸ்தூரி மஞ்சள் உடம்பில் தேய்த்தால் உடம்பில் அதிகம் முடி வராது. மேலும் அது நேச்சுரலான ஆண்ட்டி செப்டிக் வேற. குழந்தைக்கு கலர் பிடிக்கும் மஞ்சளை உபயோகித்தால் அதன் சருமம் முரடாகி சீக்கிரம் வயதான தோற்றம் ஸ்கின்னிற்கு வந்து விடும். மேலும் எப்போதும் ஒரு வித எண்ணெய்ப் பசையான முகமாக தோற்றமளிக்கும். போட்ட கொஞ்ச நேரத்துக்குதான் பார்க்க நன்றாக இருக்கும். மஞ்சள் உபயோகிப்பதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளையே உபயோகியுங்கள். இது பெரியவர்களுக்கும் பொருந்தும். சாய்கீதாலக்ஷ்மி அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரியே. நீங்கள் ஏற்கனவே உபயோகப்படுத்தும் பொடியையே (கலர் கொடுக்கிறதோ இல்லையோ) உபயோகப்படுத்துங்கள். தாலிக்கயிறு, மங்கல நூல், வீட்டில் பொட்டு வைக்க, பிள்ளையார் பிடிக்க மட்டும் கலர் தரும் மஞ்சள் கிழங்குகளை உபயோகியுங்கள். சருமத்திற்கு வேண்டாம். கஸ்தூரி மஞ்சளும் குழந்தைக்கு ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்படுத்தாவிட்டால் மட்டுமே உபயோகியுங்கள்.

ஹாய் கீதா & தேவா madams

நீங்க சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.....மஞ்சள் தேய்த்தால் கலர் கூடும்னு நினைச்சேன்.... இனி மஞ்சளுக்கான தேடுதல் வேட்டையை நிறுத்திட்றேன்.... bcoz நான் நல்ல கலர், என் ஹஸ்ஸு-ம் மாநிறம், ஆனா என் பொண்ணு கொஞ்சம் கம்மி தான்,அதான் மனசு கேக்கல.... neenga solradhu kaekudhu, kuzhandhai aarokiyathai vida color mukiyamaannu, enakkum puriyudhu, irundhaalum oru vorathil chinna varutham avvalavu dhaan..... also US climate-kum color koodumnu ninaikiraen...

சாய் மேடம் நீங்க சொன்ன மாதிரி pops மேடம் கிட்ட இது பத்தி கேட்கிறேன்...
தேவா மேடம் ரொம்ப நன்றி உங்களோட விரிவான பதிலுக்கு....
அநேக அன்புடன்
ஜெயந்தி

சஜ்வீ நீங்க jhonson baby oil apply நல்லா மசாஜ் பண்ணுங்க நீங்க US தான் இருக்கீங்க்பா வேணும்னா பாருங்க உங்க பொன்ணு நல்ல நிறமா வ்ருவாங்க அங்க உள்ள climate உங்க பிள்ளை வள்ர வ்ள்ர நல்ல நிறம் மறுவாங்க கவ்லைய விடுங்க்பா கொஞ்சம் வளரட்டும் அப்புறம் நிறையா ஆரஞ்சு ஜீஸ் fruits salad எல்லாம் கொடுங்க தான் நிறம் மாறும் be happy freind

ஹலோ ஜெயந்தி, சாய்கீதாலஷ்மி & தேவா,
எல்லோரும் எப்படி இருக்கிங்க? தேவா, நீண்ட நாள் கழித்து உங்களை மன்றத்தில் பார்ப்பதில் சந்தோஷம்.

ஓகே, நானும் கொஞ்ச நாளாவே இங்க ஒரு கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். என் கேள்விக்கு ஏதாவது ஏற்கனவே பதில் இருக்கான்னு அறுசுவையில தேடிட்டு இருந்தேன். இதுவரை என் கண்ணில் படவில்லை. இன்னைக்கு இந்த த்ரெட் பார்த்ததும், எனக்கு ரிலேட்டடா இருக்கவும் இங்கேயே கேட்டுடறேன்.

சாய்கீதாலஷ்மி, நீங்க சொன்னமாதிரிதான் நானும், என் மகளுக்கு இது நாள்வரை மஞ்சள் தேய்த்து குளிக்க வைத்ததில்லை. இரண்டு காரணம் - மஞ்சள் எனக்கு (சின்ன வயதிலிருந்தே) ஒத்துக்காது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் போட்டுப்பார்த்து, எரிச்சல் தாங்காமல் விட்டுவிட்டேன்.
இரண்டாவது, முக்கியமானது -‍ என் மகளுக்கு எக்ஸிமா எனப்படும் ட்ரை ஸ்கின் பிரச்சனை அவள் ஒரு வயதிலிருந்தே இருந்தது. அதனாலும், எதுவும் ட்ரை பண்ண விரும்பாமல் (இதில் அவள் அப்பா பயங்கர ஸ்ட்ரிக்ட்) வெறும் பேபி சோப், பேபி லோஷன் என்று யூஸ் பண்ணிவந்தோம். இப்ப அவளுக்கு 9 வயது நடக்கிறது. இப்பவும் அவள் கலர் பற்றிய கவலையெல்லாம் எனக்கு பெரிதாக இல்லை. ஆனால், கை கால்களில் நிறைய முடி தெரிகிறது. அதுவும் அம்மா, அப்பா ஜீன்ஸ்-தான் காரணம் என்றாலும், ஒரு பக்கம் மனது கஷ்டமாக இருக்கு. கொஞ்சம் துணிஞ்சு எதாவது செய்யலாமென்றாலும், அவங்க அப்பா, ரொம்ப கண்டிப்பா தடுத்திடுவார். எனக்கும் பயமா இருக்கும்.

சரி, இப்ப என் கேள்வி என்னன்னா, இப்ப நான் என்ன செய்து அவளுக்கு கை கால்களில் அதிகப்ப்டியா தோற்றமளிக்கும் முடிகளை அகற்றுவது. ஈஸ் இட் டூ லேட் ஃபார் எனி ஹோம் ரெமடி?
தேவா, உங்களைத்தான் முக்கியமா இந்த கேள்வி கேட்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.
கூடவே உமா (பாப்ஸ்) & மற்ற தோழிகளும் அவங்களுக்கு தெரிந்த முறைகளை கொஞ்சம் சொல்லி உதவுவீர்களா?! ரொம்ப ஆவலா இருக்கேன் உங்க எல்லோருடைய ஆலோசனையும் தெரிஞ்சிக்க. ப்ளீஸ் ஹெல்ப் மீ ப்ரெண்ட்ஸ். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் farvin
first of all thx for ur reply...நான் என் குழந்தைக்கு ஆயில் மசாஜ் பண்ணிட்டு தான் இருக்கேன்.... எனக்கு இது பெரிய கவலை எல்லாம் இல்ல, இருந்தாலும் நம்ம friends-கிட்ட கேட்டா சில விஷயங்கள் தெரிஞ்சுக்கலாமேன்னு தான் இந்த பதிவை போட்டேன், நிறைய friends எனக்காக பதில் சொல்லி இருக்கீங்க, ரொம்ப thx......

அநேக அன்புடன்
ஜெயந்தி

hai farvin, sajvee

how r u? farvin Assalaamu alikkum how abt ur cute girl?

en ponnu 6 months old pa. avaluku SMA. siddha mediines try panrom. siddha doctor adviced as to use kadalai maavu and payatham maavu only. so kadalai maavu try panunga. skin soft aagum pa.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

எப்படி இருக்கீங்க? நல்லவேளையா நீங்க பொண்ணுக்கு மஞ்சள் உபயோகப்படுத்தல. எக்ஸிமா என் பையனுக்கும் பொறந்த ஒரு மாசத்துக்கு இருந்துச்சு. அப்படி எக்ஸிமா இருக்கும்போது நாம மஞ்சள் போட்டா அது ரொம்ப பெரிய அலர்ஜியா மாறிடும். இனி உங்க பொண்ணுக்கு கஸ்தூரி மஞ்சள் போடுவது பயனளிக்காது. நீங்க சொன்ன மாதிரி நிறைய குழந்தைகளுக்கு இப்படி அதிக முடி பரம்பரை காரணமா இருக்கும். இப்போதைக்கு அப்படியே விட்டுட்டு பெரிய பொண்ணாணதும் எபிலேட்டர் அல்லது வேக்சிங் னு உபயோகப்படுத்தலாம். இதுல எபிலெட்டர் அதிக முடி வளர்ச்சியை குறைக்கும். லேசர் ட்ரீட்மெண்ட் நிரந்தரமா போக்க இருக்கு. ஆனால் அது நிச்சயம் நல்ல சாய்ஸ்னு சொல்ல மாட்டேன். இயற்கையா நிறைய ரெமடீஸ் புத்தகங்களில் போட்டிருந்தாலும், நிறைய பேர் சொன்னாலும் பலன் தருவது எதுவும் இருப்பதா எனக்குத் தோணல. கஸ்தூரி மஞ்சள் கூட சிறு வயதில் உபயோகப்படுத்தி இருந்தாதான் பலன் தரும். சிலருக்கு முடி எடுக்க விருப்பம் இல்லாட்டி ப்ளிச்சீங் செய்வார்கள். உடம்பு நிறத்துக்கு முடி நிறம் மாறிடும். உங்க பொண்ணுக்கு இப்போதைக்கு ஒண்ணும் பண்ணாம விட்டுடுங்க. இதுதான் என்னோட அபிப்ராயம். இயற்கையா சொல்லபடுகிற சில ரெமடீஸ் சாம்பல், கடலைமாவு கலந்த பேக், தேன் முதலியவை. ரிசல்ட் தந்ததுன்னு இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.

மேலும் சில பதிவுகள்