வனிதாவுக்கு குழந்தை பிறந்தாச்சு

நம் அறுசுவையின் சுவாரஸ்யமான தோழி வனிதாவுக்கு போன மாதம் 27 ஆம் தேதி
(வெள்ளிக்கிழமை) ஆண்குழந்தை பிறந்துள்ளது.

நம் அனைவரின் வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

எனக்கு தெரிந்து வேறு யாரும் இந்த செய்தியை இதுவரை போடவில்லையென நினைக்கிறேன்.

இப்போது தெரிந்தவுடன் உங்களுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்கிறேன்

அன்புடன்
இளவரசி

வாழ்த்துக்கள் வனிதா,

தாயும் சேயும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள். என்ன பெயர், மற்றதெல்லாம் வந்து முடியும் பொழுது சொல்லுங்கோ...

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

வாழ்த்துக்கள் வனிதா.எல்லா வளங்களும்,நலன்களும் பெற்று நீடூழி வாழ என் அன்பான வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ரொம்ப சந்தோஷமாக இருக்கு.தாயும் சேயும் நலமா?இறையருளால் தங்கள் மகன் பல்லாண்டு பல்லாண்டு ச்கல சௌபாக்கியங்களோடு வாழ வாழ்த்துகிறேன்.யாழினி நலமா?மகனுக்கு பெயர் தேர்வு செய்தாச்சா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாழ்த்துக்கள் வனிதா,
தாயும் சேயும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

ஹாய் வனிதா.நலமாக இருக்கீங்கலா.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.தாயும் சேயும் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.நன்றி.அன்புடன் அம்முலு

யாழினிக்கு குட்டி தம்பி வந்தாச்சு! : )

எங்க, நம்ம சுறுசுறு சிரிசிரி(யா) (எல்லாம் ஒரு எதுகை மோனையா இருக்கட்டுமேன்னுதான்!! :)) வனிதாவை கொஞ்ச நாளா அறுசுவையில் பார்க்கமுடியலையேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.

குழந்தை பிறந்தாச்சா! ரொம்ப சந்தோஷம் வனி! உங்க குழந்தை பேரும் புழழும் பெற்று பல்லாண்டு நலமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நீங்களும் உட‌ம்பை ந‌ல்லா பார்த்துக்கோங்க.
பேர் என்ன‌ வைக்கிறீர்க‌ள் என்று முடியும்போது சொல்லுங்க‌. டேக் கேர். Once again Congrats!! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இளவரசி நலமாக இருக்கின்றீர்களா?
வனிதாவுக்கு குழந்தை பிறந்து விட்டதா...மிக சந்தோஷமான விஷயம் தான் சொல்லியிருக்கின்றீர்கள்.
வனிதா தங்கள் உடல் நலமுடன் நல்ல படியாக இருக்கவும்,குழந்தையும் உடல் ஆரோக்யத்துடன் நலமுடன் இருக்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
உடல் நலம் பெற்று மற்ற செய்திகளோடு வாருங்கள்.தங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அன்பு வனிதா,

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் மகனுக்கு இறை அருள் நிறைவாகக் கிடைக்க என் பிரார்த்தனைகள்.

நன்றி இளவரசி.

அன்புடன்
திருமதி. கிறிஸ்

அன்புள்ள வனிதா மிகுந்த சந்தோஷம். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்

வனி. யாழினிக்கு தம்பி பாப்பா பிறந்தாச்சு. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாயும் சேயும் நலமா?
என்ன பேர், நார்மல் டெலிவரிதானே எல்லாம் டைம் கிடைக்கும் போது சொல்லுங்க. உடம்பை பார்த்துகோங்க. இனிமேல் பிஸிதான்...ம்..

மேலும் சில பதிவுகள்