தேதி: December 5, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. கவிசிவா </b> அவர்கள். இந்த குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.
கோழி - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரக பொடி - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கோழியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் கோழித் துண்டுகளை போட்டு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கர் ப்ரஷர் அடங்கியதும் திறந்து கோழித்துண்டுகளை எடுத்து விட்டு தண்ணீரை தனியே எடுத்து விடவும் (இதில் சூப் செய்யலாம்). மீண்டும் கோழித் துண்டுகளை குக்கரில் போட்டு மிளகாய் தூள், தனியாதூள், பெருஞ்சீரக தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் கொதிக்க விடவும்.

கோழி முழுமையாக வெந்து தண்ணீர் அரை பாகம் வற்றியதும் கோழித் துண்டுகளை தனியே எடுத்து ஆற வைக்கவும்.

குக்கரின் உள் இருக்கும் கிரேவியை தனியே எடுத்து வைக்கவும்.

கோழித்துண்டுகளிலிருந்து எலும்பை நீக்கி விட்டு சதைபற்றுள்ள பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம், தக்காளியுடன் உதிர்த்த கோழியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

தனியே எடுத்து வைத்திருக்கும் கிரேவியை சேர்த்து கிளறவும்.(கிரேவி அவரவர் ருசிக்கேற்ப முழுவதுமாகவோ அல்லது பாதியளவோ சேர்க்கவும்). கொத்து பரோட்டா போல் உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்(விருப்பப்பட்டால் மட்டும். ஆனால் சேர்த்தால் சுவையும் மணமும் தனி) சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

சுவையான கொத்துக் கோழி தயார். மிகவும் ட்ரையாக செய்யாமல் சற்று ஈரப்பதத்துடனேயே (கிரேவி போல் இருக்கக் கூடாது) இறக்கி சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடலாம். ட்ரையாக செய்தால் ரசம் சாதத்தோடு மிக சுவையாக இருக்கும்.

Comments
புதுசாக இருக்கே!
கொத்துக்கோழி அருமையாக இருக்கு.நானும் சில சமயம் குழம்பில் மீதியான சிக்கனை இப்படி செய்வதுண்டு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
கவிசிவா
நிஜமாவே கொத்துக்கோழி...கொத்தி கொத்தி
சாப்பிட அழைக்குது.....அருமையான குறிப்பு
வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
hi
this chikken recepi is very nice
நன்றி நன்றி நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆசியா நீங்களும் இது செய்வீங்களா? பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஆசியா
இளவரசி கொத்துக்கோழியை கொத்தி கொத்தி சாப்பிட ஆசையா இருக்கா? இப்பவே செய்து சாப்பிடுங்க. நன்றி இளவரசி.
எரிக் மிக்க நன்றி. செய்து சாப்பிட்டு விட்டு எப்படி இருந்ததுன்னும் சொல்லுங்க.
அன்புடன்
கவிசிவா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!