அரட்டை சதம் அடிச்சாச்சு... 100

அன்பு தோழிகளே, அனைவரையும் இந்த நூறாவது அரட்டை பகுதிக்கு அழைக்கிறேன். இதுவரை வராதோர் கூட வந்து கலந்து கொள்ளவும்.

ஹாய் தோழிஸ்...

தோழிகள் அனைவரும் நலமென நினைக்கிறேன். என்னை எத்தனை பேரு விசாரிச்சீங்கன்னு தெரியல... நானும் எனது குடும்பத்தாரும் நலம்... கொஞ்சம் குளிரால் சற்று உடல் நிலை சரியில்லை.மற்றபடி எல்லாம் ஒகே..........

எல்லோரும் எப்படிப்பா இருக்கீங்க? எனக்கு வந்து பதில் சொல்லிட்டு போங்கப்பா, யாரும் பேரை போடலைன்னு கோவிச்சுகாதீங்க.

அப்புறம் எங்க வீட்டு குட்டி தலைவர் 'கிண்டர் கேர்' செல்ல தொடங்கிவிட்டார் அவருக்கு மூன்று வயது தொடங்கிவிட்டது. நானும் அதற்கேற்றார்ப்போல் மிகவும் பிசியாகவே இருக்கிறேன்.
அனைவரையும் இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் நேரமிருக்கும் பொழுது வருகிறேன்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

அன்புடன் உமா! 100வது பதிவு வந்தாச்சா மிகவும் சந்தோசம். சுகமாக இருக்கின்றீர்களா?மற்றும் தோழிகள் எல்லோருக்கும் ஒரு ஹாய். உங்கள் சின்ன தலைவர் நேசரி தொடக்கி விட்டாரா. அப்போ உங்களுக்கு நிறைய பிரி டைம் கிடைக்கும் என்று நினைக்கின்றேன். இனி அடிக்கடி அறுசுவை பக்கம் வருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.சந்தோசம்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் யோகராணி ஆன்டி, எப்படியிருக்கீங்க? நான் நலம். எனக்கு நேரம் தான் இல்லையே!!! நான் தற்போது வெளியில் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறேன்.
எனக்கு ஞாயிறு மட்டும் தான் விடுமுறை இருக்கிறது.

மற்ற அனைவருக்கும் எனது ஹாய்...எல்லோரும் எப்படிருக்கீங்க?... இப்போவெல்லாம் யாருமே அரட்டை அடிக்கறதில்லை போலிருக்கே...!!!!!

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

ஹாய் தோழீஸ்
எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஹாய் உமா மேடம், நலமா? உங்க பையர்(ஒரு மரியாதை தான்) நர்சரி செல்ல ஆரம்பித்து விட்டாரா? என் வாழ்த்துக்கள்.... நான் 1 மாதம் முன்னாடி தான் அறுசுவை-யில் ஜாய்ன் பண்ணினேன், எனக்கு 7மாத குழந்தை இருப்பதால் ரொம்ப உபயோகமா இருக்கு... இந்த 100-ஆவது அரட்டையில் கலந்துக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷம்..... உங்க பதிவுகள் நிறைய படிச்சிருக்கேன், its very useful to everyone.... சீனியர்ஸ்லாம் எங்க போய்ட்டாங்க, யாரையும் காணோமே?

anaeka anbudan
jayanthi

ஆன்ட்டி, நீங்க தந்த "ஆன்ட்டி":) -ஹிஸ்டமைன் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி ஜீனோ திருப்பியும் தூங்கிப் போயிருச்சி!
பல நாள் கழித்து திடுக்குன்னு கண்ணைத் திறந்து பாத்தா....
கிறிஸ்மஸ் வந்துடுச்சாமே! எல்லாப் பக்கமும் கலர் கலரா, அழகழகா லைட்டைப் போட்டு டெகரேட் பண்ணிருக்காங்க..வெகேஷன் சீசனும் ஸ்டார்ட் ஆயிடுச்சாமே! ஆபீசுக்குக் கூட அப்பப்ப போனா போதுமாம்! :) ஹைய்யா...ஜாலி!! :D

இங்கே பாத்தா உங்கள் கிரீட்டிங் கார்டும் இருந்ததா..ஸோ, ஜீனோவும் சுறுசுறுப்பா முழு வேகத்தில:) அரட்டையிலே களம் இறங்கிடுச்சி..வெகேஷன்ல இருப்பவங்க..இல்லாதவங்க எல்லாரும் வந்து ஜீனோ கூட அரட்டை அடிங்கோ..

படி சந்தனா..உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் ஒரு மாமாங்கம்:) கழிச்சித்தான் பதில் சொல்லுவீங்களா?? ஹும்..உங்களைச் சொல்லித் தப்பில்லை..ஆசிரியர்கள் அல்லவா இதெல்லாம் நீங்க சின்னனாஇருந்தப்ப சொல்லிக் கொடுத்திருக்கணும்?? :):)
சரி, போகட்டும்..படிப்பெல்லாம் ஒழுங்கா போகுதா? [எங்கே போகுதுன்னெல்லாம் கேட்கப் படாது:)!!]

வானதியக்காவ்..என்ன இப்பல்லாம் உங்களை பாகவே முடில? நம்ம பிரபாக்கா,அதிராக்கா யாரையுமே காணோம்?? எல்லாரும் வாங்கன்னு ஜீனோ கூவ:) ஆரம்பிச்சிருக்கு...கூவல் அதிகமாகி உங்க எல்லார் காதிலையும் ரத்தம் வரதுக்கு:) முன்னே ஓடி வாரீர்!! ஓடோடி வாரீர்!!!

மற்றும் இங்கே அரட்டை அடிக்கக் குழுமியிருக்கும் அனைவருக்கும் ஜீனோவின் சினேகிதமான ஹாய்!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஜீனோ, நலமா? என்னத்தை சொல்ல? ஒரே பிஸியாக இருக்கு. காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நேரம் போவதே தெரியவில்லை.

பிரபா, அனாமிகா, சுபா, வின்னி, சந்தனா, மற்ற தோழிகள் நலமா?

இமா, உங்கள் வாழ்த்து மடல் செய்ய வேண்டும். ஆனால் நான் இந்த மாத பட்ஜெட்டை exceed பண்ணி விட்டேன்.அடுத்த மாதம் தான் வாங்க வேண்டும். நேற்று லைப்ரரி-இல் ஒரு பெண் துணியில் மிகவும் அழகான pattern போட்டிருந்தார். நான் எல்லாவற்றையும் விபரமாக கேட்டு எழுதி வந்தேன்.
பார்க்கலாம்..
வாணி

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த வானதியக்காவுக்கு ஜீனோவின் நன்றிகள்! 6 டு 10 இடைவிடாமல் வேலை செய்ய நீங்க என்ன ஜீனோ மாதிரி:) இயந்திரமா வாணி அக்கா?? அப்பப்போ அரட்டை அடிச்சு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்கோ! :D :D

நம்ம வாணி அக்கா போல எல்லாரும் நூலு விட:) :) வாங்கோ! நீங்க எல்லாரும் நல்ல பிள்ளைகள் தானே?? சொன்னபடி கேட்டால் எல்லாருக்கும் [இன்று அறுசுவையின் முகப்பில் இருக்கும்] நர்மதா அக்காவின் ஃபிரெஞ்ச் ப்ரைஸ்..ஸ்பைசி டொமாட்டோ கெச்ச்சப்புடன்! !!
யம்ம்ம்ம்...:P :P :P

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

கண்டவர் எல்லாம் என் அரட்டையின் மீது கண் வைத்ததால் இனி அரட்டை எல்லாம் அடிப்பதில்லை என்று முடிவு செய்து - இமா, வானதி, உமா, ஜீனோ, இளவரசி, ராணி, சுபா
, வின்னியக்கா, தோழிகள், புது வரவு சஜ்வீ ஆகிய அனைவருக்கும் என் அன்பினை தெரிவித்து விட்டு செல்கிறேன். :)

உமா - இதென்னா கேள்வி - யாரும் அரட்டியடிப்பதில்லை என்று - எல்லாருமே :) பிசியாக இருக்கிறோம் :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஏற்கனவே அதிராக்கா இல்லாமல் ஜீனோவுக்கு ஒரு கை சாரி, கால்:) உடைந்த மாதிரி இருக்கு! மூணு கால்ல நொண்டிட்டே :) அரட்டைக்கு வந்தது ஜீனோ!

இப்போ நீங்களும் //இனி அரட்டை எல்லாம் அடிப்பதில்லை என்று முடிவு செய்து // என்று எக்குத் தப்பாக:) முடிவு எடுத்தால் எப்படி:)???
ஜீனோக்கு இன்னொரு காலும் உடைந்த மாதிரியே இருக்கே! அப்புறம் கங்காரூ மாதிரி குதிச்சு குதிச்சுத் தான் ஜீனோவால இங்கே வர முடியும் சந்தனா!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அனைவருக்கும் ஒரு ஹாய்! அரட்டை 100 வந்தாச்சு, முன்னாடி இருந்த வேகம் இல்லையே! காலை வணக்கம் சொல்லும் பிரபா, அனைவருக்கும் அன்பு பரிமாறும் இமா, ரெயின் ஓட்டும் அதிரா, கணக்காளர் ரேணு,, மற்றும் செல்விஅக்கா, ஜலீலா அக்கா, மற்றும் நிறைய பேர் எங்கே??
சந்தனா, வாணி, ஜெயந்தி, ஜீனோ, உமா, யோகராணி எல்லோரும் நலமா?
சந்தனா இந்த குளிருக்கு பட்டிமன்றம் போய் சூடா காத்து வாங்கினீங்களா? எனக்கு தான் அங்க போகவே பயமா இருக்கு.

மேலும் சில பதிவுகள்