புட்டு

தேதி: December 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அரிசி மாவு - 3 கப்
கடலை பருப்பு - கால் கப்
சீனி - 1 1/2 கப்
ஏலக்காய் - 2
தேங்காய் - 1 1/4 கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 8
நெய் - ஒரு மேசைக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக விடவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து பிசறவும்.
மாவு லேசாக ஈரப்பதத்துடன் உருண்டு வரும் போது குக்கரில் வைத்து வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி மாவை உதிர்த்து விட்டு கிளறி விடவும்.
வேக வைத்த மாவுடன் வறுத்த முந்திரி, வேக வைத்த பருப்பு, சீனி, தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கிளறி விடவும்.
சுவையான புட்டு ரெடி. விருப்பப்பட்டால் பரிமாறும் போது நெய் சேர்த்து கொள்ளவும். எளிமையாக செய்து விடக்கூடிய இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. ஹேமா </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹேமா புட்டு பார்க்க நன்றாய் இருக்கின்றது.நானும் உங்கள் முறைப்படிதான் செய்வேன். ஆனால் சீனி சேர்ப்பதில்லை, கறியுடன் சாப்பிடுவோம்.உங்கள் முறைப்படி செய்தால் சிறுவர்களுக்கும் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன்.செய்து பார்த்து விட்டு பின்னுட்டம் தருகின்றேன்.நன்றி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

i made this puttu by keeping in idli vessel. i kept for a long time in tat..it comes like a rubber..wat to do..

everyone is the sculpture of his own lyf!!

சிவப்பு அரிசி மாவில் இதனை செய்யலாமா?

The food which makes you hungry shortly is the suitable food for you.

சுவையான புட்டு திருமதி. ஹேமா
மிக்க நன்றி அவர்கள்.