தோழிகள் தெளிய (+) தெரியப் படுத்தவும்

ஹாய் தோழிஸ்,

என் பொண்ணுக்கு இரண்டு நாட்களாக சளி பிடித்து காய்ச்சல். அவளுக்கு இப்போ 27 மாதங்கள் ஆகிறது.

இப்போது சளி, காய்ச்சலால் எதுவுமே சாப்பிடுவதில்லை. சாப்பிட்டாலும் இருமல் வந்து வாந்தி எடுத்து விடுகிறாள்.இந்த நேரத்தில் எந்த மாதிரியான உணவு வகைகளை சாப்பிட வைப்பது? உதாரணமாக புழுங்கரிசி கஞ்சி கொடுத்தா நீர் பிரியும், காய்ச்சல் குறையும்னு சொல்லுவாங்க இல்லையா! இப்போ அதை போன்ற என்ன என்ன உணவுகளை கொடுக்கலாம்?

அவளுக்கு நான் ஹோமியோபதி முறையே மருத்துவம் பார்ப்பேன். இப்போதும் அதில் தான் பார்க்கிறேன். அவள் எல்ல உண்வுகளையும் கொடுக்கலாம். ஆனால் அவளோ சாப்பிட மறுக்கிறாள் (நீர் ஆகாரம் உட்பட).

""மன்னாஸ்""வழங்கும் சத்து மாவு கஞ்சி கொடுத்தேன். அதற்கு என் தோழி ஒருவர் அதில் கேழ்வரகு கலந்து இருப்பதால் அதை சளி நேரத்தில் கொடுக்கக் கூடாது என்கிறாள். இன்னொரு தோழி அது சிறிய அளவே கலக்கப் பட்டிருக்கும், அதனால் கொடுக்கலாம் என்கிறார். இதனால் நான் குழம்பியுள்ளேன். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை.

அதே போல் பால் கொடுக்ககூடாது என்கிறார்கள். வெறும் பாலாக மட்டும் தான் கொடுக்கக் கூடாதா? பாலில் பூஸ்ட் போன்றவை கூட போட்டு கலந்து தரக்கூடாதா?

தோழிகள் தெளிய (+) தெரியப் படுத்தவும். அனுபவசாளிகளின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

ஜெயா காரம் குழந்தை சாப்பிடும் அளவிற்கு மிளகு ரசம் வைத்து சூடான குழைந்த சாதத்தில் விட்டு பிசைந்து கொடுக்கவும்.வாயும் ருசிப்படும்.சளியும் குறையும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி ஆசியா அக்கா. மிளகு ரசம் தான் இரண்டு நாட்களாக கொடுத்து வருகிறேன். இப்ப கொஞ்சம் ஜுரம் பரவாயில்லை. சளி, இருமல் தான் நிறைய இருக்கு.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சத்து மாவு கஞ்சி மாலை நேரம் கொடுத்தால் சளிபிடிக்கும், அது தான் குழந்தை க்கு பிடிச்சிருக்கு என்றால் (இரண்டு முன்றூ இதழ் குங்குமபூ கலந்து காய்ச்சி கொடுங்கள்) குங்குமபூ சளிக்கு நல்லது, பாலில் கலந்து காய்ச்சியும் கொடுக்கலாம்.

இஞ்சி சாறு தேன் காலந்து கொடுங்கள்,
ஹார்லிக்ஸ் அரை மணிக்கொரு முறை கால் டம்ளர் கொடுக்கலாம்.

Jaleelakamal

மிக்க நன்றி ஜலீலா அக்கா. தாமதமான பதிலுக்கு மண்ணிக்கவும். என்னுடைய கணினி கோளாறு காரணமாக பதில் கொடுக்க இயலவில்லை.

இவள் வயதிற்கு இஞ்சி சாறு எவ்வளவு கொடுக்க வேண்டும். ஜுரம் சரியாகி விட்டது. இன்னும் சளி குறையவே இல்லை.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

இஞ்சி சாறு என் குறிப்பில் இருக்கு பாருஙக்ள்.

இரண்டு ஸ்பூன் அளவு, முன்று நாள் கொடுகக்லாம்.

சளி தொல்லைக்கு, மிளகு சேர்த்த உணவு அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்

Jaleelakamal

Hai! எல்லோரும் சளி காய்ச்சல் நேரத்தி ஜுஸ் கொடுக்ககூடாதென்ரு சொல்வார்கல் காய்ச்சல்லின்போது நிரைய தன்னீரும் சளியின்போது orange juiceம் கொடுத்தல் மிக நல்லது என் குழங்தைகு 2வயது நான் அது தான் கொடுத்து வருகிரென் பாலும் கொடுக்கலாம் liquidஆகாரம் எதுவாக irungthalum நல்லது

மேலும் சில பதிவுகள்