ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - I

தேதி: December 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

பெரிய உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - பொரிப்பதற்கு
மிளகாய்த்தூள்/மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை 1/4 அங்குல தடிப்பில் நீளமான துண்டுகளாக நறுக்கி சுத்தப்படுத்தவும்.
பின்னர் குளிர்ந்த தண்ணீரில் போட்டு 1 - 1 1/2 மணிநேரங்கள் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
பிறகு உருளைத்துண்டுகளை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்தவற்றை ஒரு பேப்பரில் போடவும். (இந்த நிலையில் இவற்றை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு ப்ரீஸரில் வைத்து சேமிக்கலாம்.)
பின்னர் மீண்டும் எண்ணெய் நன்கு சூடானதும் அதனுள் பொரித்தவற்றைப் போட்டு மீண்டும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே அதில் உப்பு, மிளகாய்/மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும். சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார். உடனேயே சாப்பிடவும். நேரம் சென்றால் இளகிவிடும்.

இதற்கு பேக் செய்ய பயன்படும் Russet Potatoes பயன்படுத்தவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

madam,
pototo vega vaitha piragu thane kulirntha neeril poda vendum naan avvaru than seiven romba taste aha irrukkum