தேதி: December 11, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடலை பருப்பு - 1 டம்ளர்
வெங்காயம் - 1 (சிறியது)
பச்சைமிளகாய் - 3
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவைக்கு
இஞ்சி - சிறிய துண்டு (விரும்பினால்)
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கடலை பருப்பை 1 மணிநேரம் ஊற வைக்கவும்
பின் மிக்ஸியில் அதை கொரகொரப்பாக,கெட்டியாக அரைக்கவும் (அரைக்கும் போது தண்ணீர் தெளித்து அரைத்தால் போதும்)
அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு, இஞ்சி,கருவேப்பிலை, கொத்தமல்லி,உப்பு அனைத்தையும் சேர்த்து பிசையவும்
வாணலியில் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி போடவும்
சுடுதண்ணீரில் ஊற வைப்பதால் விரைவில் ஊறிவிடும்