இப்படியும் சில மனிதர்கள்?!%@! என்னவென்று சொல்ல?!
வனிதா ஆரம்பித்த தெரிய வேண்டிய நாகரீகம் த்ரெட்டிலும், ஏற்கனவே இலா, மற்றும் சில தோழிகள் ஆரம்பித்த மற்ற சில இழைகளிலும் பேசிய, புலம்பிய அதே (கிட்டத்தட்ட) விஷயம்தான் ...
இப்படியும் சில மனிதர்கள்?!%@! என்னவென்று சொல்ல?!
வனிதா ஆரம்பித்த தெரிய வேண்டிய நாகரீகம் த்ரெட்டிலும், ஏற்கனவே இலா, மற்றும் சில தோழிகள் ஆரம்பித்த மற்ற சில இழைகளிலும் பேசிய, புலம்பிய அதே (கிட்டத்தட்ட) விஷயம்தான் ...
ஏன் இந்த இரட்டை வேஷம்?!
இப்ப என்கூட ஆபீசில் வேலை பார்க்கும் பெண் இவர். கிட்டத்தட்ட ஒரு 5 வருஷமா ஒன்னா ஒரே டீமில் இருக்கோம். ஆனாலும் புரியவில்லை, இவர் எப்படிப்பட்டவர் என்று. ஏதாவது விஷயம் வேண்டுமென்றால், வேலை விஷயமாகட்டும் அல்லது அவருக்கு தேவையான சொந்த விஷயமாகட்டும் தோண்டி துருவி கேட்டுக்கொள்வார். அப்புறம் சில நாள் கழித்து அந்த டாபிக் பற்றி பேசினால், என்னவோ ஒன்னுமே அதுபற்றி முன்னாடி டிஸ்கஷனே நடக்காததுப்போல பேசுவார். இல்லையென்றால், அதுப்பற்றி அவருக்கே எல்லாம் முன்னாலே தெரியும், சோ அதுபோல செய்துவிட்டதாக சொல்லுவார். கேட்கும் நாந்தான் முழிக்கவேண்டும். அப்படியே இல்லையே அன்று அதைப்பற்றி கேட்டீர்களே, அந்த தகவல் உபயோகமாக இருந்ததா என்றால், அப்படியா? ! எப்போ என்பார். அதற்காக நிஜமாலும் அவர் மறந்துதுவிட்டதாக சொல்லவே முடியாது. நன்றாகவே நியாபகம் இருக்கும். ஏனென்றால், மீண்டும் தேவையென்றால், ஒரு வருடம் கழித்துக்கூட சில விஷயம், அன்று ஒரு நாள் சொன்னீர்களே, என்று அதைக்குறித்து மீண்டும் பேசுவார். : )
திடீரென்று ஒரு நாள் வந்து ரொம்ப நேரம் குழந்தைகள் பற்றி, ஸ்கூல் விஷயம் எல்லாம் கேட்பார். என்னைவிட ஒரு வயது குறைவான குழந்தை அவருக்கு. சரி, கேட்கறாங்களே என்று, நானும் நம் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுவோமென்று எல்லாம் சொல்லி எல்லாம் பேசுவோம், அதற்கு பிறகு மறு நாளே என்னை பார்த்தாலும், ஒரு சின்ன பேச்சோ, ஸ்மைலோ இருக்காது. அவர் யாரோ ஒரு நபர் போல நடந்துகொள்வார். இந்த விஷயம், இதுதான் எனக்கு ரொம்ப எரிச்சல் ஏற்ப்படுத்துவது. அது எப்படி இப்படியும் மனிதர்கள் உண்டா இந்த உலகில்?!! ஒரே மாதிரி குணத்துடன் இருக்க மாட்டார்களா? அது என்ன ஏதாவது வேணுமென்றால் வந்து குழைவாங்க, அவங்க கேட்கறதுக்கு எல்லாம் நாம பதில் சொல்லனும், ஆனால் அவங்க மட்டும் எப்போதும் ஒரே மாதிரி பேசக்கூட மாட்டார்கள். கூடவே எப்பவும் பொய், பித்தலாட்டம். எனக்கு ரொம்பவே வெறுப்பாக இருக்கிறது.
அதேப்போல நன்றாகத்தான் பேசுகிறாரே என்று நாம ஏதாவது போன வாரம் நடந்த சம்பவம் பற்றி கேட்டால், உங்களுக்கு நன்றாகவே நியாபகம் இருக்கு, எனக்கே நியாபகம் இல்லை என்று ஒரு மாதிரியாக குத்தலாக சொல்வார். எனக்கென்னவோ இவங்க விஷயத்தை நியாபகம் வைச்சிக்கறதுதான் ஒரே வேலைப்போல. இது என்ன நல்லாவா இருக்கு?!. ஏன் இந்த இரட்டை வேஷம்?! எதற்கு இந்த குணம்?! இவங்களுக்கு எல்லாம் மனசே உருத்தாதா?!
எனக்கு பல நேரங்களில் ரொம்பவே எரிச்சலா இருக்கும். சரி, எப்படியும் இருக்கட்டும் அவர், என்று நான் எப்போதும்போல பேசினாலும், இந்த, மாற்றி மாற்றி பேசும் குணம் எனக்கு சில நேரங்களில் எரிச்சலாவே இருக்கு.
தோழிகள் இதுப்போல மக்களை பார்த்து இருக்கிங்களா?, அவர்களோடு பழகும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறதா?! இவங்களை எப்படி டீல் பண்ணுவிங்க என்று வந்து உங்க அனுபவத்தை சொல்லுங்க.
ரொம்ப நாள் பொருத்து பொருத்து, இன்னைக்கும் காலைலேயே ஒரு இன்சிடென்ட், சரி இங்கே வந்து உங்களிடமெல்லாம் கொஞ்ச புலம்பினாவது ஆறுதல் கிடைக்குமா என்று வந்தேன் ப்ரெண்ட்ஸ். கமண்ட்ஸ் ப்ளீஸ்.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஹாய் இதனை
ஹாய்
இதனை நாள் இப்படி ஒரு thread இருக்குறது தெரியாம போச்சே.இனி வாரம் ஒரு கேரக்டர் பத்தி எழுதறேன்.
முதல என் கணவருடன் வேலை பார்க்கும் ஒருவர் பற்றி கூறுகிறேன்.அவர் தன்னக்கு தன எல்லாம் தெரியும் என்பாத்து போல பேசுவர்.சில சமயம் அவர் சொல்லும் கருத்துகள் உண்மையாக இருக்கும்.அனால் பல சமயம் நமை நோக அடிக்கும்.உதரணத்திற்கு நாங்கள் ஒரு சமயம் என் கணவரது அலுவலக பார்ட்டி கு போய் இருந்தோம்.அந்த நபர் வரவில்லை.அன்று இந்தியால எங்கேயோ குண்டு வெடிப்பு.அதற்க்கு இவர் சொல்லுகிறார் அங்க அங்க மனுஷங்க செத்துட்டு இருகாங்க,உங்களுக்கு பார்ட்டி வேண்டி இருக்க.மேலும் என் கணவரிடம் நீ எதுக்கு மனைவி யா எல்லருகிடையும் இன்றோடுசே பண்ற அப்படி இப்படி நு நெறைய சொன்னாரா,என்னக்கே ஒரு குழப்பம் ஆகிடுச்சு.இன்னும் நெறைய சொல்லி இருக்கான்.
இப்ப மேட்டர் என்னன்னா போன ஜனவரி அவனுக்கு கல்யாணம் ஆச்சு,அந்த மாசமே அந்த பொண்ணு கற்பமாச்சு.அந்த பொண்ணு ரொம்ப வருஷமா மாப்பிளையே கடைக்கமா கஷ்டப்பட்டு ரொம்ப ஏஜ் ஆகி அப்புறம் கல்யாணம் ஆகி இருக்கு.அதுவும் அமெரிக்க மாப்ளைய அதனால கணவர் என்ன சொன்னாலும் அது கரெக்ட்னு இருக்கு.அன்னிக்கு ஒரு நாள் அதுக்கு போன் பண்றேன் அது சொல்லுது என் கணவரோட ஆபீஸ் பார்ட்டி ல இருக்கேனு?இது எப்படி இருக்கு.
நான் எப்பவும் அவனிடம் நல்ல பேசுவேன்.நான் எது செஞ்சாலும் யார பார்த்து காபி அடிசீங்கனு கேட்பான்,நான் விளையாட விட்டுடுவேன்.என்ன நாங்க இருந்த அபர்த்மேன்ட்ல அவன் பகத்து வீடு.வேற பேச்சு துணைக்கு ஆளு கிடையாது.
என் மகளோட முதல் பிறந்தநாளுக்கு நாங்க disneyland போய் இருந்தோம்.இப்ப அடுத்த வாரம் அவன் மகளுக்கு முதல் பிறந்தநாள் அவனும் அதே disneyland போறான்.இதுல யாரு காபி அடிகிரனு என்னக்கு தெரியல.இன்னும் நெறைய மனிதர்கள் பத்தி இருக்கு.அப்பா அப்பாஎழுதறேன்.
Anbe Sivam
Anbe Sivam
சுஸ்ரீ -
சுஸ்ரீ - இப்படி புலம்பிட்டு போயிருக்கீங்களே :) நீங்க சொல்லுவதை வைத்து பாத்தா - அவர் ரெண்டு வகைகள் ல ஒருத்தரா இருக்கலாம். நான்
பாத்த மனுஷங்களை வைத்து சொல்லறேன் - மத்தபடிக்கு எனக்கும் ஒன்னும் தெரியாது :)
ஒன்னு காரியவாதி - நிறைய பேர் இப்படி இருக்க பாத்திருப்போம் - தேவைப்பட்டா மட்டும் பேசுவாங்க. மத்தபடிக்கு கண்டுக்க மாட்டாங்க. அப்படிப் பட்டவங்கன்னு தெரிஞ்சா - அவங்களுக்காக நீங்க மெனக் கெட தேவையில்லை - தெரிஞ்சிருந்தா சொல்லுங்க, முடிஞ்சா உதவி செய்யுங்க. இல்லைனா விட்டுடுங்க. சிரமப்படத் தேவையில்லை.
அவங்க கிட்டயிருந்து உங்க எதிர்பார்ப்புகளும் குறையும்.
இல்லைனா - கொஞ்சம் பேர் திடீர்ன்னு இதை செஞ்சாகனும் ன்னு நினைப்பாங்க - உடனே அவங்களுக்கு அது நடந்தாகணும் இல்லை அந்த விஷயம் பத்தி தெரிஞ்சாகனும். ஆனா அதுக்கப்புறம் அந்தப் பிரச்சனை அவங்களுக்கு பெருசா தெரியவே தெரியாது. அவங்க அந்த மாதிரி விசாரித்திருக்கலாம், அப்புறம் அந்த விஷயத்துக்கான முக்கியத்துவம் அவங்க மனசுல இருந்து குறைந்திருக்கும். வேற ஏதாவது அவங்க மனசுல முன்னாடி நின்னுட்டு இருக்கும். அவங்களோட இயல்பு அப்படித்தான்னா அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது. நாம கூட இப்படி அப்பப்ப செய்யலாம் - உதா - கேக் பண்ணப் போறேன்னு உடனே அந்த வாரம் அவன் ட்ரே வாங்கி வந்து எங்க வீட்டுல இன்னமும் அப்படியே இருக்கு :)
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
இரட்டை வேஷம்!!!!
வணக்கம் Susri,
இந்த மாதிரி மனிதர்கள் எப்போவும் உண்டு.அவர்கள் பேச வந்தால் - "இப்போ கேட்பீங்க அப்புறம் கண்டுக்காம போயிடுவீங்கனு ஒரு வாட்டி சொல்லுங்க" - அப்புறம் உங்கள பார்த்த முறைசிகிட்டே போயிடுவாங்க ....போன போறாங்க - இவங்களோட பிரிஎண்ட்ஷிப் ஒன்னும் நமக்கு தேவை இல்லை.
hai RSMV
ஹாய் RSMV எப்படி இருக்கீங்க? ஜி மெயிலிலும் பிடிக்கவே முடியவில்லை! குட்டீஸ் ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? ரொம்ப பிசியா?
உங்கள் நம்பர் மிஸ் பண்ணி விட்டேன். நேரம் கிடைக்கும் போது மெயில் பண்ணுங்கள். take care
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
நன்றி சந்தனா!
ஹாய் சந்தனா,
எப்படி இருக்கிங்க? ரொம்ப நாளாச்சு உங்களோட எல்லாம் பேசி. இப்ப ஏதோ படிக்க தொடங்கி இருக்கிங்க என்று தெரிந்துகொண்டேன், (அங்க இங்க கண்ணில படற பதிவுகளில் இருந்து.)
ஹோப் ஐ காட் இட் ரைட்! All the best for your studies!
என் புலம்பலை படிச்சிட்டு ரொம்ப ஆறுதலா பதில் சொல்லியிருக்கிங்க. தேங்ஸ் (தாமததுக்கு மன்னிக்கனும்).
நீங்க சொன்ன இரண்டில் அவங்க முதல் ரகம்தான். 'பக்கா 'காரியவாதி. அந்த வெள்ளிக்கிழமைக்கப்புறம் இந்த வாரம் திங்களன்றே என் டெஸ்க்கிக்கு வந்து ஒரே வழிசல், ஒரு சேட்டிங், ம்யூசிக் டீச்சர் பற்றிய விபரம் வேண்டுமென்றார். நான் எனக்கு தெரிந்த விஷயத்தை (நிறையவே வொர்க் ரிலேட்டடாக விஷயங்கள் சொல்லி கொடுத்து இருக்கிறேன்.) பகிர்ந்து கொள்ள எப்போதுமே தவறுவதில்லை, எதனையும் பதிலுக்கு எதிர்ப்பார்ப்பதும் கிடையாது.
ஆனால் எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல், ஒரு நாள், ஒரு மாதிரி நல்லா பேசி பழகி குழைந்துவிட்டு, அடுத்த நாளே, என்னவோ யாரோ போல நடந்துகொள்ளும் குணம்தான் பிடிக்கவில்லை.
சரி, மனிதர்கள் பலவிதம். அதில் இவங்க ஒரு ரகம் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.
உங்க பதிலுக்கு மீண்டும் நன்றி சந்தனா.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி RSMV!.
ஹாய் RSMV,
பதிலுக்கு மிக்க நன்றி (தாமதமா சொல்றேன், மன்னிக்கனும்.)
நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணாக்கூட என்னால சரியா செய்யமுடியுமான்னு தெரியலை. என்னங்க பண்ணறது? யாராவது எதாவது தெரியலைன்னு கேட்டால், எல்லாம் புட்டு புட்டு வைத்து, தெளிவா சொல்லித்தரும் பழக்கம் கூடவே பிறந்திட்டுதுப்போல. அப்படி இருப்பதில் நிச்சயம் சந்தோஷம்தான்.
ஆனா என்ன, எனக்கு அவஙகளின் முரண்பாடான குணத்தால் அப்பப்ப மனசு கொஞ்சம் கஷ்டப்படும், அப்புறம் சரி, கிடக்கறாங்க. அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் என்று நினைத்துக்கொளெவேன். இப்ப உங்க 'கூலான' ஆறுதல் வரிகளை படிச்சி நல்லா இருக்கு! : ) மீண்டும் நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
னானும் இது
னானும் இது போல் நிறய பார்தீருக்கீர்ரென்