தேதி: December 14, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பீட்ரூட் துருவல் - 2 கப்
கேரட் துருவல் - 2 கப்
சீனி - 2 கப்
பால் - ஒரு கப்
நெய் - கால் கப்
எண்ணெய் - கால் கப்
முந்திரி - அலங்கரிக்க
கேரட் துருவல், பீட்ரூட் துருவல் மற்றும் தேவையான மற்ற பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் பீட்ரூட் துருவல் மற்றும் கேரட் துருவலை போட்டு வேகுமளவு(ஒரு கப்) தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விடவும்.

வெந்ததும் திறந்து ஆவி வெளியேறியதும் எடுத்து உடனே வடிகட்டவும். வடிநீரை சூப்பிற்கு பயன்படுத்தலாம்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரியை வறுத்தெடுக்கவும்.

பிறகு முந்திரி வறுத்த நெய்யுடன் தண்ணீர் வடிகட்டின துருவலை சேர்த்து அதனுடன் ஒரு கப் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.

பால் முழுவதும் வற்றியதும் அதில் சீனியை கொட்டி நன்கு கிளறி விடவும்.

மீதிமுள்ள நெய் மற்றும் எண்ணெயை இடையிடையே ஊற்றி நன்கு கெட்டியாகி சுருண்டு வரும் வரை கிளறவும்.

நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டி முந்திரித்துண்டுகள் போட்டு அலங்கரிக்கவும். சுவையான கிட்ஸ் வெஜ் அல்வா ரெடி.

இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.

Comments
இளவரசி,
கிட்ஸ் வெஜ் அல்வா மகள் சாப்பிடும்படியான போட்டோ அருமை. கேரட்,பீட்ரூட் ஸ்வீட் என்று பிரியாணிக்கு செய்வது வழக்கம்.ஈசியான முறையில் விளக்கியிருப்பது இதன் சிறப்பு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நன்றி ஆசியா
நலமாய் இருக்கிறீர்களா?
தங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.