Paruppu(Dhal)

vanakkam, paruppai nandragah kulaiyeh vegavaippathu eppadi????

nandri,
IndraSuresh..
malaysia

ஹாய் உமா!
ஏற்கெனவே நான்கூட இதுமாதிரி ஒரு கேள்வியை கேட்டு நிறைய பேர் பதில் சொல்லியிருக்காங்க.
பருப்பை அரைமணிநேரம் ஊறவைத்து , 1 டீஸ்பூன் சமையல் எண்ணெயும், கொஞ்சம் மஞ்சள் தூளும் சேர்த்து வேகவைக்கலாம்.'
பருப்பின் அளவைவிட கொஞ்சம் அதிகமா தண்ணீர் வைக்கலாம்.
தண்ணீர் அளவு ரொம்ப அதிகமாக இருந்தாலும் பருப்பு சரியாய் வேகாது.
எப்பிடியிருந்தாலும் கொஞ்சம் நேரம் ஊறவைத்தால் நன்றாக வெந்துவிடும்.
ஊரில் என் அம்மா எல்லாம் விளக்கெண்ணெய் மஞ்சள்தூள் சேர்த்துதான் பருப்பு வேகவைப்பாங்க. பருப்பும் நன்றாக வேகும். சாம்பார், ரசம் டேஸ்டும் நல்லா இருக்கும்.
இன்னும் மற்ற தோழிகளும் வருவாங்க நல்ல ஆலோசனைகள் சொல்ல!

மேலும் சில பதிவுகள்