ப்ரைட் இட்லி

தேதி: December 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

இந்த எளிமையாக செய்யக்கூடிய சுவையான குறிப்பினை <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் உடுப்பி ஹோட்டல் ஒன்றில் சுவைத்து அதேப் போல் வீட்டில் செய்து பார்த்து அதை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இது ஒரு நல்ல அப்பிடைஸர்(appetizer).

 

இட்லி - 5
இட்லி பொடி - 1 - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இட்லியை நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கவும் (4 அல்லது 5 துண்டிகள் வெட்டலாம்)
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இட்லி துண்டுகளை போட்டு சிவக்க பொரிக்கவும்.
பொரிந்ததும் எடுத்து எண்ணெயை வடிய விடவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் போட்டு சூடாக இருக்கும் போதே பொடி மற்றும் உப்பை போட்டு பிரட்டி விடவும்.
சுவையான ஃப்ரைட் இட்லி தயார். அப்படியே சாப்பிடலாம். சாம்பார், தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் இது மாதிரி சின்ன வயசுல செஞ்சு சாப்டுவேன் பாத்ததும் நினைவுக்கு வருது ,ரொம்ப ஹெல்தியான டிஷ்,உங்க பிரசண்டய்ஷன் ரொம்ப அருமை.

KEEP SMILING ALWAYS

பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு