பேன் மற்றும் பொடுகு தொல்லை உதவுங்கள் தோழிகளே

டியர் தேவா மேடம் and அறுசுவை தோழிகளே,

நான் அறுசுவையை கடந்த 6 மாதமாக பார்வையிட்டு வருகிரேன். கடந்த 1 வருடமாக எனக்கு பேன் மற்றும் பொடுகு தொல்லை அதிகமாக உள்ளது. நான் clinc plus shampoo use பன்னுகிறேன். Pls some one recommend anti lice shampoo or home made medice. Plz help me.

நன்றி

உஷா

அன்புள்ள உஷா!

பேன்கள் முற்றிலும் ஒழிய ‘ SELSON ’ என்ற லோஷன் நம் ஊர் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது-அதை வாங்கி அதில் எழுதியுள்ளபடி உபயோகித்தால் பேன்கள் முற்றிலும் ஒழிந்து விடும். பேன்கள் முற்றிலும் ஒழிய, அதை 3 தடவைகளாவது தேய்த்துக் குளிக்க வேண்டியிருக்கும். மீண்டும் அவை வராதிருக்க, மற்ற பெண்கள் அருகில் படுக்காமலும் மற்ற பெண்கள் உபயோகிக்கும் தலையணைகளை உபயோகிக்காமலும் இருந்தால் பேன்கள் சுத்தமாக மீண்டும் வராது.

முதலில் பேன்கள் தொல்லையிலிருந்து விடுபட்டதும் வாரம் இரு முறை 2 மேசைக்கரண்டி கசகசாவுடன் அரை ஸ்பூன் மிளகு அல்லது வால் மிளகு, 1 தேங்காய் கீற்று, சிறிது புளித்த தயிர் சேர்த்து மையாக அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் ஒழிந்து விடும்.

அன்பு மனோ மேடம் நலமா?உங்கள் செல்ல பேரன் நல்லா இருக்காங்கலா?
நல்ல குறிப்பு கொடுத்திருக்கிங்க இங்கே எனக்கு கசகசா கிடைக்காது அதற்க்கு பதில் என்ன உபயோகிக்காலாம்?take carema

அன்புனடன்,
ஜாஸ்மின்.

அன்புள்ள ஜாஸ்மின்!

நீங்கள் நலம் விசாரித்தது மகிழ்வாக இருந்தது. பேரன் [பெயர் விமல் ஆதித்யா] நலமாக ஊரில் இருக்கிறார். இங்கு 2 மாதம் கழித்துத்தான் பேரனும் மருமகளும் வருவார்கள். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்தாலும் பேன், பொடுகு நீங்கி விடும்.

முதல் நாளிரவு 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் தலையில் பரவலாகத் தேய்த்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் 1 மேசைக்கரண்டி வெந்தயத்தை பாலில் ஊற விட்டு மறு நாள் அதை அரைத்து தலைக்குத் தேய்த்து ஊறவிட்டு தலை குளிக்கவும். இப்படி செய்தாலும் பேன், பொடுகு தொல்லைகள் நீங்கி விடும்.

முட்டை வெள்ளையை நன்கு அடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத்தேய்த்து ஊறவிட்டு தலைகுளித்தாலும் பொடுகு நீங்கும்.

மனோ மேடம்,

உங்களின் உடனடி பதிலுக்கு மிக்க நன்றி.

உடனே அந்த ஷாம்பு வாங்கி உபயோகித்து ரிசல்ட் சொல்கிறேன்.

நன்றி

உஷா

நன்றி

உஷா

அன்பு மனோ மேடம் நலமா? பேரன் பெயர் விமல் ஆதித்யா ரொம்ப நல்லாருக்கு.
எனக்கு பேன் தொல்லை இல்லை பொடுகு தொல்லை அதற்கு உங்கள் குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கு
கன்டிப்பாக செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி மேடம்:)takecarema.

அன்புடன்,
ஜாஸ்மின்.

என் கணவருக்கு பொடுகு தொல்லை கூடவே முடி உதிர்தலும் உள்ளது. இதற்கு என்ன செய்ய? பொடுகு நீங்க நீங்கள் கூறியதை அவருக்கு செய்யலாமா?

அன்புடன்
மகேஸ்வரி

அன்புள்ள மகேஸ்வரி!

உங்கள் கணவருக்கும் பொடுகு நீங்க இந்த மருத்துவ முறைகளை பின்பற்றலாம். முடி உதிராமலிருக்க, கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அதை தலைக்குத் தேய்த்து வரலாம். Dabur Amla oil உபயோகித்தாலும் முடி உதிர்வது குறையும். மூலிகை கலந்த ஷாம்பூ, Branded herbal cream, Gel இவற்றை உபயோகிப்பது நல்லது.

en 17 vayathu makanukku pootuku thollai irunthathu.avanukku ammai pottirunthathu.sariyanavutan veepilai araiththu kulikka vaitheen.pooduku sariyakivittathu.neengkalum try panni parungkalaen.maruthani elai,karuveepilai,serththu kaysiya ennai thadavi vanthaal mudi uthirvathu nirkum.nalama mahesh?

radharani

ரொம்ப தேங்ஸ் மனோ மேடம்.....

ராதாராணி மேடம் நான் நலம். நீங்க நலமா?

அன்புடன்,
மகேஸ்வரி

என் அம்மா எனக்கு முடி உதிரும் பிரச்சினைக்காக செம்பருத்தி இலை,பூ, மருதாணி இலை, நெல்லிக்காய் இவற்றை அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி கொடுத்தார்கள். ஆனால் எனக்கு அந்த எண்ணையை பயன்படுத்தினால் பேன் தொல்லை வருகிறது. இப்பொழுது அதை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். பேன் தொல்லை இப்ப இல்லை. இதற்கு என்ன செய்ய?

அன்புடன்,
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்