என் 10 மாத குழந்தைக்கு

என் குழந்தைக்கு 10 வது மாதம் நடக்கிறது.. அவ ரொம்ப சமத்தா இருக்கறா..ஆனா தூங்கறதுக்கு மட்டும் பயங்கரமா அழுது கலாட்டா பண்றா...பிறந்ததில இருந்தே இப்படிதான்..மாறிடும்னு நினைச்சேன்.. ஆனா மாறவே இல்ல.. நானும் என்னவெல்லாமோ முயற்சி பண்ணிட்டேன். இந்த பழக்கத்தை மாத்த முடியல.. நைட் நு மட்டும் இல்ல பகல் நேரத்துல தூங்கறதுக்கு கூட இப்படிதான் அழறா..தூங்க தெரியாம கஷ்டப்படுறாளா... இதுக்கு என்ன பண்றது...

ஒரு தடவை ரொம்ப அழுது தேம்ப ஆரம்பிச்சிட்டா... அவள பாக்கவே பாவமா இருந்தது..சரி ஒரு ட்ரைவ் போலாம்னு கிளம்பினா கார எடுத்த உடனே தூங்கிட்டா..

அத மாதிரி தூளில போட்டாலும் அவ அழுகை சத்தத்துக்கு மேல நம்ம பாட்டு பாடணும்..அப்பதான் அடங்கி தூங்கறா..

எதுனால இப்படி பண்றா..எல்லா குழந்தைகளூமே இப்படிதானா?

ஹாய் சங்கீதா!
எப்பிடியிருக்கீங்க? சில குழந்தைகள் இப்பிடி இருக்க வாய்ப்பு உண்டு.

என் மகள் குழந்தையாக இருக்கும்போது சாயந்திரம் 5 மணிக்குமேல் அழ ஆரம்பிச்சா மணிக்கணக்கில் அழுவா. உண்மையிலேயே இது எனக்கு ரொம்ப கவலையான விஷயமாய் இருந்தது.
என்ன காரணம்னு கண்டுபிடிக்கவே முடியல.

ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனால் அங்கபோய் சிரிச்சு விளையாட ஆரம்பிச்சிடுவா. நிறைய டாக்டர்களை பார்த்து, கடைசியாய் ஒரு டாக்டர் கண்டுபிடிச்சார்.
எங்க வீடு பங்களா டைப்பில் இருந்தாலும் மாடியில் ரூம் கிடையாது. மொட்டை மாடிதான். பகல் பூராவும் கொளுத்தும் வெயில், சாயந்திரத்தில் வீட்டுக்குள் புழுக்கமாய் இருக்கும். குழந்தைக்கு ஏசி சேராது என்று ஏர்கூலர் மட்டும் ரூமில் ஆன் பண்ணியிருப்பேன். அது அவளுக்கு பிடிக்கலை.

இயற்கை காற்று தேவைப்பட்டிருக்கு. அப்பறம் இவளுக்காகவே கிராமத்தில் இருக்கும் என் அம்மா வீட்டிற்கு போனோம்.
சாயந்திரம் 5 மணி நெருங்க,நெருங்க எனக்கு வயிற்றில் புளி கரைய, பயத்தோடவே இருந்தோம்.
கொல்லைப்புறத்தில் இருக்கும் வேப்பமரத்து காற்று முற்றத்தில் வீச, தோளில் போட்டுக்கொண்டு நடக்க, நடக்க அழகாய் துளிகூட அழாமல் தூங்கிட்டா. அங்கேயே பெட்டை போட்டு எல்லாரும் தூங்கினோம் அவளுக்காக.

நிம்மதியாய் இருந்தோம் ஒரு மாதத்திற்கு. அதற்குள் எங்கள் வீட்டிலும் சில மாற்றங்களை செய்து அவளுக்கு நிம்மதியான தூக்கத்தினை கொடுத்தோம்!
உங்க மகளுக்கும் இதுமாதிரி ஏதாவது சிரமங்கள் இருக்கலாம் அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

சில சமயத்தில் என் மகளும், நான் பாடினால் சமர்த்தாய் தூங்கிடுவா.
அதை கேட்கிற கொடுமைக்கு தூங்கிட்றதே பெட்டர்னு நினைச்சாலோ என்னவோ!!!

சங்கீதா!
எல்லாக்குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க. என் கணவரின் அண்ணன் மகள், துளி சத்தம் இருந்தாலும் தூங்கமாட்டா.

என் மகளுக்கு, இப்பவும் வீடு ரொம்ப அமைதியா இருந்தா தூக்கம் வராது.
என் தோழி ஒருவரின் மகனுக்கு, டிவி சத்தம் கேட்டுட்டே இருக்கனும் அப்பதான் தூங்குவார்.
சில குழந்தைகள், சாப்பிட அடம் பிடித்து, வயிறு நிறையாமல் இருந்தாலும் தூக்கம் வராது.

இன்னொரு உறவினரின் குழந்தைக்கு யாராவது பேசிக்கொண்டிருந்தால் பிடிக்காது. தூங்கமாட்டார். ஆனா டேப் ரெகார்டரில் மெல்லிய ஒலியில் ஏதாவது பாடல்கள் போட்டால் உடனே தூங்கிடுவார்.

உங்கள் குட்டிப்பொண்ணு இது மாதிரி ஏதாவது ஒரு வகையினை சேர்ந்தவராய் இருப்பாங்க.
என்னவோ தெரியல. உங்க பதிவினை படிச்சதும் என் தூக்கம் போச்சு.என் மகள் தூங்குவதற்கு பட்ட கஷ்டங்கள் ஞாபகம் வந்திடுச்சு!

Dear சங்கீதா ,

என் குழந்தையும் 7 மாதம் இருக்கும் போது அப்படிதான் அழுதாள். எதற்கு அழுகிறாள் என்றே தெரியாது. டாக்டர் கிட்ட கேட்டால் வெயில் காலம் அப்படிதான் இருக்கும் என்றார். இரவு 9 மணி ஆனாலெ வயிற்றில் புளியை கரைக்கும்.ஒரு வேளை பசிக்காக அழுகிறலோ என நினைத்து பின் அவளுக்கு இரவு 9 மணி அளவில் வயிறு நிரய Ceralac கொடுத்து தூங்க வைத்தேன். பிறகு தான் அவல் அழுகை ஒய்ந்தது. இப்ப அவளுக்கு 1 வயது.அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன். உங்கள் குழந்தையும் பசிக்காக கூட அழளாம். இதை try செய்து பாருங்கள்
நன்றி

உஷா

நன்றி

உஷா

ஹாய் சாய்கீதா ,

இவளும் இப்படிதான் வீட்டுக்குள்ள போனாதான் அழறா.. வெளியில இருந்தா வேடிக்கை பார்த்துட்டு சமத்தா இருக்கறா.. நீங்க சொன்ன மாதிரி என்ன காரணம்னு கண்டுபிடிக்க முயற்சி பண்றேன். நீங்க அக்கறையோட பதில் சொன்னதுக்கு நன்றி

உங்க வீட்டுல என்ன மாதிரியான மாற்றங்கள் பண்ணிங்க.. எனக்கு உபயோகப்படும்னா சொல்லுங்க...

நேத்தே உங்களுக்கு பதில் அடிச்சேன்..ஆனா பதிலளி option எனக்கு இல்ல...விட்டுட்டேன்.. இன்னைக்குதான் அந்த option கிடைச்சது...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஹாய் உஷா,

முதல்ல நானும் பசினாலதான்னு நினைச்சேன்... ஆனா அவளுக்கு தூக்கத்துக்குதான் அழறானு தெரியறது...ஏன்னா அவளுக்கு தூக்கம் வந்தா 2 கண்ணையும் தேய்ப்பா..அப்பதான் இந்த அழுகை..

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

amma bagvan thunnai

அட என் குழந்தைக்கு அடுத்த மாதம் ஒரு வருடம் பூர்த்தி ஆவுதுங்க.. அவளுக்கும் தூக்கம் நாவே பிரச்சனையை தாங்க.. அவள் பிறந்ததில் இருந்தே இரவு பதினொன்னு ,பனிரண்டு அல்லது 12 .30 .. இது தான் அவள் தூகும் நேரம்...சிலர் சொல்றாங்களே வாழை பழம் கொடுத்தா குழந்தை நல்லா தூங்குவாங்கன்னு .அப்படியா?.. எனக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்...please..

amma bagvan thunnai

மேலும் சில பதிவுகள்