தலையணை உறை

தேதி: December 17, 2009

4
Average: 4 (10 votes)

 

டார்க் நீலநிறத் துணி (plain) - 3/4 yd
லைட் நீலநிறத் துணி (printed) - 1/2 yd
வெள்ளைநிறத் துணி (printed) - 1/4 yd
நீல, கறுப்பு நூல்கள்
அளவு கோல்
குண்டூசி
கத்தரிக்கோல்
சாக்
தலைகாணி - 15" X 15" அளவானது

 

வெள்ளைநிறத் துணியில் 11" X 11" என்ற அளவுகளில் சதுர துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். லைட் நீலநிறத் துணியில் நீளம் X அகலம் = 7.5" X 7.5" அளவான முக்கோண துண்டுகள் நான்கு வெட்டவும். (7.5" X 7.5" சதுரங்கள் இரண்டு வெட்டி மூலைவிட்டம் வழியாகவும் வெட்டலாம்). டார்க் நீலநிறத் துணியில் 4.5" X 15.5" மற்றும் 12.5" X 15.5" என்ற அளவில் நீள்சதுர துண்டுகளும், 5.5" X 5.5" சதுர துண்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் துணியில் 3"அகலத்தில் துணியின் நீளத்திற்கேற்ப நீளமான 5 துண்டுகள் வெட்டி பொருத்தி ஒரே நீளமான துண்டாக ஆக்கவும்.
இப்போது நீளவாக்கில் இருக்கும் 3" அகல டார்க் நீலநிறத் துணியை இரண்டாக மடித்து மடித்து சிறிய பிளீட்ஸ்களாக ஒரு பகுதியை மட்டும் தைத்து கொள்ளவும். தைத்தபின் நீளம் 60 அங்குலங்கள் இருக்க வேண்டும்.
வெள்ளைநிற சதுர துணியின் 4 ஓரங்களிலும், வெட்டி வைத்த நான்கு லைட் நீலநிற முக்கோண துண்டுகளை வைத்து தைக்கவும். (ஒவ்வொரு துண்டாக பொருத்தி ஒவ்வொரு முறையும் அயர்ன் செய்தால் தைப்பதற்கு சுலபமாக இருக்கும்).
5.5" X 5.5" அளவில் சதுர துண்டாக நறுக்கி வைத்திருக்கும் டார்க் நீலநிற துணியின் நான்கு ஓரங்களையும் 1/4 இன்ச் அளவு உள்நோக்கி மடித்து அயர்ன் செய்து, மறுபக்கத்தில் பூக்களை வரைந்துக் கொள்ளவும்.
வெள்ளைநிற துணியின் நடுவில் பூ வரைந்த துணியை வைத்து, துணி விலகாமல் இருக்க அதன் ஓரங்களை தைத்து கொள்ளவும்.
பிறகு தைத்த இடங்களை நீலநிற நூலால் தைத்து விட்டு, முன்பு தைத்த நூலை எடுத்து விடவும்.
பிளீட்ஸ்களாக தைத்த துணியை அதன் நான்கு ஓரங்களையும் சுற்றி வைத்து தைக்கவும்.
பின்னர் அதன் மேல் 12" X 15.5 டார்க் நீலநிறத் துணியை வைத்து, அதன் மேல் 4.5" X 15.5 அளவிலான டார்க் நீலநிறத் துணியை வைத்து குண்டூசியை படத்தில் காட்டியுள்ளவாறு சொருகி வைக்கவும்.
மெஷினில் நான்கு ஒரங்களையும் இரண்டு தடவை தைத்துவிட்டு குண்டூசிகளை கழற்றிவிட்டு நல்ல பக்கத்திற்கு திருப்பி அயர்ன் செய்யவும்.
அழகான தலையணை உறை தயார். இதைப்போல் நீங்களும் விரும்பிய நிறங்களை கொண்டு செய்யலாம். இந்த தலையணை உறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கனகாலத்துக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கிறீங்கள், பார்க்க சந்தோஷமா இருக்குது. :)
எங்கட நர்மதா என்ன செய்தாலும் வடிவுதானே, இதுக்குத் தனிய வடிவா இருக்கு எண்டு சொல்ல வேணுமா!
நல்ல வடிவா, நீட்டா செய்து காட்டியிருக்கிறீங்கள். பாராட்டுக்கள். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சூப்பர். அசத்தறீங்க நர்மதா!! அழகா இருக்கு
உங்க தோடு டிசைன் பாத்துட்டு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்கேன் - செய்து பாக்கனும்ன்னு.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ரொம்ப் அழகா இருக்கு ந்ர்மதா பார்க்கவே ரொம்ப் அழகா இருக்கு செஞ்சி பார்க்க்னும் தோணுது இன்னும் நிறைய இதே மாதிரி க்ற்றுக் கொடுங்க்ள்

GOOD BILLOW

PLS TEL HOW WE WILL PAINT,WHICH TYPE OF PAINT USE USE,PLS INCLUDE THAT INFERMATION

tamil

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta