தேதி: December 22, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.
பிட்டா ப்ரெட் - 2
வட்டமாக நறுக்கிய தக்காளி துண்டுகள் - 8 - 10
ஒலிவ் துண்டுகள் - 20
ஸ்பினிச் இலைகள் - 10
செடார் சீஸ் - கால் கப்
மொற்ஸரில்லா சீஸ் - கால் கப்
பிட்ஸா ஸோஸ் / ஸல்ஸா- அரை கப்
பேஸில்/ஒரெகானோ - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முதலில் தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிட்டா ப்ரெட்டில் ஸோஸ்/ஸல்ஸாவை வைத்து சீராக பரப்பி விடவும்.

அதன் மேல் சிறிது மொற்ஸரில்லா சீஸை தூவவும்.

பின்னர் ஒலிவ், ஸ்பினிச், தக்காளி துண்டுகளை அடுக்கவும்.

அதன் மேல் மீதி சீஸ் மற்றும் உப்பு தூவவும்.

முற்சூடுப்படுத்திய 400 F அவனில் 15 - 20 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும்.

இலகுவாக செய்யக்கூடிய சுவையான பிட்ஸா தயார். சூடாக இருக்கும் போதே பேஸில்/ஒரெகானோ தூவி பரிமாறவும்.

Comments
யம் நர்மதா
யம்... யம்... யம் நர்மதா. :)
படங்களும் அழகாக இருக்கிறது.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
சூப்பர் ஐடியா நர்மதா!
ரொம்ப ஈஸியா, யம்மியா ஒரு டிஷ்! கிட்ஸ்க்கு கட்டாயம் ரொம்ப பிடித்தமான ஐட்டமாக இருக்கும். கண்டிப்பா இந்த வின்டர் ப்ரேக்கில் செய்துபார்த்துட்டு feedback சொல்கிறேன். நன்றி நர்மதா!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ