இட்லி மஞ்சூரியன்

தேதி: December 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (9 votes)

இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

இட்லி - 6
தக்காளி கெச்சப் - ஒரு கப்
ரெட் சில்லி சாஸ் - கால் கப்
பொடியாக நறுக்கின உள்ளி - 3 பல்லு
பொடியாக நறுக்கின வெங்காயத்தாள் - அரை கப்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சோளமாவு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் அதில் நறுக்கின இட்லி துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த துண்டுகளை ஒரு பேப்பரில் பரவலாக போட்டு வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஒலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதனுள் பொடியாக நறுக்கின உள்ளி, பொடியாக நறுக்கின வெங்காயத்தாள் என்பவற்றைப் போட்டு வதக்கவும்.
பின்னர் அதனுள் தக்காளி கெச்சப், ரெட் சில்லி சாஸ் விட்டு கிளறவும்.
அதன் பிறகு சோளமாவு கரைசல், சோயா சாஸ், உப்பு சேர்த்து கிளறவும்.
கலவை கொஞ்சம் கெட்டியானதும் அதனுள் பொரித்து வைத்த இட்லி துண்டுகளை போட்டு கிளறவும்.
இட்லி மஞ்சூரியன் தயார். இதனை பரிமாறும் தட்டில் போட்டு கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

இட்லியை பொரிக்காது வதக்கியும் போடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நர்மதா..எப்படி இருக்கீங்க...?இன்று உங்கள் விருந்து இட்லி மஞ்சூரியனா...?பேஷ்..பேஷ்..ரொம்ப நல்லாயிருக்கு.
உடனே செய்து சாப்பிட நா ஊறுகின்றது.அசத்தலான குறிப்போடு வந்து அசத்துரீங்க.வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.