குக்கர் அல்வா

தேதி: January 3, 2010

பரிமாறும் அளவு: 3நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

கோதுமை மாவு - 1கப்
சீனி - 2கப்
நெய் - 100மில்லி
வெஜிடபிள் ஆயில் - 100மில்லி
முந்திரி பருப்பு - 50கிராம்
கேசரி கலர் - 1சிட்டிகை


 

கோதுமை மாவை நன்கு சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.
குக்கரின் உள்ளே இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் மாவு கரைத்த பாத்திரத்தை வைத்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து மாவை வேக வைக்க வேண்டும்.
இரண்டு விசில் வந்த உடன் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
5நிமிடம் கழித்து குக்கரின் உள்ளே உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்து ஆற விட வேண்டும்.
ஆறிய மாவை கட்டி இல்லாமல் மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கூழ் போல் கரைத்து கொள்ள வேண்டும்.(மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றினால் கட்டி இல்லாமல் கூழாகிவிடும்)
வாணலியை அடுப்பில் வைத்து 200மில்லி தண்ணீர் ஊற்றி அதில் கேசரி கலர்,2கப் சீனியை சேர்த்து சூடு படுத்த வேண்டும்.
பக்கத்து அடுப்பில் ம்ற்றொரு வாணலியில் 200மில்லி வெஜிடபிள் ஆயில் ஊற்றி நன்கு சூடான உடன் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
சீனி, கேசரிகலர் சேர்த்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் 100மில்லி நெய்யை ஊற்றி நெய் கரைந்த உடன் வெந்த மாவை சேர்த்து அடி பிடிக்காமல் கிண்ட வேண்டும்.
ஊற்றிய நெய்யை மாவு உறிஞ்சிய பின் பக்கத்து அடுப்பில் உள்ள நன்கு சூடான வெஜிடபிள் ஆயிலை ஒரு கரண்டி கொண்டு எடுத்து கிண்டும் மாவில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிண்ட வேண்டும்.
கொதிக்கும் ஆயில் முழுவதும் இதே போல் ஊற்றி கிண்டி கொண்டே இருக்கும் பொழுது மாவும் ஆயிலை உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.
சிறிது நேரத்தில் வெந்த மாவு ஆயிலை வெளியே விட ஆரம்பிக்கும் பக்குவத்தில் 50கிராம் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும்.
கிண்டிய அல்வாவை ஒரு தட்டில் கொட்டி பரத்தி முந்திரியால் அலங்கரிக்கலாம்.


கோதுமையை அரைத்து பால் எடுத்து செய்வதற்கு நேரம் ஆகும்.
இப்படி செய்தால் சுலபத்தில் செய்து விடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ராதா...நலமாக இருக்கின்றீர்களா.....
தங்கள் குறிப்பு மிகவும் சுலபமாக தெரிகின்றது.
இதில் எனக்கு சில சந்தேகங்கள்.நார்மலா நாம் சப்பாத்திக்கு யூஸ் பண்ணும் கோதுமை மாவை உபயோக படுத்துவதா...?
இது பொல் செய்யும் போது பால் எடுத்து செய்யும் டேஸ்ட் கிடைக்குமா...?
நேரம் கிடைக்கும் போது விவரிக்கவும்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நலம்.நீங்கள் நலமா? நான் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் சப்பாத்தி மாவில் தான் அல்வா ஹாய்,அப்சரா..
செய்தேன்.கோதுமையை அரைத்து பால் எடுத்து செய்யும் அல்வா ருசி போல்தான் இந்த குக்கர் அல்வாவும் இருந்தது.ஆயில் சேர்க்காமல் முழுவதும் நெய்யில் செய்தால் திருநெல்வேலி அல்வா சுவையே கிடைக்கும். கொலஸ்ட்ரால் பிராப்ளம் எனக்கு உள்ளதால் ஆயிலுடன் சிறிது நெய் சேர்த்து நான் செய்தேன்.அல்வா செய்முறை புகை படத்துடன் அனுப்பினேன் கம்பிரஸ் பண்ணியும் படம் போகவில்லை.நீங்கள் இந்த முறையில் அல்வா செய்து பார்த்து சுவை எப்படி இருந்தது என்று எனக்கு பின்னூட்டம் அனுப்புங்களேன்.நன்றி!வாழ்த்துக்கள்!

radharani

ராதா...உடனெ பதில் தந்ததர்க்கு மிகவும் மகிழ்ச்சி.
நான் முடியும் பொது நிச்சயம் செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் தருகின்றேன்.
நீங்கள் படத்துடன் அனுப்பியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.எதற்க்கும் மறுபடியும் முயற்ச்சித்து பாருங்கள்.பார்க்க நன்றாக இருக்கும்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.
நீங்க கம்ப்ரஸ் பன்னியும் போக மாட்டேங்குது என சொன்னீங்க இல்லையா....அதை குறிப்பு சேர்க்கும் இடத்தில் அனுப்பினால் எவ்வளவு அளவை குறைத்தாலும் போகாது.
அட்மின் அவர்களுக்கு குறிப்பின் பெயரை சொல்லி (arusuvaiadmin@gmail.com )அனுப்பி வைய்யுங்கள்.அவர்கள் அந்த படத்தை இங்கே சேர்த்து விடுவார்கள்.
முயன்று பாருங்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ராதா ராணி,குக்கர் அல்வா அருமையாக வந்தது. பயந்து கொண்டேச் செய்தேன்.ஆனால் ரொம்ப நன்றாக வந்தது.ருசியும் நன்றாக இருந்தது.நல்ல குறிப்பு. நன்றி.Save the Energy for the future generation

Save the Energy for the future generation

அல்வா செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!!!அரிசி மாவிலும் இதே முறையில் செய்யலாம்.நன்றாக இருக்கும்.நல்லா வருமா,வராதா...என்று பயந்து கொண்டே செய்தீர்களா.... மீண்டும் நன்றி! நன்றி!!நன்றி!!!

radharani

ஹை ராதா ஆன்றீ உங்களோட குக்கர் அல்வா நேற்றூ செய்து பார்த்தேன்.ரும்ப நல்லா இருந்தது.நன்றீ. உங்களோட குக்கர் அல்வா நேற்றூ செய்து பார்த்தேன்.ரும்ப நல்லா இருந்தது.நன்றீ.

அல்வா சூப்பர்....
குறிப்பில் மாற்றம் பார்த்தேன்...நன்றி...

தேன்,நன்றி! ஹெப்சி,ஜோயல்,என்ன சொன்னார்கள்..

radharani