பேப்பர் கப்புகளை கொண்டு ஏஞ்சல்கள் செய்வது எப்படி?

தேதி: January 4, 2010

4
Average: 3.6 (8 votes)

 

பேப்பர் கப் - 2
உல்லன் நூல் - மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்கள்
முட்டை - 2
ஃபேப்பரிக் பெயிண்ட்
கத்தரிக்கோல்
கிலிட்டர்ஸ்
ப்ரஷ்
சாட் பேப்பர்
காட்டன்
கறுப்புநிற ஸ்கெட்ச் பென்

 

ஏஞ்சல்கள் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெள்ளை மற்றும் பிங்க் நிற ஃபேப்பரிக் பெயிண்டை ஒன்றாக கலந்தால் லைட் பிங்க் நிறம் கிடைக்கும். இந்த பெயிண்டை ஒரு கப்பின் வெளிப்பக்கம் முழுவதும் அடித்துக் கொள்ளவும்.
அதேப் போல் வெள்ளை மற்றும் ஃப்ளுநிற பெயிண்டை ஒன்றாக கலந்தால் லைட் ஃப்ளு நிறம் கிடைக்கும். இந்த நிற பெயிண்டை மற்றொரு கப்பில் அடித்து காயவிடவும்.
இதுப்போல் இரண்டு கப்பிலும் பெயிண்ட் செய்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சாட் அட்டையில் படத்தில் காட்டியுள்ளது போல் இறக்கைகள் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டிய அட்டையில் கம் தடவி அதன் மீது காட்டன் பஞ்சை வைக்கவும். பஞ்சை ஒட்டும் பொழுது இறக்கையின் வடிவத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதுப்போல் மொத்தம் நான்கு இறக்கைகள் செய்துக் கொள்ளவும்.
இந்த இறக்கைகளை பெயிண்ட் செய்திருக்கும் கப்பின் பின்புறம் வரும்படி ஒட்டவும். ஒரு கப்பில் இரண்டு இறக்கைகள் என்ற வீதம் இரண்டு கப்பிலும் இதுப்போல் ஒட்டி வைக்கவும்.
இரண்டு முட்டையின் அகலமான பக்கத்தில் படத்தில் உள்ளது போல் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை கறுப்பு ஸ்கெட்ச் பேனாவால் வரைந்துக் கொள்ளவும்.
இறக்கைகள் ஒட்டிய கப்பின் மேல் பெவிக்கால் தடவி அதில் முட்டையை வைத்து ஓட்டிக் கொள்ளவும். ஃப்ளு நிற கப்பின் மீது பெண் உருவம் போல் வரைந்த முட்டையையும், பிங்க் நிற கப்பின் மேல் ஆண் உருவம் போல் வரைந்த முட்டையையும் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
முட்டை கப்புடன் நன்றாக ஒட்டிக் கொண்டதும் கப்பின் நடுவில் வணக்கம் சொல்வது போல் உள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும். அந்த டிசைனின் கைப்பகுதியில் மட்டும் வெள்ளைநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
முட்டையின் பின்புறம் முழுவதும் முடிப்போல் ஒட்டுவதற்கு கறுப்புநிற உல்லன்நூலை 4 செ.மீ அளவிற்கு தேவையான அளவு சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஃப்ளுநிற கப்பில் ஒட்டிய முட்டையின் நடுப்பகுதியிலிருந்து இந்த கறுப்பு உல்லன் நூலை வரிசையாக ஒட்டிக் கொண்டே வரவும்.
இதேப் போல் பிங்க நிற கப்பில் உள்ள முட்டையில் ஒட்டுவதற்கு மஞ்சள்நிற உல்லன் நூலை 8 செ.மீ அளவிற்கு தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளவும். வரைந்த புருவத்திற்கு சிறிது இடைவெளிவிட்டு அதன் மேல் கம் தடவி வெட்டிய நூலை மேலிருந்து வைத்து பின்பக்கம் நூல் தொங்கும்படி ஒட்டிக் கொள்ளவும். இப்போது முன்பக்கத்தில் பார்ப்பதற்கு ஹேர் கட் செய்தது போன்று இருக்கும். 10 செ.மீ நூலை ஆறு அல்லது எட்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொண்டு முட்டையின் முன்பக்கத்தில் ஒட்டிய நூலிற்கும் 1/2 செ.மீ தள்ளி கம் வைத்து இந்த நூலை இரு ஓரங்களிலும் முடி தொங்குவதுபோல் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
ஃப்ளுநிற கப்பில் ஒட்டிய முட்டையின் முன்பக்கத்தில் உள்ள டிசைனை பேப்பரில் வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு கறுப்புநிற ஸ்கெட்ச் பேனாவை கொண்டு அந்த பேப்பரில் கலர் கொடுக்கவும். இந்த பேப்பரை முட்டையின் முன்பக்கத்தில் கம் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
ஃப்ளுநிற கப் முழுவதும் இடைவெளிவிட்டு சில்வர்நிற பெயிண்டால் ஸ்டார் போன்று வரைந்து கொள்ளவும். பிங்க்நிற கப்பின் அடியில் கிலிட்டர்ஸை பயன்படுத்தி அதிலுள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும். இதுப்போல் கைப்பகுதிகளிலும் வரைந்துக் கொள்ளவும். உபயோகமில்லாத பழைய ஜுஸ் கப்புகளை கொண்டு மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஏஞ்சல்கள் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அட்மின்,

சம்மனசுகள் அழகாக இருக்கின்றன. இந்தக் குறிப்பை நத்தாருக்கு முன்பாக வெளியிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம். :)

இமா

‍- இமா க்றிஸ்

i m sure i m going to add these to my kolu
my neighbours were delighted wn i made these angels on their easter thanks to u
keep improving

என்றும் அன்புடன்,
கவிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta