கிட்ஸ் ஸ்வீட் கச்சோரி

தேதி: January 4, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

ப்ரெட் ஸ்லைஸ் - 6
தேங்காய்த்துருவல் - அரை கப்
சர்க்கரை – அரை கப்
எண்ணெய் - பொரிக்க


 

ஸ்வீட் கச்சோரி செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலுடன் சர்க்கரையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டும் கலந்து கெட்டியாகும் வரை கிளறவும்.
முழு ப்ரெட் துண்டுகளை குறுக்காக வெட்டி ஒவ்வொரு துண்டுகளையும் நீரில் நனைக்கவும்.
நனைத்த ப்ரெட் துண்டுகளை நன்றாக பிழிந்து விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
பிழிந்து வைத்திருக்கும் ப்ரெட்டின் நடுவில் சிறு குழிவு இருக்குமாறு தட்டிக் கொள்ளவும். அதில் தேங்காய், சீனிக்கலவையை வைத்து ஓரங்களை மடித்து, கலவை வெளியே வராதவாறு கவனமாக மூடி லேசாக அழுத்தி தட்டி வைக்கவும். பிழிந்து வைத்த எல்லாப் ப்ரெட் துண்டுகளையும் இதுப்போல் செய்து வைக்கவும்.
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேறியதும் தட்டி வைத்த ப்ரெட் துண்டுகளை போட்டு பொரிக்கவும். இருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
எளிமையாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய கிட்ஸ் ஸ்வீட் கச்சோரி ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இளவரசி நலமாக இருக்கின்றீர்களா?
நினைத்தவுடன் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க கூடிய மிக சுலபமான குறிப்பை கொடுத்து இருக்கின்றீர்கள்.
இந்த டேஸ்ட் நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும்.
வாழ்த்துக்கள்..ம்ம் இன்னும் நிறைய அசத்துங்க...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

தங்கள் அன்பிற்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி.
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இந்த ஸ்வீட்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.