சிங்கப்பூர், மலேசியா தோழிகளே

ஹாய் சிங்கப்பூர், மலேசியா தோழிகளே என் மகன் முதலாவது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாட என் கணவருக்கு ஆசை. நாங்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றிப்பார்க்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால் எனக்கு ஒரு சின்ன பயம் என் பையனுக்கு சாப்பாடு என்ன அங்கு குடுக்கலாம். புது உணவு ஒத்துக்கொள்ளுமா? இப்பொழுது அங்கு கிளைமேட் எப்படி இருக்கும். 2 நாள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால் எங்கெல்லாம் போகலாம். அங்கு என்ன வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

ஹாய் சிங்கப்பூர், மலேசியா தோழிகளே என் மகன் முதலாவது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாட என் கணவருக்கு ஆசை. நாங்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றிப்பார்க்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால் எனக்கு ஒரு சின்ன பயம் என் பையனுக்கு சாப்பாடு என்ன அங்கு குடுக்கலாம். புது உணவு ஒத்துக்கொள்ளுமா? இப்பொழுது அங்கு கிளைமேட் எப்படி இருக்கும். 2 நாள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால் எங்கெல்லாம் போகலாம். அங்கு என்ன வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா எப்படி இருக்கீங்க? அர்ஜுன் எப்படி இருக்கிறார்? நானும் 10 நாட்கள் கழித்து இன்றுதான் அறுசுவைக்கு வந்தேன். வந்ததும் உங்கள் பதிவு படித்து சந்தோஷம் தாங்கல எனக்கு! எங்க ஊர்ப்பக்கமா வர்றேன்னு சொல்லியிருக்கீங்களே :-)

சாப்பாட்டை பொறுத்தவரை சிங்கப்பூரில் நம் ஊர் சாப்பாடு கிடைக்கும். குழந்தைக்குன்னா சின்ன ரைஸ் குக்கர் வைத்து ஹோட்டல் ரூமிலேயே சமைத்துக் கொள்ளலாம். தயிர் கிடைக்கும். காய்கறிகளும் ரைஸ்குக்கரிலேயே வேக வைத்துக் கொள்ளலாம். லிட்டில் இந்தியா பக்கம் உங்கள் ஹோட்டல் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் சாப்பாட்டிற்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

சுற்றிப் பார்க்கணும்னா செந்தோசா தீவு கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். என்ன பர்ஸ் கொஞ்சம் காலியாகும் அவ்வளவுதான் :-) ஆனால் நிச்சயம் என்ஜாய் செய்வீங்க. சிங்கப்பூர் ஆறு, சன் டெக் சிட்டி இன்னும் நிறைய இருக்கு. அர்ஜுன் பிறந்த நாளன்னிக்கு கோவிலுக்கு போகனும்னா கூட நிறைய கோவில்கள் இருக்கு. சிங்கப்பூர் zoo வில் நைட் சஃபாரி பார்க்க வேண்டிய ஒன்று. அப்புறம் ஜூரோங் பறவைகள் பூங்கா. இதையும் மிஸ் பண்ணிடாதீங்க.

மலேசியாவில் பொதுவாக எல்லோரும் செல்வது கெந்திங் ஹைலேண்ட்(மலைபிரதேசம்), கோலாலம்பூர் மற்றும் பத்து கேவ்ஸ் முருகன் கோவில்(கண்டிப்பாக பார்க்க வேண்டும்).
கிளைமேட் பொறுத்தவரை அதிக சூடும் இருக்காது அதிக குளிரும் கிடையாது. திடீர் திடீரென மழை மட்டும் வரும். குழந்தைக்கு ரெயின் கோட் மற்றும் ஜாக்கெட் வைத்திருப்பது நல்லது.
குழந்தை ஃப்ரெஷ் மில்க் மட்டும்தான் குடிப்பார் என்றால் இங்கு அதுவும் கிடைக்கும். ஆனால் இங்கு கிடைக்கும் பிராண்ட் ஒத்துக் கொள்ளுமா என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கலாம். ஆனால் இந்தியாவில் எல்லாமே இப்போது கிடைப்பதால் இங்கிருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்படி விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது கையில் பாஸ்போர்ட்டோடு செல்லுங்கள். அப்போது GST(goos service tax) 7% ஐ ஊர் திரும்பும் போது விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இன்னும் இரண்டு நாட்கள் வேலைகள் சற்று அதிகம். பின்னர் உங்களுக்கு தேவையான லின்க் வந்து சொல்கிறேன். மற்ற தோழிகளும் சொல்வார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உமா கவிசிவா சொன்னது தான் நானும் சொல்லுவேன்.... நீங்க எப்ப வந்தாலும் குழந்தைக்கு ஜர்கின், ரைன் கோட்டு இப்படி இருப்பது நல்லது...

நல்ல வெயில் காயும், தீடிர்ன்னு மழை வரும்....

டிரன்ஸ்ப்போட்டு பத்தி கவலை இல்லை... பஸ், MRT, டக்சி இப்படி இருக்கு.... என்னை கேட்டா MRT எல்லா இடத்துக்கும் பொஸ்ட்டு... அடுத்த ஸ்ட்டேஸன் ஓளி பொருக்கியில் கிடைக்கும்....

உணவு கவி சொன்ன மாதிரி லிட்டில் இந்தியாவில் தங்கினால் அதில் எல்லரும் நம் இந்தியர்கள் அதிகம்.... அதனால் இந்தியாவில் இருக்கும் பிலீங்குஸ் வரும்....

ஆனால் உசாராக இருக்கனும்.... எங்கு போனாலும்.... இங்கு செந்தோசா தீவு , சென்டக்சிட்டி, செந்தோசா, ZOO , பட்ஸ்ப் பார்க் ( ஜூரோங் பறவைகள் பூங்கா ) இவை எல்லாம் குழந்தை நல்லா எஞாய் பன்னும் .

சாப்பிங்கு பாத்திங்கன்னா நம் இந்தியாவை விட இங்கு அதிகம் தான்... முஸ்த்தப்பா, ஹனிப்பா ( இது முஸ்த்தாப்பாவை விட விலை கொஞ்சம் குறைவு ) பெஸ்ட்டு... முக்கியமா தைலம், சாக்கிலைட்டு.... புடவை, டிரஸ் எல்லாம்...

முஸ்த்தப்பாவில் எல்லாம் விலை அதிகம் தான்.... எலக்ரானிக் பொருல எல்லம் முஸ்த்தப்பவில் வாங்கலாம்... அங்கு GST(goos service tax) 7% ஐ எடுத்துக்கலாம்...

தங்க நகை என்று பார்த்தால் எனக்கு தெரிஞ்சு முஸ்த்தாப்பாவில் விலை அதிகம் இருக்கும்... ( ஒரு சில சமயம் )...

நகை கடைக்கு கடை கொஞ்சம் வித்தியாசப்படும்... விசாரித்து வாங்கவும்...

மலோசியா:

கவி சொல்லுவது போல் தான் முக்கியாமான இடம் KL தான்... ஆனால் டவர் பார்ப்பது என்றால் நீங்கல் ஞாயிறு, திங்கள் போகமல் மத்த நாளில் போனால் அந்த டவரின் ( இரண்டு கோபுரம் ) அந்த லிங்கு ( இரண்டு போபுரம் இனைக்கும் பாலம் ) பாதையில் சென்று பார்க்கலாம்...

ஜெண்டிங்கு சூப்பாரா இருக்கும். குழந்தைக்கும், உங்கலுக்கும் காட்டாயம் சுவுட்டர் எடுத்துக் கோங்க.... அங்க போக கேபுல் கார் சூப்பரா ( இயற்க்கை ரசிக்க வீடியோ எடுக்க சூப்பரா இருக்கும் ) இருக்கும்... வரும்போது பஸ்சில் வரலாம்...

அங்கு தீம் பார்க்கு இருக்கு... இதுவும் நல்லா இருக்கும் ( நல்லா எஞாய் பன்னலாம் ).... அங்க தங்க காட்டாயம் 2 அல்லது 3 நாள் இருக்கலாம்... தீம் பார்க்கில் 1 நாள் போயிடும்... அப்பரம் சிலதை சுத்தி பாக்க 1 நாள் ஆகும்.... அந்த கிலைமட்டு ரசிக்க முடியும்....

பத்துக்கேஃப் ( பத்து மலை ) இது முருகன் கோவில்... இதுவும் KLல் உள்ளது... அங்கு மொத்த படிகள் 800க்கும் கொஞ்சம் அதிகம்... அங்கு குரங்கு அதிகம் அதனால் குழந்தையை பார்த்துக் கொள்ளவும்... ( பயம் வேண்டாம்... குழந்தை கயில் எந்த பொருலும் குடுக்க வேண்டாம்... )

இன்னும் நிறைய இருக்கு ஆனால் மலோசியா டூர் என்று சென்றால் இது 3ம் ( டவர் இரண்டு உள்ளது, ஜன்டிங்கு, பத்துமலை..) கட்டாயம் ரசிக்கலாம்... இது எல்லாம் சூப்பரா இருக்கும்....

எச்ச‌ரிக்கை:

1, எல்லாத்தை விட முக்கியமான விசயம் அதிக நகை வேண்டாம்... சிம்புலாக இந்தால் போதும்...

2, பஸ்ப்போட்டு உங்கள் ஹான் பாகில் வைக்க வேண்டாம்.... நீங்கள் ஜராக்ஸ் காபி வைத்துக் கொள்ளவும்... உங்கள் கணவரிடம் பக்கட்டில் பாஸ்ப்போட்டு வைத்து கொல்ல சொல்லவும்...

3, சிங்கையில் பயம் இல்லை... ஆனா மலோசியாவில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும்...

நீங்கள் பினாங்கு, லங்காவி போவது எனில் அது தனி இடம் ஆனால் இது மலோசியாதான்...

உமா பயம் வேண்டாம் ஜாலீயா எஞாய் பன்னுங்க ஆலத பொஸ்ட்டு....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் கவிசிவா நலமா? நாங்கள் நலம். உங்களோட பதிவை நேத்தே பார்த்துட்டேன்பா. சந்தோசமா இருந்தது. பதில் போடுறதுக்குள்ள அறுசுவை கட் ஆகிடுச்சு. இவர் ஏற்கனவே சிங்கப்பூர் போயிருக்கார். ஆனா வேற வேலையா போனதால் எங்கும் சுற்றிப்பார்க்காமல் வந்திட்டார். ஆனால் மலேசியா அவருக்கும் புதுசு. அதான் உங்களிடம் கேட்டேன்பா. உங்களுக்கு ஞாபகம் வரும் போதெல்லாம் எனக்கு எழுதிடுங்க கவி.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் பிரபா உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. இன்னும் தெரிந்த விசயத்தை நியாபகம் வரும் போது எழுதுங்க.

பிரபா நான் ரொம்ப சிரிச்ச விசயம் என்ன தெரியுமா?
//அங்கு குரங்கு அதிகம் அதனால் குழந்தையை பார்த்துக் கொள்ளவும்... // இது தான்.

இவன் கத்துற கத்தில பாவம் அந்த குரங்குகளெல்லாம் ஓடாம இருந்தா சரிப்பா. எங்க ஊரில் அழகர் கோவில்னு ஒரு மலை இருக்கு. அங்கும் குரங்குகள் அதிகம் தான். இவனை கூட்டி போய் காமிச்சு பயத்தை போக்கிட வேண்டியது தான்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஆஷிமா நான் இங்க இருக்கேன் .இங்க வாங்க .....ஹரிகயதிரி சொன்ன மாதிரி இந்த இடத்தில் நம்ம விஷயத்தை பேசுவது நல்லது .
ஓகே ...மட்டருக்கு வருவோம் ..
//இங்க ஷாப்பிங் போனால் ரொம்ப செலவு ஆகுமா. எகிப்துல bargain பண்ணி பொருள் வாங்க முடியுமா. விபரம் சொல்லவும்.விலை இந்தியால rate இறுகும// என்று கேட்டு இருந்திங்க ...ஷாப்பிங் போனாம் என்றால் செலவு முன்ன பின்ன இருக்க தான் செய்யும் ஆஷிமா ....ஆனால் bargain பண்ணிபாக்கலாம்..சில இடங்களில் ஓகே ஆகும் .சில இடங்களில் ஓகே ஆகாது ....இந்தியா விலையை விட கொஞ்சம் கூட இருக்கும் ரொம்ப இருக்காது ....ஒரு நாளைக்கு ஒரு வில்லாவோட(2 ரூம் 1 ஹால் 1 சமையல் அறை 1 குளியல் அறை ) ரெண்ட் 500 டு 800 pound இருக்கும் .கார் ரெண்ட் ஒரு நாளைக்கு 250 டு 300 pound இருக்கும் .1 பவுண்ட்= 8 ரூபாய் .

thanks lutha,

adi maram kolirnthalthan nooni maram valarum

புது தகவல் வெளியிட thread open panna details sollaum

adi maram kolirnthalthan nooni maram valarum

பொது தலைப்புகளில் போய் "புதிய கேள்வி சேர்க்க" என்பதை click செய்யவும்.

மேலும் சில பதிவுகள்