முந்திரி பிஸ்தா ரோல்

தேதி: January 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

முந்திரி - ஒரு கப்
பிஸ்தா - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 3/4 கப்
பொடித்த சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி


 

ரோல் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அவனை 100 டிகிரியில் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு ட்ரேயில் முந்திரியை பரப்பினாற் போல் போட்டு பத்து நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும். அதன் பிறகு பிஸ்தாவையும் ஒரு தட்டில் வைத்து 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின்னர் முந்திரி, பிஸ்தா இரண்டையும் எடுத்து ஆற வைக்கவும். ஆறியதும் எடுத்து தனித்தனியே ஒரே சீராக, நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும். பிஸ்தா பொடியுடன் பொடித்த சர்க்கரையை கலந்து வைத்துக் கொள்ளவும். (விரும்பினால் பச்சை கலரை சேர்த்துக் கொள்ளலாம்.)
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு நான்கு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிம்மிலேயே கரைய விடவும்.
கரைந்து ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து பொடித்த முந்திரியையும் எசன்ஸையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கட்டியில்லாமல் கிளறவும்.
ஆறியதும் வெதுவெதுப்பான நிலையில் கையில் நெய் தடவிக் கொண்டு அதை பிசையவும் (கெட்டியாக இருக்கும்).
பின்பு ஒரு பாலீத்தீன் பேப்பரில் நெய் தடவி விட்டு முந்திரி கலவையில் பாதியை எடுத்து அதில் தட்டவும். ஒரு ஓரத்தில் பிஸ்தா பொடியை வைக்கவும்.
பிஸ்தா பொடியை வைத்து, டைட்டான ரோலாக சுருட்டி ஒரு விரல் அளவிற்கு துண்டுகள் போட்டு வைக்கவும்.
இதே போல் மீதி இருக்கும் கலவையிலும் செய்யவும். சுவையான ரிச்சான முந்திரி பிஸ்தா ரோல் தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சுவையான குறிப்பினை <b>திருமதி. அப்சரா </b>அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்

முந்திரி, பிஸ்தாவை மைக்ரோவேவ் இல்லாமல் ஒரு அகன்ற வாணலியிலேயே சூடுப்படுத்தி அடுப்பை அணைத்து விட்டு நிறம் மாறாத வண்ணம் வறுக்கலாம். இதன் மேல் சில்வர் தாள் கொண்டு அலங்கரித்தால் பார்க்க மிகவும் நன்றாக இருக்கும். பிஸ்தா பருப்பு கலவையில் பச்சை கலர் சேர்க்கும் போது பார்வையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த முந்திரி பிஸ்தா ரோல் சூப்பர் அப்சரா.எப்பவும் என் குழந்தைகளுக்கு ஸ்வீட் ஸ்டாலில் csahew roll வாங்கி கொடுப்பது வழக்கம்.அருமையாக செய்து காட்டியமைக்கு நன்றி
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் அப்சரா உங்களுடைய இந்த குறிப்பு மிகவும் அருமையாக இருக்கு. என் பையனுக்கு இந்த ஸ்வீட் ரெம்ப பிடிக்கும் இந்த குறிப்பு கொடுத்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

easy prepartion and also good taste

ஆசியா மேடம் நலமா.....தங்கள் பின்னூட்டத்தை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.நன்றிங்க...இதை செய்து உடனே சாப்பிடாமல் ஒரு நாள் கழித்து சாப்பிட்டால் கடையில் உள்ள டேஸ்ட் கிடைக்கும்.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் கதீஜா மேடம்...நலமாக இருக்கின்றீர்களா...?
தங்கள் பின்னுட்டத்திற்க்கு மிகவும் நன்றி.

ஹாய் காந்தி அவர்களே...நலம் தானே..?
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றிங்க...

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உங்க முந்திரி பிஸ்தா ரோல் பார்க்கவே ரொம்ப சூப்பராக இருக்கு. இது எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கூடிய விரைவில் இதை செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு பின்னூட்டம் தருகிறேன்.

ரொம்ப ரிச்சான ஸ்வீட் நல்ல இருக்கு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Jaleelakamal

ஹாய் ஜலீலா..மேடம் மற்றும் மீனாள் எப்படி இருக்கின்றீர்கள்?
தங்கள் இருவரின் பின்னூட்டத்திற்க்கும் மிகவும் நன்றிங்க...
அன்புடன்.
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ஜலீலா..மேடம் மற்றும் மீனாள் எப்படி இருக்கின்றீர்கள்?
தங்கள் இருவரின் பின்னூட்டத்திற்க்கும் மிகவும் நன்றிங்க...
அன்புடன்.
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Hello Friends, arusuvai doing gr8 job.
மைக்ரோ அவனை முற்சூடு படுத்தும் முறை பற்றி விரிவாக யாரவது தெரிவிக்கவும். என்னுடையது ஒனிடா அவன்.

meeru

ஹாய் அனு..,நீங்கள் புதுசாக இணைந்து இருக்கின்றீர்களா.....தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நீங்கள் அவனை முற்சூடு செய்யும் முறை பற்றி கேட்டு இருக்கின்றீர்கள்.முற்சூடு செய்வது என்பது கேக்,பிஸ்கட் இவற்றிற்க்கு ஏற்ப மாறுபடும்.அதே போல் கேக் கலவையின் அளவை பொருத்தும் மாறுபடும்.
தங்களின் அவன் ஒனிடா என்று சொல்லி இருக்கின்றீர்கள்.அதனுடன் உபயோகம் செய்யும் முறையின் விளக்கங்களுடன் ஒரு புத்தகம் தந்து இருப்பார்களே...அதை படித்து பாருங்கள்.அதிலேயே...(உதாரணமாக: கேக் கலவை ஒரு கிலோ பெருமானம் உள்ளதாக இருப்பின் 180 டிகிரி செல்சியஸ் அளவில் முற்சூடு செய்யவும்)என கொடுத்து இருப்பார்கள்.இல்லையேல் சொல்லுங்கள் பின்பு எனக்கு தெரிந்த அளவின் படி சொல்கிறென்.
ஏனெனில்...ஒவ்வொரு அவனிற்க்கும் சற்றே ,மாறுபடும்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அவனில்லாமல் சூடு பண்ண முடியாதா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் அஸ்வதா.....அவனில்லாமலும் சூடு பண்னலாம்.
அகலமான வானலியை அடுப்பில் வைத்து நன்கு சூடு செய்து முந்திரியை அதில் போட்டுபரவலாக வைத்து அடுப்பை அணைத்து விடவும்.அந்த சூட்டிலேயே அது நிறம் மாறாமல் மொருமொருப்பாகும்.பின் நன்கு ஆறியவுடன் பொடி செய்யணும்.அவ்வளவுதான்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.