lactogen, cerelac in US, Maryland கிடைக்குமா?

நான் US, Maryland ல் இருக்கிறேன். இங்கு வந்து 1 மாதம் ஆகிறது. எனது 10 மாத குழந்தைக்கு lactogen, cerelac எல்லாம் India ல் இருந்து கொண்டுவந்தேன். அவன் இங்குள்ள formula குடிக்க மாட்டேன்கிறான். இங்கு lactogen, cerelac கிடைக்குமா? எங்கு கிடைக்கும்? help me friends.

ஹாய் சவிதா
வாங்க வாங்க அமெரிக்கா வுக்கு.

உங்க குழந்தை இனி பொதுவாவே பால் கொறச்சலா தன சாப்பிடும்.நீங்க இனி திட உணவு அறிமுக படுத்தலாம்.gerber பலம்,காய் குடுத்து பாருங்க.அப்புறம் பால் நான் என் மகளுக்கு இந்தியால nan குடுத்தேன் .இங்க வந்ததும் அதே nestle ஓட good start குடுத்தேன்.அவளுக்கு அவ்ளவா வித்தியாசம் தெரில.குடிச்சா.நீங்களும் ட்ரை pani பாருங்க.எதாவது சந்தேகம் இருந்த கேளுங்க.

Anbe Sivam

Anbe Sivam

நான் similac and enfamil try பன்னேன். அவனுக்கு பிடிக்கலை. இப்போ organic whole milk குடுக்கிறேன். அதை குடிக்கிறான். அதனால பரவால்ல. night he needs milk only. thats y i asked.

ஹாய் சவிதா

நானும் US-ல தான் இருக்கேன், இங்க வந்து 3 மாதம் ஆகுது,என் பொண்ணுக்கு 8மாதம் ஆகுது

இங்கு அமெரிக்காவில் lactogen கிடைப்பதில்லை, இந்தியன் ஸ்டோர்ஸ்-ல cerelac கிடைக்கும்(cost $8)..... என்னுடைய டாக்டர் nestle good start நல்லதுன்னு சொன்னாங்க, அதை ட்ரை பண்ணினேன், என் பொண்ணும் குடிச்சா இருந்தாலும் நான் இப்ப வரை lactogen தான் குடுக்கிறேன், இந்தியா-வில் இருந்து யாராவது வரும்போது வாங்கி வர சொல்லிட்டு இருக்கோம்.....இங்கு கிடைக்கும் formula பவுடர் நம்ம ஊர்ல இருப்பது போல் டேஸ்ட் கிடையாது தான், ஆனால் முடியாத பட்சத்தில் என்ன பண்றது, சில நேரம் குடிக்க குடிக்க பழகிடலாம் ட்ரை பண்ணி பாருங்க..... organi whole மில்க் உங்க பையனுக்கு ok-ன்னா அதையே நீங்க ட்ரை பண்ணலாமே.....

அனேக அன்புடன்
ஜெயந்தி

ஹலோ சவிதா
ஒரு வயது வரை குழந்தைக்கு whole milk குடுக்க கூடாது.நம்ப நாட்டுல கூட டாக்டர்ஸ் அதான் சொல்றாங்க.அது ஜீரணம் ஆகாது. சீக்கிரமா ..

நீங்க nestle ட்ரை பண்ணுங்க.உங்க pediatrician கிட்ட சாம்பிள் ஒரு டப்பா கேட்டு paarunga .பிடிச்சு இருந்தா கடைல வாங்கலாம்.பட் தயவு செஞ்சு மாட்டு பால் குடுகதீங்க.ஒரு ரெண்டு மூணு மாசம் இது ட்ரை பண்ணுங்க.
Anbe Sivam

Anbe Sivam

ஹாய் சுடர்

நான் வேற வழியில்லாம whole milk தான் குடுக்கிறேன். night தூக்கத்துல கூட formula குடிக்கமாட்டேனுட்டான். good start try செய்து பார்க்கிறேன்

ஹாய் ஜெயந்தி

இந்தியன் ஸ்டோர்ஸ்-ல cerelac தேடி பார்க்கிறேன். thanks for ur reply

மேலும் சில பதிவுகள்