அரட்டை அடிப்போம் வாங்க தோழிகளே 101

அன்பு தோழிகள் அனைவரையும் இந்த 101வது அரட்டை பகுதிக்கு வருக வருக வென அழைக்கின்றேன்.இங்கு வந்து எல்லோரும் அரைட்டை அடித்து கலக்கவும்

அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரு எப்படி இருக்கின்றீர்கள்?நான் இங்கு நலம்.நலமே நல்கட்டும். என்னை அன்புடன் விசாரித்த அன்பு தோழிகள் அனைவருக்கும் எனது நெஞ்சாந்த நன்றிகள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வாங்க பேசலாம் வாங்க.....

வணக்கம் தோழிகளே... இப்படி கும்பிட்டு கூப்பிட்டா தான் வருவீங்களாக்கும்??!!! ஒழுங்கா அடிச்சு பிடிச்சு அரட்டை பக்கம் வந்து சேருங்க. சும்மா படிச்சுட்டு எஸ்கேப் ஆகுறதுலாம் ப்டாது!!! வந்து எட்டி பார்ப்பவர் எல்லாம் ஒரு அட்டன்டன்ஸ் குடுக்கணும்.

வகுப்பு மாதிரி இல்லாம இங்க வருபவர் தனக்கு மட்டுமின்றி தோழிக்கும் சேர்த்து அட்டன்டன்ஸ் குடுக்கலாம். ஹஹஹஹா....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்!நான் நலம்.

யோகராணி நலமா?
வனிதா, எப்படி இருக்கிறீர்கள்? குட்டீஸ் எப்படி இருக்கிறாங்க?
மீதி அறுசுவைக் கூட்டத்தினர் நலம்தானே? அரட்டைக்கு புத்தாண்டு வெகு அமைதியாகப் போகிற மாதிரி இருக்கிறதே! :)

இமா

‍- இமா க்றிஸ்

வனிதா உள்ளேன் அம்மா...யாழினி தம்பிக்கு தாலாட்டு பாடுகிறாளா?
இமா ஹெப்சியும் ஜோயலும் ஸ்கூல் செல்ல ஆரம்பித்ததால் பிசியாகவும் போரடித்தும் இருக்கிறேன்...
கேள்விக்கொத்துக்கள் எதுவும் தோன்றவில்லை...
பிரபா மலேசியாவிலிருந்து வந்துட்டீங்களா?
ப்ரித்தி பெயர் தேர்ந்தெடுத்து விட்டீர்களா?
அர்ஜுன் அம்மாவிற்கு வாழ்த்துக்கள்....
இன்னும் அட்டெண்டன்ஸ் கொடுக்கப் போகும் அனைத்து தோழிகளுக்கும் ஹாய்...

ஹாய்சேர்துக்கோங்கபா தோழிகல் அனைவரும் நலமா?என்னையும்

do fast mathi

ஹாய் தோழிகளே , எனக்கு ஒரு சந்தேகம். கமலாப்பழம் குளிர்ச்சி தன்மை உடையதா இல்லை சூடா? கமலாப்பழமும் சாதுக்கொடியும் ஒரே மாதிரியான சத்து உடையதா? அதாவது, கமலாபழதிலும் போலிக் ஆசிட் உள்ளதா? தெரிந்தவர்கள் தெளிவு படுத்தவும்.

ஹாய் வனிதா!
எப்பிடியிருக்கீங்க? யாழினிக்குட்டியும், குட்டிபையனும் நலமா?
என்ன பெயர் வைக்க முடிவு பண்ணியிருக்கீங்க? பாஸ்போர்ட் அப்ளை பண்ணியாச்சா?
இப்போதைக்கு சென்னை. சிரியாவிலிருந்து மாறிட்டீங்கன்னு தெரியும்.
ஆனா,எந்த நாட்டுக்கு போகபோறீங்கன்னு மறந்திட்டேன்.
உடம்பை கவனமாய் பார்த்துக்குங்க.

ஹாய் வனிதா!
எப்பிடியிருக்கீங்க? யாழினிக்குட்டியும், குட்டிபையனும் நலமா?
என்ன பெயர் வைக்க முடிவு பண்ணியிருக்கீங்க? பாஸ்போர்ட் அப்ளை பண்ணியாச்சா?
இப்போதைக்கு சென்னை. சிரியாவிலிருந்து மாறிட்டீங்கன்னு தெரியும்.
ஆனா,எந்த நாட்டுக்கு போகபோறீங்கன்னு மறந்திட்டேன்.
உடம்பை கவனமாய் பார்த்துக்குங்க.

இமா... நாங்க நலம். நீங்க செபா ஆன்ட்டி நலமா? எங்க ரொம்ப நாளா மெயிலே காணோம்....

யோகராணி... நேற்று அவசரமா பதிவு போட்டேன். இங்க இருக்க எல்லாரையும் கேட்டு பதிவு போட்டேன், லேப்டாப் பிரெச்சனையால பதிவு போட முடியாம படுத்திடுச்சு. நீங்க நலமா?

தேன்மொழி... ரொம்ப நாள் ஆயிடுச்சு பேசி. நாங்க நலம். நீங்க நலமா? யாழினி தாலாட்டு பாடும் அளவு வளரல இன்னும்...;) இப்போதைக்கு நம்ம கொஞ்சுர மாதிரி அவளும் கொஞ்சுறா....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மதி... ரொம்ப வேகமா தான் இருக்கீங்க. அதுகுள்ள பல இடங்களில் பதிவு பார்க்க முடியுதே.... :) மிக்க மகிழ்ச்சி. அரட்டை கூட்டத்தில் சேர்ந்துட்டீங்க, இனி பொழுது போவதே தெரியாது.

ரத்னா.... நீங்களும் எல்லா பக்கத்துலையும் இதே கேள்வியை கேட்டுகிட்டு சுத்தறீங்க.... யாரும் பதில் சொன்ன பாடில்லை. எனக்கு தெரிந்தால் சொல்லி இருப்பேன். இப்பொதைக்கு எனக்கு தெரிந்த பதில் இரன்டு பழங்கலுமே குளிர்ச்சி தான்,ஆனால் சளி பிடிக்கும் அளவு குளிர்ச்சி இல்லை. சிட்ரிக் ஆசிட் இரண்டிலுமே உள்ளது என்றே நினைக்கிறேன்.

சாய் கீதா.... நலமா இருக்கீங்களா? பேசி பல நாட்கள் ஆயிடுச்சு. நாங்க நலம். பையனுக்கு "சிவ குமரன்"னு பேர் வைக்க முடிவு பண்ணி இருக்கோம். பாஸ்போர்ட் இனி தான். இப்போ போக போறது மாலத்தீவு. இப்போதைக்கு போறதா இல்லை... அதனால் எதை பற்றியும் யோசிக்கல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்