halo,vanakkam...naan en kanavil palaapalam (jack fruit) kanavu kanden..athan payan enna? palaapalam saapiduremaatiri kanavu kanden..pls reply..
Nandri,
indrasuresh..
malaysia.
halo,vanakkam...naan en kanavil palaapalam (jack fruit) kanavu kanden..athan payan enna? palaapalam saapiduremaatiri kanavu kanden..pls reply..
Nandri,
indrasuresh..
malaysia.
கனவுகள்!
ஹாய் உமா!
ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது ,விதவிதமான கனவுகள் நம்மை ஆக்கிரமித்தது நினைவுக்கு வரும்.
வந்த கனவில் நடந்த நிகழ்வுகளை வைத்து, நமக்கு எது நிம்மதி தருதோ அந்த அர்த்தத்தில் எடுத்துக்கணும்.
அதை விட்டுட்டு கனவுகளை ஆராய ஆரம்பித்தால் குழப்பம்தான் மிஞ்சும்.
பலாப்பழம் சாப்பிட்டதுபோல் கனவு வந்ததா, சரி இனிப்பான பலாப்பழத்தினைப்போல், இனிப்பான செய்தி வரப்போறதா எடுத்துக்கலாம். இல்ல இனிமையான ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போறதா எடுக்குங்க. பலாப்பழத்தினைப்போல் இனிப்பான செய்தி வரவோ, அல்லது இனிமையான சம்பவம் உங்கள் வாழ்வில் நடக்கவோ என்னுடைய வாழ்த்துக்கள்!
(கனவுக்கு பலன் தெரியலங்கிறதை எப்பிடியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு???!!)
Sai Geethalakshmi
Rombe nandri..
கனவின் பலன்
கனவுகளுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லை. கடந்து போன நிகழ்ச்சிகள் நம் மூளையின் ஒரு ஓரத்தில் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த ஞாபகம்/நினைவுகள் தான் கனவாக வருகிறது.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கனவுகள்
ஆமினா சொன்னது சரிதான் நடைமுறை வாழ்க்கை வேறு கனவுகள் வேறு அதுமட்டுமல்ல மூட நம்பிக்கைகள் இன்னும் நம்மை விட்டு போகவில்லை சகுணம் பார்ப்பது விதவைகள்,பூனை எதிரே வந்தால் கெட்டது என்பதெல்லெம் ஒன்றுமே இல்லை. ஒருவரை சகுனம் என்று நினைத்தால் நாம் அவரின் மனதை காயப்படுத்துகிறோம் என்பதை உணருங்கள். நன்றி.
அன்புடன்
THAVAM
கனவின் பலன்கள்
இது போல் தான் என் அக்கா, கனவின் பலன்கள் என ஒரு புத்தகம் வாங்கினாள். கனவுகளுக்கு என்ன பலன் என இருக்கும் அதில்!
விலை 500!
ஆன்னால் அதில் உள்ளது போல் எதுவும் நடக்கவில்லை. அந்த புக்கை அவளே தூக்கி போட்டுட்டா!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கனவுகள்
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், என்னை பொறுத்த வரை, எக்ஸாம் ரிசல்ட் மட்டும் வெளிவரதுக்கு முன்னாடியே என் கனவில் வந்திடும், எல்லா எக்ஸாமுமே அப்படிதான். நான் எதாவது எக்ஸாம் எழுதினா ரிஸ்ல்ட் எப்போன்னு பார்க்கறதே இல்ல, ஏன்னா அது தான் கனவு வந்த பிறகு தான் செக் பண்ணுவேன், கனவு வந்த ஒரு வாரத்தில் ரிசல்ட் வந்திடும்
மத்தபடி பெரிய நம்பிக்கை இல்லை, ஆனா மிக மிக கெட்ட கனவா வந்தால் அதற்கு மேல் தூங்கமாட்டேன்,
அன்புடன்
பவித்ரா
கனவு
கனவு ங்கறது உள்மனசோட அதிக பட்ச ஆசை னு கூட மனநல ஆராய்ச்சியாளர்கள் சொல்வாங்க..நம்ம மனசில் எப்பவோ..அது சின்ன பிள்ளையா இருந்தபோது கூட ஒரு கணத்தில் தோன்றி மறஞ்சுருக்க கூடிய ஒரு சம்பவமா நம் மனசில் போயி உட்கார்ந்து இருக்கலாம்..அது நமக்கே தெரியாமல் நம் ஆழ்மனசில் அமைதியா பதிஞ்சுருக்கும்..அது தான் ஏதோ ஒரு நாளில் கனவு மாதிரி வருது..கனவு கூட நாமளா பதிப்பிச்சுக்கும் ஒரு திரைப்படம்..நீங்க சீரியஸா கேட்கிறிங்களா..அல்லது பிராக்டிகலா அறிஞ்சுக்க நினைக்கிரிங்கலானு தெரியல..பிரக்டிகலா நான் யோசிச்சது..நீங்க எப்போவோ என்னைக்கோ பலாபழம் யாரோ சாப்பிடுவதை பார்த்துருக்கலாம்..அல்லது பலா குலைகளை ரசிச்சுருக்கலாம்..தெருவில் விக்கும் பலா சுளைகளை கணநேரம் விரும்பிருக்கலம்..அது உங்களுக்கே தெரிய வாய்ப்பில்லை..அது கூட ஆழ்மனசில் பதிஞ்சு கனவில் இப்படி வந்துருக்கலாம்..be practical..நாளைக்கு மழையில் ஆட்டம் போடுறமாதிரி கூட கனா வரலாம்...be ரெடி...கனவையும் என்ஜாய் பண்ணவேண்டியது தான்..எதுக்கு உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு..என்ன சரிதானே...Be Happy!!
Madurai Always Rocks...
கனவுகள் யாருப்பா அது கனவை
கனவுகள்
யாருப்பா அது கனவை பத்தி பதிவு போட்டது.
என் கனவுல எப்பவுமே கோயில் இல்லை யானைதான் கனவுல வரும்.
அதுவும் யானை என்னை துரத்துரமாதிரிதான் கனவு வரும்.
என்ன பலனு எனக்கு தெரியாது. யாராவது தெரிந்தால் சொல்லுங்கலேன்.
மீனா
.
மீனா
கனவுகள்
பவி
எனக்கும் அப்படி தான் கனவு வரும். பரிச்சை பற்றியே நினைப்புகள் இருப்பதால் பஸ் மிஸ் பன்ற மாறி!,பரிச்சையை எழுத அனுமதிக்காத மாறி!,மறுபடியும் என் பள்ளிக்கு போய்ட்டு என் டீச்சர்கிட்ட அடிவாங்குறமாறி! வரும்.
பரிச்சை முடிந்ததும் பெயில் ஆகுற மாறி!,
இப்படி முட்டாள் தனமா வரும். ஆனால் இதையெல்லாம் நான் கண்டுக்கொள்வதில்லை. ஏனென்றால் அதை பற்றிய நினைப்புகள் நம் நினைத்துக்கொண்டே இருப்பதால் தான் இத்தகைய கனவுகள் வருகிறது என தெரியும்.
ஆனாலும் எங்கள் வீட்டில் எல்லாரும் கனவை நம்புகிறார்கள் (பழமைவாதிகள்).
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
hai meena
மீனா யானை என்றால் லக்ஷ்மி தேவி என்பார்கள். செல்வமே வுங்களை துரத்துகிறது மீனா . மீனா இதெல்லாம் நாமே வுருவாக்கிகொள்வதுதான்.எதையுமே நாம் possitivaga எடுத்துக்கொண்டால் நம்மக்குதான் நல்லது. அது தான் அப்படி சொன்னேன்.