ஹையா, இனி நானும் உங்களில் ஒருத்தி

வணக்கம் தோழிகளே, என் பெயர் நித்யா, எனது ஊர் கோவை. தற்பொளுது UAE-ல் வசிக்கிரேன். நான் புதிதாக இனைந்துள்ளேன் என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்றுகொள்வீர்களா?

நித்யா.... ஏனுங்க கோயமுத்தூருங்களா???!!! நல்லா இருக்கீகளா??? என் பேரு வனிதாங்க. நல்லா இருக்கேனுங்க. அறுசுவை'கு வருக வருக. நிச்சயம் நாங்கள் எல்லோரும் உங்க தோழி தான். இந்த பதிவை அரட்டை பக்கத்தில் போட்டிருந்தீங்கன்னா இன்நேரம் பதில்களும் தோழிகளும் நிறைய கிடைச்சிருப்பாங்க. சீக்கிரம் அரட்டை பக்கம் வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் நித்யா

வணக்கம் வந்தனம் நமஸ்கார் & வெல்கம் டு அறுசுவை.காம்..... உங்க ஊர் கோயம்புத்தூரா? என் ஃப்ரெண்ட் ப்ரியா கூட உங்க ஊர்ல தான் இருக்கா!! பொங்கல் நல்லா கொண்டாடியாச்சா? அரட்டை பக்கம் வாங்க எல்லோரும் அங்க தான் இருக்காங்க.....

அநேக அன்புடன்
ஜெயந்தி

வாங்க நித்தியா, உங்களை அறுசுவையில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.இங்கே வந்து விட்டீர்கள் , இனி உங்களுக்கு நாங்கள் எல்லாம் தோழிகள் தான்.வனிதா சொன்ன மாதிரி அரட்டை பக்கம் வாங்க நன்றாக அரட்டை அடிப்போம்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நித்யா, எப்படி இருக்கீங்க? நான் கூட கோயம்பத்தூர் தான். உங்க வீட்டில் பொங்கல் பொங்கிடுச்சா?

மேலும் சில பதிவுகள்